ருத்ராட்சம் SSRன் Thread

ருத்ராட்சம் :

ருத்ராட்சத்தை பற்றிய தெளிவு இன்னும் மக்களிடம் இல்லை என்பதே உண்மை, அதன் காரணமாக ருத்ராட்சத்தை பற்றிய SSRன் பதிவை வெளியீடுகின்றேன்..


பொதுவாக ருத்ராட்சத்துக்கு மனதை அடக்கி, மனக் கட்டுப்பாட்டை வளர்க்கும் அபூர்வ ஆற்றல் இருக்கிறது.

இதை அணிபவர்கள், இதனை உணர்வுப்பூர்வமாக அறியலாம்.

ருத்ராட்சத்துக்கு நினைவு ஆற்றலை அதிகரிக்க செய்யும் அற்புத சக்தியும் சுய ஆற்றலை பெருக்கிக்கொள்ளும் திறனும் உண்டு.

ருத்ராட்சத்துக்கு இருக்கும் இந்த சக்தியை சிலர் உடனடியாக உணரலாம். சிலர் படிப்படியாக உணரலாம்.

ருத்ராட்சம், இயற்கையாகவே ஒரு முகம் முதல் 21 முகங்களைக் கொண்டதாக இருக்கும்.

ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு,

ருத்ராட்ச முகங்களுக்கு ஏற்ப தன்மை மாறுபடுமே தவிர கிடைக்கும் பலன்கள் எல்லாம் ஒன்று தான்,

வேறு எந்த ஒரு விதைக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு ருத்ராட்ச விதைக்கு உண்டு. துளசி, தாமரை விதை, கருங்காலி, ஸ்படிக மாலைகள் நாம் துளையிட்ட பிறகே அதை கோர்த்து நாம் அணிந்து கொள்ள முடியும்.

ஆனால் ருத்ராட்சத்தை மனிதர்களால் எளிதில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இயற்கையாகவே இறைவனின் அருளால் ருத்ராட்சத்தில் நடுவே துளையுடன் இருக்கிறது.

பல்வேறு அற்புத பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும் ருத்ராட்சம் பல வியாதிகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

ருத்திராட்சம் அணிவது மனதுக்கு அமைதியை அளிக்கும்,

ருத்திராட்சம் தீயவை நம்மை அண்டாமல் கவசமாக காக்கும்,

தொடர்ந்து ருத்திராட்சம் அணிவதன் மூலம் நல்லதிர்வுகள் அதிகரிக்கும்.

முகங்கள் அடிப்படையில் பலன்கள் பற்றி பார்க்கலாம்,

ஒரு முகம்:-

அனைத்து ருத்ராட்சங்களிலும் மேலானது  ஒரு முக ருத்ராட்சம் இது சிவபெருமானின் முகமாகக கருதப்படுகிறது,
இதனை அணிவதன் மூலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், சூரிய பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும் அரசாங்க ஆதரவும், செல்வ வளமும் அடைய இயலும் எனவும் நம்பப்படுகின்றது.

இரண்டு முகம்:-

இரண்டு முகம் அர்த்தநாரிஸ்வர சொரூபம், இதை அணிந்தால் சிவனையும், சக்தியையும், பூஜை செய்த பலன் கிடைக்கும்.

சிவசக்தி ஸ்வரூபமாக விளங்கும் இதனை அணிவதன் மூலம் பாவங்கள் அழியும். மேலும் தேவியின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

இரண்டு என்பது சந்திரபகவானைக் குறிக்கும்.

இதனை அணிந்தால், சந்திரனின் அருளை பெறலாம்.

மூன்று முகம்:-

மூன்று முகம் ருத்ராட்சத்திற்கு அக்னிதேவன் அதிபதி. இந்த ருத்ராட்சம் ஸ்ரீ ஹத்தியா தோஷத்தை நீக்கும்.

மும்மூர்த்திகளையும் பூஜை செய்த பலன் கிடைக்கும் பெண்கள் அவர்களின் தாலியில் அணிந்தால் பூவும்,பொட்டும் நிலைத்திருக்கும்.

நான்கு முகம்:

நான்கு முக ருத்ராட்சமானது, நான்முகன் பிரம்மன் அம்சமாகக் கருதப்படுகின்றது

ஞாபசக்தியை பெருக்கும் சர்வஹத்தியா தோஷம் நீங்கு

இதனை அணிவதால் நம்முடைய புண்ணியங்கள் இரட்டிப்பாகும்.
இது ராகு பகவானின் அருளை வழங்க வல்லது மேலும் அவரால் ஏற்படும் தோஷங்களையும் நீக்க வல்லது.

ஐந்து முகம்:

ஐந்து முகம் ருத்ராட்சத்திற்கு அதிபதி காலாக்கினி ருத்திரன்.
ஐந்து முகம் ருத்ராட்சம் புத பகவானின் அருளை, பரிபூரணமாக வழங்கும் சக்தி கொண்டது.

ஐந்து முகம் ருத்ராட்சம் அனைத்து பாவங்களையும் அழிக்கும்.  32 கொட்டை கொண்ட மாலையை அணிந்தால் விரோதி கூட மரியாதை செலுத்துவான்.

ஆறு முகம்:

ஆறு முகம் முருகனின் அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.

இதனை அணிந்து கொள்வதன் மூலம், எளிதாக முருகனின் ஆசிர்வாதத்தினைப் பெற இயலும். எதிரிகளை எளிதாக வெல்லலாம் ஹிஸ்டீரியா போன்ற வியாதிகளை வராமல் காக்கும். மாணவர்கள் அணிந்தால் ஞாபசக்தி பெருகும் கண்திருஷ்டியைப் போக்கும்.

ஏழு முகம்:

ஏழு முகம் ருத்ராட்சம் இதற்கு அணங்கம் என்று பெயர் மன்மதனின் அம்சமாக பார்க்கப்படுகின்றது.

இது நாம் அறியாமல் செய்த முன் ஜென்ம வினைகளை அறுக்க வல்லது. இதனை அணிவதால் கேதுவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

எட்டு முகம்:-

எட்டு முகம் கணபதியின் அம்சம்.

கணேசனை பூஜை செய்த பலன் கிடைக்கும்.

இதனை அணிவதன் மூலம், சனீஸ்வரனின் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். அவருடைய ஆசியும் உண்டாகும்.

பஞ்ச மகா பாதகத்தை அழிக்கும். மன தைரியம் உண்டாக்கும்.

ஒன்பது முகம்:

பைரவரின் வடிவம் என்பர். பிரம்மஹத்தி தோஷம், இதனை அணிவதன் மூலம் நீங்கும்.

செவ்வாய் பகவானின் அருளும், ஆசியும் உண்டாகும். காவல்துறை மற்றும் இராணுவத்தில் பணிபுரிபவர்கள் அல்லது பணிபுரிய விரும்புபவர்கள் இதனை, அணிய அதிர்ஷ்டம் உண்டாகும்.

பத்து முகம்:-

பத்து முக ருத்ராட்சத்திற்கு ஜனார்த்தனம் என்று பெயர்.

இது, மகா விஷ்ணுவின் அம்சமாக உள்ளது. இதனை அணிவதால் அனைத்துத் தோஷங்களும் நீங்கும்.

நோய்கள் குணமாகும். திருஷ்டி முதலானவற்றால் ஏற்படும் பாதிப்புகள் தீரும். இதனை அணிவதம் மூலமும், சூரிய பகவானின் ஆசியைப் பெறலாம்.

பதினோரு முகம்:

இது ருத்திர வடிவம்.
இது சந்திரனுக்கு உரியது என்பதால் அவருடைய ஆசிர்வாதத்தினை வழங்கும் அதே போல் பல யாகங்கள் செய்தப் பலனையும் வழங்கும்.

பன்னிரண்டு முகம்:

இதனை, துவாதச ஆதித்த ரூபம் இதனை அணிவதால்,பயம் விலகும். புண்ணியங்களை வழங்கும். குரு பகவானின் ஆசியை அருளும்.

பதிமூன்று முகம்:

பதிமூன்று முக ருத்ராட்சத்திற்கு அதிபதிகள் கார்த்திகேயன், காமதேவன், இதை அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

பதினான்கு முகம்:

பதினான்கு முக ருத்ராட்சம் பரமசிவனுக்கு நிகரானது.

பதினைந்து முகம்:

பதினைந்து முக ருத்ராட்சம் கடவுளின் மேல் பக்தியை உண்டாக்கும் சக்தி இதற்கு உள்ளது.

பதினாறு முகம்:

பதினாறு முக ருத்ராட்சம் தந்திரம் செய்பவர்களுக்கு பயன் தரும்.

பதினேழு முகம்:

பதினேழு முக ருத்ராட்சத்திற்கு அதிபதி விஸ்வகர்மா. இதை அணிந்தால் சகல வசதி கிடைக்கும்.

பதினெட்டு முகம்:

பதினெட்டுமுக ருத்ராட்சத்திற்கு அதிபதி பூதேவி

பத்தொன்பது முகம்:

பத்தொன்பதுமுக ருத்ராட்சம் அணிவதால் ஞானம் பெருகும் சாந்திக் கிடைக்கும்

இருபது முகம்:

இருபதுமுக ருத்ராட்சத்திற்கு அதிபதிகள் பிரம்ம தேவன்,சரஸ்வதி இதை அணிவதால் ஞானம் பெருகும் மனதிற்கு சாந்தி தரும்.

ருத்திராட்சங்களில், ஒரு முகம், 14 முகம் மற்றும் 21 முக ருத்திராட்சம் கிடைப்பது அரிதான ஒன்றாகும்.

ஒரு ருத்திராட்சம் அணிவதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது நாம் எந்த நிலையிலும் ருத்திராஷத்தை பயன்படுத்தலாம்.

இதனால் எவ்விதத்திலும் ருத்ராட்சத்திற்கு சக்தி குறையாது.

108 அல்லது 54  கொண்ட மாலையை அணிந்தால் 'அசுவமேத யாகம்' செய்த புண்ணியம் உண்டாகும் என்கிறது சாஸ்திர நூல்.

நாம் அணியும் ருத்திராட்சங்களின் முகங்களைப் பொறுத்து நமக்குக் கிடைக்கும் நன்மைகளும் மாறுபடும்.

புண்ணிய நதிகளில் நீராடிய நன்மை கிட்டும்.

தீய சக்திகளிலிருந்து நம்மை காப்பாற்றும்.
நம் உடல் பிணிகளைப் போக்கும்.
மோட்சத்தை அருளும்.
சக்தி வழங்கும்.
லட்சுமி கடாட்சம் கிட்டும்.
புத்திர பாக்கியம் உண்டாகும். ருத்திராட்சத்தைப் பார்ப்பது மகா புண்ணியம். தொட்டால் கோடி புண்ணியம் என்பார்கள். அணிந்துகொண்டால் பல கோடி புண்ணியம்.

சிவபெருமானுக்கு அபிஷேகிக்க உகந்த பொருள்களில் ஒன்றாக கருதப்படுவது ருத்திராட்சம் அபிஷேகங்களில் உயர்ந்தது ருத்ராட்ச அபிஷேகம் என்கின்றன ஆகமங்கள்.

108 முறை மகா ருத்ர அபிஷேகம் செய்யும் பலனையும், பல கோடி முறை செய்யும் ருத்ர ஜப பலனையும் ஒருங்கே அளிக்க வல்லது ருத்திராட்ச அபிஷேகம்.

அதேநேரம், ருத்ராட்ச அபிஷேகத்தை வீடுகளில் செய்யக் கூடாது செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றன ஆகமங்கள்.

இத்தகைய சிறப்புடைய ருத்திராட்ச அபிஷேகத்தில் பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்து உரிய சங்கல்பத்துடன் அபிஷேக ஆராதனை செய்து கயிலாய வாத்தியம், இசைத்து திருமுறைகளை ஓதி சிவ பிரசாதமாக,
அபிஷேகித்து பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம் அனுப்பிவைக்கப்படும் இது உங்கள் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும் என்று நிச்சயமாய் நம்பலாம்.

ஐந்து முகம் ருத்ராட்சம் அணிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உங்கள் முழு விலாசம் DMல் பகிரவும்

நன்றி வணக்கம் 🙏

#நோக்கமசிவமயம்
#சைவசமயம்
#SSRThreads

நன்றி SSR Threads..

வெளியீடு : செந்தமிழ் தென்றல்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads