வனதுர்கை கோவில் பயணத்தின் என் ஆனந்த அனுபவங்கள் உங்களுக்கு ஒரு சிறு பதிவாக...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தேவதானம் பேட்டை எனும் கிராமத்தில் உள்ள கரியமலை பற்றியே இந்த பதிவு...
அழகான மலையில் அற்புத கோவில் இருப்பதை நண்பர் ஒருவர் மூலம் அறிந்துகொண்டேன்..சமூக வலைதளத்தில் வனதுர்கை மற்றும் சித்தர்கள் பற்றி தெரிந்துகொண்டேன்..
அதன் பின் அந்த கோவில் மீது எனக்கு ஆர்வம் அதிகமானதால், நாங்களும் அங்க செல்ல திட்டமிட்டோம்...
12 நண்பர்களுடன் ஒரு அமாவாசை அன்று வனதுர்கை அம்மனை வழிபட பயணித்தோம்...
உயர்ந்த மலையும் அடர்ந்த காடுமாய் பயணத்தை தொடர்ந்தோம்...சுமார் 2.00 மணிநேரம் இந்த கடினமான மலை பயணம் தொடர்ந்தது..
போகும் வழியேங்கும் மலைகளையும் அதன் அழகையும் ரசித்தே சென்றோம்..மலைகள், பாறைகள், சுனை நீர் என்று எங்கள் ரசிப்புக்கு தீனி போட்டது....
கடினமான இந்த பயணத்தில் வனதுர்கை கோவிலை அடைந்தோம், சித்தர் வாழ்ந்ததாக சொல்லப்பட்ட அந்த இடத்தில் ஒரு அமைதியும் ஒருவித படபடப்பாகவும் உணர்ந்தோம்...
ராகுகாலத்தில் பூஜை நடக்கும் அந்த நேரத்தில் தான் சித்தர்கள் இங்கு வழிபடுவதாக நம்பப்படுகிறது...
இந்த வன துர்கை அம்மன் கோவிலில் ஒரு வித்தியாசமான நடைமுறை பின்பற்றப்படுகிறது. பக்தர்கள் தங்களின் கோரிக்கையை மனதில் வேண்டி இந்த அம்மன் விக்கிரகத்தின் தலையின் மீது ஒரு எலுமிச்சை பழத்தை வைத்தால், அது அம்மன் விக்கிரகத்திற்கு வலப்பக்கம் விழுந்தால், வேண்டியவர்களின் எண்ணம் உடனே பலிக்கும் என்றும், அது இடப்புறம் விழுந்தால் அந்த காரியம் நிறைவேற சிறிது காலம் ஆகும் எனவும், ஒரு வேளை அந்த எலுமிச்சை பழம் சிலைக்கு பின்புறமாக விழுந்தால் பக்தர்களின் அந்த கோரிக்கை நிறைவேறாது என இந்த வனதுர்க்கை அம்மன் உணர்த்துவதாக கூறப்படுகிறது...
நீங்களும் முடிந்தால் இந்த வனதுர்கை அம்மனை தரிசிக்கவும் சித்தர்கள் வாழ்வதாக சொல்லும் இந்த மலைக்கு சென்று வாருங்கள்..
உங்களுக்காக மலையில் வழிகாட்ட ஒரு பைரவர் உடன் வருவார்...எங்களுக்கும் பைரவர் காட்சி தந்தார்..
நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம் 🙏...
தயாரிப்பு : தமிழரசன்
அருமை 👌
பதிலளிநீக்குநன்றி புரோ..💕
நீக்கு