வணக்கம் நண்பர்களே,
கடலூர் மாவட்டம் மற்றும் அதன் பெருமையை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
பெயர் காரணம் :
1.கடலூர் முன்காலத்தில் கூடலூர் என்றும் அழைக்கப்பட்டது, ஏனென்றால் தென்பெண்ணை ஆறும் கெடிலம் அறும் ஒரே இடத்தில் கூடுவதால் கூடலூர் என்று அழைக்கப்பட்டது பின் அது மருவி கடலூர் என மாறியது...
2.ஒரு காலத்தில் இவ்வூர் இருக்கும் இடத்தில் கடலாக இருந்ததால், பின்பு அந்த கடல் நீர் வற்றி நிலபரப்பாக மாறியதாலும் கடலூர் என்றும் அழைக்கப்பட்டது.
கடலூர் 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 683 கிராமங்கள், மக்கள்தொகை 2011ன் கணக்கீட்டின் படி 1,73,636 பேர்களை உள்ளடக்கிய மாவட்டம்.
வாகன பதிவு எண் TN 31 & TN 91
கடலூர் சோழநாடு & தென் ஆற்காடு என்றும் அழைக்கப்பட்டது...
ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்நாட்டின் தலைநகராக இருந்தது கடலூர் மாவட்டம். புனித டேவிட் கோட்டை தலைமையாக கொண்டு ஆட்சி நடத்தப்பட்டது என்பது வரலாறு
கடல்:
கடல் மாவட்டத்தின் பெயரிலே பெருமை பெற்றது..கடலூர் வெள்ளி கடற்கரையை கொண்டுள்ளதால் கடலூர் என பெயர் வர காரணமானது, வெள்ளி கடற்கரை கடலூர் நகரத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் தேவனாம்பட்டினம் எனும் ஊரில் அமைந்துள்ளது, இதனாலே இயற்கைக்கு மிக பிடித்த மாவட்டம் ஆனது கடலூர்.
சோழர் காலத்தில் இந்த கடல் வழியே வணிகம் நடைபெற்றது என்பது வரலாறு.
கடலூர் முக்கிய நகரங்கள் : பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாச்சலம்,புவனகிரி காட்டுமான்னார்கோவில், குறிஞ்சிப்பாடி என முக்கிய ஊர்களை கொண்ட மாவட்டம் கடலூர்.
திருக்கோயில்கள் :
1.கடலூர் திருப்பாதிரிப்புலியூர் - பாடலீஸ்வரர் திருக்கோவில். Google Map Link
2.திருவந்திபுரம் - தேவ நாதசுவாமி திருக்கோவில். Google Map Link
3.சிதம்பரம் - நடராஜர் திருக்கோவில். தில்லை நடராஜர் கோயில் Google Map Link
4.வடலூர் - வள்ளலார் சுத்த சத்திய ஞானசபை Google Map Link
5.பண்ருட்டி திருவதிகை - வீரட்டானேசுவரர் திருக்கோயில் Google Map Link
6.விருதகிரீஸ்வரர் திருக்கோயில் - விருத்தாச்சலம்
7.சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், மேல்புவனகிரி
8.தில்லைகாளி திருக்கோயில் சிதம்பரம்.
9.சிஷ்டகுருநாதர்சுவாமி - திருத்துறையூர் - பண்ருட்டி சிஸ்ட குருநாதர் கோவில் Google Map Link
என முக்கிய வரலாற்று சிறப்புமிக்க திரு தளங்களை கொண்ட மாவட்டம்..
மாவட்டத்தின் சிறப்புகள் :
1.நெய்வேலி அனல்மின் நிலையம்
2.நெல்லிகுப்பம் சக்கரை ஆலை
3.கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள்
4.வடலூர் வள்ளலார் திருச்சபையும் அணையா விளக்கும்.
5.பிச்சாவரம் சதுப்புநில காடுகள்
6.புனித டேவிட் கோட்டை
7.வீராணம் ஏரி
8.தென்பெண்ணை ஆறு
9.அண்ணாமலை பல்கலைக்கழகம்
10.வெள்ளி கடற்கரை
11.பண்ருட்டி பலாபழம், முந்திரி
12.சிதம்பரம் நடராசர் கோவில்
13.நெய்வேலி பயண்பாடில்லா விமான ஓடுதளம்
14.கடலூர் மத்திய சிறைச்சாலை
15.குட் எர்த் கப்பல் கட்டுமான தொழிற்சாலை
16.பண்ருட்டி தர்கா
கடலூரில் பிறந்த மகான்கள் :
1.ராமலிங்க சுவாமிகள் பிறந்த மருதூர்.
2.அப்பர் திருஞானசம்பந்தர் பிறந்த திருவாமூர் - பண்ருட்டி
3.ராகவேந்திர சுவாமிகள் பிறந்த புவனகிரி
4.மகா அவதார் பாபாஜி - பரங்கிப்பேட்டை
கடலூரில் பிறந்த பிரபலங்கள் :
1.எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி யார்
2.ஜெயகாந்தன் - கதாசிரியர்
3.வெ.வைத்தியலிங்கம் - Ex.CM pondy
4.காடுவேட்டி குரு - வன்னியர் சங்கம்
5.கீ.விரமணி - திராவிட கழகம்
6.சுப்பராயலு ரெட்டியார் - மதராஸ்
மாகாணத்தின் முதல் முதலமைச்சர்
7.தங்கர் பச்சான் - திரைப்பட இயக்குனர்
8.MRK.பன்னீர் செல்வம் - திமுக
9.எம்.சி.சம்பத் - அதிமுக
10.பண்ருட்டி ராமச்சந்திரன்
சுற்றுலா தலங்கள் :
1.சிதம்பரம் நடராஜர் கோயில்
2.பிச்சாவரம் சதுப்பு நிலகாடுகள்
3.வெள்ளி கடற்கரை
4.பாடலீஸவரர் திருக்கோவில்
பயிரிடப்படும் விவசாய பயிர்கள்:
கரும்பு, கொய்யா, நெல், கத்தரிக்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய், வெண்டைக்காய், தக்காளி, கொத்தவரங்காய், கம்பு, கேழ்வரகு, சவுக்கு, காலிபிளவர், முட்டைகோஸ் போன்ற அனைத்து பயிர்களும் உற்பத்தி செய்ய என்ற நிலப்பரப்பாக கடலூர் அமைந்துள்ளது..
பண்ருட்டி காய்கறி மண்டி மிக பழமையான மற்றும் பெரிய மார்கெட்டாகவும் உள்ளது, பண்ருட்டி காய்கறி மார்கெட்டிலிருந்து சென்னைக்கே காய்கறிகள் பெரும்பாலும் அனுப்பி வைக்கப்படுகிறது.
நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம்..
ஏதேனும் உங்கள் சந்தேகங்கள், கருத்துகள் மற்றும் பதிவில் பிழைகள் இருந்தால் Comment பண்ணவும்
கடலூர் சிறப்புகளை சிறு வீடியோவாக Youtubeல் ஏற்றியுள்ளோம் நேரம் கிடைத்தால் பார்க்கவும்..
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்
சிறப்பான பதிவு.. நம் மாவட்டம்.. அருமை சகோ...
பதிலளிநீக்குThank you bro..😍
நீக்கு