வணக்கம் நண்பர்களே,
வந்தாரை வாழவைக்கும் சென்னை என்றழைக்கப்படும் மதராஸ்ஸின் 382 ஆம் ஆண்டை எடுத்து வைத்திருப்பதை போற்றும் வகையிலான சிறப்பு பதிவு...
மெட்ராஸ் தினம் காரணம்:
தமிழ்நாட்டின் தலைநகரான மெட்ராஸ் 1522ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் இருந்த போது தற்போது சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸில் ஒரு கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக ஒரு துறைமுகத்தை நிறுவி அதனை மதராஸ் என அழைத்து வந்தனர்...
பின் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் 1639ம் ஆண்டு தற்போது உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள பகுதியில் உள்ள நிலங்களை வாங்கி அந்த இடத்தை மெட்ராஸ் எனவும் பெயர் சூட்டி வாணிபம் செய்ய சிறந்த இடமாக ஆங்கிலேய அரசு அறிவித்தது....
சென்னப்ப நாயக்கர் வழங்கிய நிலத்திலையே செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது....அதன் காரணத்தாலே சென்னை பட்டினம் உருவாக்கப்பட்டது...
ஆகஸ்டு மாதம் 22ம் தேதி 1639ம் ஆண்டு முதன் முதலில் மதராஸ் நகரம் உருவானதாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக தற்போது உள்ள சென்னையை சென்னை தினம் அல்லது மதராஸ் தினம் என அனைவரும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது...
சென்னை நகரம் உருவாக்கப்பட்டு 382 ஆண்டுகள் நிறைவடைந்து இன்றுடன்...
தற்போது உள்ள பெரும் நகரமாக உள்ள சென்னை ஆங்கிலேய காலத்தில் சிறு சிறு கிராமங்களாகவே இருந்தது...பின் ஆங்கிலேய அரசு வாணிப நோக்கத்திற்காக மதராஸ் பகுதியை 1688ம் ஆண்டு மதராஸ் பட்டினத்தை தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக அறிவித்தது அப்போதைய ஆங்கிலேய அரசு....
மதராஸ் பட்டினம்-தலைநகரம் :
1639ம் ஆண்டு மதராஸ் பட்டினம் அறிவிக்கப்பட்டது ஆங்கிலேய அரசால், 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்ததை தொடர்ந்து அந்த ஆண்டே மதராஸ் தமிழகத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது...
மதராஸபட்டினம் சென்னை என்று 1996ம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது, இன்னும் கிராமங்களில் மெட்ராஸ்க்கு போயிட்டு வரேன், மெட்ராஸ்க்கு பையன் வேலைக்கு போறான், மெட்ராஸ்ல பசங்க படிச்சிட்டு இருக்காங்க, மெட்ராஸ்ஸை சுத்தி பார்க்க போறேன்னு இன்னும் பேச்சு வாக்கிலே உள்ளது...
சென்னை :
சென்னையே தற்போது தலைநகராக உள்ளது....சென்னை மாவட்டம் 16 சட்டமன்ற தொகுதிகளையும், 3 பாராளுமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியது...ஒரு மாநகராட்சி, 15 மண்டலம், 200 வார்டுகள் என உள்ளாட்சி அமைப்புகளை கொண்டது சென்னை...
தமிழகத்தின் தொழில் தொடங்க சிறந்த இடமாக விளங்கும் சென்னையில் தற்போது பெரிய தொழிற்சாலைகளும், பல தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பையும் பெற்றுள்ளது...
"வந்தாரை வாழவைக்கும் சென்னை" என்ற கூற்றுக்கு ஏற்றார் போல் வந்தாரை உழைப்புக்கு ஏற்றவாறு வாழவைக்கும் சென்னை...
மக்கள் சாதி, மதம் இனம் என அனைத்தும் மறந்து ஒற்றுமையாக வாழும் பெரும் நகரம் சென்னை....
பல அடுக்குமாடி கட்டிடங்கள் மக்கள், நெருக்கமான வாகனங்கள், மக்கள் வெள்ளம் என நாள் முழுவதும், பரபரப்பாக காட்டி அளிக்கும் சிங்கார சென்னை....ஆட்சியாளர்களின் பல மாறுபட்ட சிந்தனைகளால் சென்னை மாநகரம் பொலிவு பெற்றது....
இன்றும் வெளியூரிலிருந்து சென்னை வருவோர் பேருந்தில் ஜன்னலில் சென்னையின் கட்டட அமைப்புகளை கண்டவாரே செல்கின்றனர்....
இன்றைய தினம் சென்னை மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக ட்வீட்டரில் #MadrasDay2021 என்ற ஹேஸ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்...
நன்றி,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்
செந்தமிழ் தென்றல் : Click Here
செந்தமிழ் Tech : Click Here