கோவில் உண்டியலை ஏலம் விடும் வித்தியாசமான கிராமம்


வணக்கம் நண்பர்களே,

     ஒரு கிராமத்தில் வித்தியாசமான ஒரு ஏல நிகழ்வை பற்றி பார்ப்போம்

     விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர் அருகே அமைந்துள்ளது ஓட்டேரிப்பாளையம் கிராமம், இந்த கிராமத்தில் வினாயகர் கோவில், முத்துமாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்,முத்தாலம்மன் கோவில், பிடாரி அம்மன் கோவில் மற்றும் ஐய்யனாரப்பன் கோவில் என்று  தெருவிற்கு ஒரு கோவில் அமைந்துள்ளது..

    இந்த ஓட்டேரிப்பாளையம் கிராமத்தில் ஏற்கனவே தேர் திருவிழா பெரும் பிரசித்தி பெற்றது, கடந்த வருடமும் இந்த வருடமும் கொரோனா தொற்று காரணமாக முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறவில்லை...

   வழக்கமாக அனைத்து கிராமங்களிலும் தேரில் கட்டப்பட்ட பழம், காய்கறிகள் அனைத்தும் ஏலம் விடுவது பழக்கமாகும், அதே போல் கோவில் உண்டியின் உள்ள பணம் நகைகள் கோவிலுக்கே சேரும்...

   இந்த ஓட்டேரிப்பாளையம் கிராமத்திலும் அதே போல் தேர் மற்றும் அம்மன் உலா வரும் போது பக்தர்களால் கொடுக்கப்பட்ட காய்கறி பழங்கள் அனைத்தும் ஏலம் விடுவது பழக்கமாகும்...

  ஆனால் அனைத்து கிராமங்களில் உள்ள பழக்கத்திற்கு மாறாக இந்த ஓட்டேரிப்பாளையம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலின் உண்டியல் அடி மாதம் முதல் வெள்ளியில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி முடிந்த உடன் கோவில் உண்டியல் ஏலம் விடும் நிகழ்வு நடைபெறுகிறது..இந்த உண்டியல் ஏலம் விடுவது ஒரு புதுமையான நிகழ்வாக பார்க்கப்படுகின்றது...

     ஆடி மாதம் முதல் வெள்ளியில் உண்டியல் வழக்கம் போல் ஏலம் விடப்பட்டது, கோவில் உண்டியல் ஏலம் குறைந்தபட்ச தொகை 1000மாக நிர்ணயக்கப்பட்டிருந்தது...

     ஏலம் எடுக்க பொதுமக்கள் ஆர்வமாக இருந்ததை காணமுடிந்தது,  உண்டியல் ஏலம் எடுப்பதால் என்ன லாபம் என குழம்பி போன எனக்கு பாட்டி ஒருவர் அதை பற்றி விளக்கினார், கடந்த வருடம் உண்டியல் ஏலம் எடுத்தவருக்கு அதில் உண்டியலில் உள்ள அனைத்து பொருட்களும் இந்த வருட ஆடி வெள்ளியில் மறுநாள் ஒப்படைக்கப்படும், அதே போல் இந்த வருடம் ஏலம் எடுத்தவருக்கு இந்த வருட ஆடி வெள்ளியின் மறுநாள் முதல் அடுத்த வருடம் ஆடி முதல் வெள்ளி வரை உண்டியல் சொந்தமாக இருக்கம்...

  முக்கியமான ஒரு விதி உள்ளது, இந்த வருடம் முழுக்க அவர் வசம் உள்ள உண்டியலில் எப்போது வேண்டும் என்றாலும் உண்டியலில் உள்ள பணம் பொருட்களை எடுக்கொள்ளலாம்...மிகவும் வேறுபட்டுள்ளது இந்த உண்டியல் ஏல முறை...இந்த வருடம் ஒருவர் அந்த உண்டியலை ஏலத்தில் எடுத்தனர், இந்த வருடம் முதல் அடுத்த வருடம் ஆடி வெள்ளி வரை அந்த உண்டியலில் போடப்படும் அனைத்து பொருட்களுக்கு அவரோ சொந்தகாரர்...

  இந்த வித்தியாசமான ஏல முறை என்னை கவர்ந்தது, உள்ளுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்,

நன்றி,

தொகுப்பு : தமிழரசன் சண்முகம்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads