வெற்றியின் ரகசியம் - செந்தமிழ் தென்றல்


வணக்கம் நண்பர்களே,

    3500 பார்வையாளர்களை கடந்தது செந்தமிழ் தென்றல் வலை பக்கம்..தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்களுக்கு மிக்க நன்றி...


   

பசியோடு பயணிக்கும் போது தோல்விகளை சுவைத்து தொடர்ந்து முன்னேறிச் கொண்டிருக்கும் வெற்றியை பற்றியும் அதன் ரகசியம் பற்றியும் சிறு‌ பதிவு...


தோல்வி:

     வெற்றி பற்றி பதிவு என தொடங்கி தோல்விக்கு முதலிடம் கொடுத்திருப்பதை கண்டு குழப்பம் அடைய வேண்டாம்,  தோல்வியை முன்னிலை படுத்தி இருப்பதன் முக்கியத்துவம் வெற்றியின் சுகத்தை அனுபவிக்க தோல்வி என்ற தடைக்கல் வேண்டும்...

   தோல்வி அடைந்திராமல் கிடைக்கும் வெற்றி முழுமை பெறாமலும், பெற்ற வெற்றியின் சுவை தெரியாமலும் போகும்...

   வெற்றியின் முதல் படி தோல்வி என்பார்கள், தோல்வி படிகளை கடந்திராமல் வெற்றி முடியை அடையமுடியாது...

  தோல்வியாவது தொட்டு பார்க்க வேண்டுமானால் முயற்சி முக்கியமாகிறது..‌

"சோதனைகளை மீறிய சாதனையில்தான் மகிழ்ச்சி இருக்கிறது"
            -அப்துல் கலாம்


முயற்சி :

    வெற்றியை அடைய முதல் படி தோல்வி என்றால் முதல் படியில் கால் ஊன்றி முயற்சி இன்றியமையாததாகும்..

    தோல்வியையாவது அடைய வேண்டும் என்றால் முயற்சி முக்கியமாகிறது..முயற்சி செய்யாமல் தோல்வியே கிட்டாது...

  தொடர்ந்து முயற்சி செய்து தோல்வி அடையும் ஒருவன் ஒவ்வொரு நாளும் அனுபவத்தை பெற்று கொண்டே இருக்கிறான்....

"பயந்தால் வரலாறு படைக்க முடியாது"
                -அப்துல் கலாம்.


"எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு, எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு, எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு"
       -சுப்பிரமணிய பாரதியார்


அனுபவம் :

    வெற்றியின் ரகசியம் அனுபவமாகும்‌, தோல்விகளால் கிடைக்கும் அனுபவம் வெற்றியை அடைவதோடு வெற்றியை தன்வசம் தக்க வைக்கவும் முடியும்..

   ஒருவர் வளர்ச்சியில் பொறாமை கொள்ளாமல் தன்னால் முடியும் வரை முயற்சி செய்து தோல்வியையும் வெற்றியையாலும் கிடைக்கும் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்தாகொண்டே வெற்றியோடு பயணம் செய்ய வேண்டும்...

"செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்"
            
            -நெல்சன் மண்டேலா


வெற்றியும் அதன் ரகசியமும் :

     
     முயற்சி, தோல்வி, அனுபவம் என்ற அனைத்தின் கலவையில் கிடைக்கும் வெற்றிக்கு கிடைக்கும் மரியாதையே தனி தான்..

    ஒருவரின் வெற்றி அவரின் வளர்ச்சியை காட்டுகிறது, உளியின் தாங்கும் கற்களே சிலை ஆவதை போல், தோல்வியால் அடிபட்டு வெற்றி கண்டவர் மதிக்கப்படுகின்ளார்..

"சரியான உற்சாகத்தோடு வேலை செய்யத் தொடங்கினால் வெற்றி நிச்சியம்"
        -சுவாமி விவேகானந்தர்


1.முயற்சி செய்வோம்.

2.தோல்வியால் துவளாமல் முயற்சி செய்வோம்.

3.தோல்வியால் கிடைத்த அனுபவத்தை கற்போம்.

4.எதிர்மறையான அனுபவங்களை நேர்மறையாக மாற்றுவோம்.

5.வெற்றியை அடையும் வரை கற்போம்.

6.வெற்றியை அடைந்தபின் கற்பிப்போம்.

7.வெற்றியை தலைக்கு ஏற்றி தலை கணத்தை தகர்ப்போம்...

தொடர்ந்து முயற்சிப்போம் தோல்வியால் துவண்டு போகாமல் முயல்வோம் வெற்றியை பெறுவோம்..


  
நன்றி 🙏..


தயாரிப்பு : தமிழரசன் சண்முகம்
   

7 கருத்துகள்

கருத்துரையிடுக
புதியது பழையவை

Google auto Ads