சாதனை படிகள் பாகம்1 :
வணக்கம் நண்பர்களே,
வாழ்வில் முன்னேறிய முன்னோர்களின் சாதனை கூற்றுகளின் ஒரு தொகுப்பு ஒரு பதிவாக உங்களுக்கு..
1.மகத்தான சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையால் அல்ல, விடா முயற்சியினால்.
-சாமுவேல் ஜான்சன்.
2.பயந்தால் வரலாறு படைக்க முடியாது.
-அப்துல் கலாம்.
3.மனிதர்கள் பெறும் புகழ் இரண்டு வகைப்படும். ஒன்று பெற்றுச் சாவது இன்னொன்று செத்து பெறுவது. சரித்திரத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் பெற்றுச் செத்தவர்கள்; கோடிக் கணக்கானவர்கள் செத்து பெற்றவர்கள்.
-கண்ணதாசன்.
4.அழகிய அன்பின் இல்லத்திற்கு இணையான பள்ளிக்கூடமே இல்லை.
-மகாத்மா காந்தியடிகள்.
5.மனதில் உறுதியான தீர்மானம் இருந்தால் முடியாத காரியமும் முடியக் கூடியதாக அமையும். மன உறுதி இல்லாதபோது முடியக் கூடியதும் முடியக் கூடாததாக மாறிவிடும்.
-ஓஷோ.
6.உழைப்பு உங்களுக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுக்கின்றது. உழைப்பு இல்லாத வாழ்க்கை வெறுமையானது.
-ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்.
7.உண்மைக்காக எதையும் இழக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையை இழக்கக்கூடாது.
-சுவாமி விவேகானந்தர்.
8.உண்மையான அடக்கமே எல்லா நற்குணங்களுக்கும் பிறப்பிடமாக இருக்கிறது.
-நபிகள் நாயகம்.
9.தன் வலிமையைக் கணித்த பிறகே செயலில் இறங்கவேண்டும்.
-சாணக்கியர்.
10.முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்.
-தந்தை பெரியார்.
11.விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல, விழும் ஒவ்வொருமுறையும் மீண்டு எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை.
-நெல்சன் மண்டேலா.
12.திறமையுள்ளவரின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.
-சாணக்கியர்.
13.கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை கல்வியும் உழைப்பும் போதுமானது.
-காமராஜர்.
14.அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது. எந்தக் குறையையும் பொறுக்காது.
-ஜான் ரஸ்கின்.
15.ஒரு வருடம் என்பது முன்னூற்றி அறுபத்தைந்து வாய்ப்புகள் கொண்டது. பயன்படுத்துங்கள். வெற்றி பெறுங்கள்.
-வைரமுத்து.
தங்கள் வாழ்வில் நடந்த அனுபவங்களை பின் வரும் சந்ததிகளுக்காக அவர்கள் உருவாக்கிய இந்த வரிகளை வாழ்வில் முன்னேர மந்திரத்தை போல போற்றுவோம்..
நன்றி,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்