ஒலிம்பிக் திருவிழா - History of Olympic


வணக்கம் நண்பர்களே,

    டோக்கியோ ஒலிம்பிக் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒலிம்பிக் பற்றிய ஒரு சிறு‌ தொகுப்பு..



ஒலிம்பிக் :

   ஒலிம்பிக் என்றாலே நினைவில் வருவது பதக்கம், ஒலிம்பிக் சுடர் ஓட்டம், போட்டிகளாகும்..

  ஒலிம்பியா நாட்டில் தொடங்கப்பட்ட விளையாட்டு போட்டியை ஒலிம்பிக் என பெயரிடப்பட்டது...

  கி.மு 776 தொடங்கி கி.பி 393 வரை கிரேக்க மற்றும் ஒலிம்பியா நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டது, இந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை ஆதிகாலத்து ஒலிம்பிக் போட்டி என்றும் அழைக்கப்பட்டது..இந்த காலத்தில் நடைபெற்ற ஓட்ட பந்தயத்தில் மொகராவை சேர்ந்த வீரர் ஒருவர் போட்டியின் போது ஓடிக்கொண்டிருந்த வேலையில் அவரது கீழ் ஆடை அவிழ்ந்ததாம், ஆனால் அவர் அந்த நேரத்தில் போட்டியை ஓடியதை நிறுத்தாமல் தொடர்ந்து ஓடி வெற்றார் என்பது வரலாறு...

1896ஆண்டிற்கு முன் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோடை காலம் மற்றும் குளிர்காலங்களில் இரெண்டு வருடத்திற்கு ஒருமுறை என மாற்றி மாற்றி கிரீஸ் நாட்டில் நடைபெற்றது..

  அதன் பின் 1894ல் அமைக்கப்பட்ட உலக ஒலிம்பிக் குழுவால் நான்கு வருடத்திற்கு ஒரு முறை போட்டி நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது, பின் விளையாட்டு போட்டி கைவிடப்பட்டிருந்தது..அதன் பின் 19ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நோபில்மேன் என்பவரின் முயற்சியால் மீண்டும் ஒலிம்பிக் போட்டி நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்பட்டது...

    உலகப் போர்கள் நடைபெற்ற ஆண்டுகளை தவிர 1796 முதல் தொடர்ந்து நான்கு வருடத்திற்கு ஒரு முறை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது...

   ஆரம்பத்தில் கிரேக்கம், ஒலிம்பியா, மற்றும் கிரீஸ் நாடுகளில் மட்டும் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் பிற் காலத்தில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு நாட்டில் போட்டிகள் நடைபெற்று வருகின்றது...

   ஐந்து வளையங்களை கொண்ட ஒலிம்பிக் சின்னம் 1913ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது, ஐந்து வளையங்களும் போட்டியில் கலந்துகொள்ளும் ஐந்து கண்டங்களை குறிக்கின்றது..ஒலிம்பிக் கொடி வெள்ளை நிறத்தில் இருந்தாலும் அதில் உள்ள வளையங்கள் சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை நீலம் ஆகிய நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த வண்ணங்களில் ஏதேனும் ஒரு வண்ணமாவது ஒலிம்பிக்கில் பங்குபெறும் நாடுகளின் கொடியில் இருக்கும் என்பதால் தான்..

பின் 1914ம் ஆண்டு ஒலிம்பிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டியில் அதாவது 1920ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்த ஐந்து வளையங்கள் கொண்ட சின்னம் பயண்படுத்தப்பட்டது...

போட்டிகளும் நாடுகளும் :

   ஒலிம்பிக் போட்டியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெறுகின்றனர்..

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது என்பதை போல் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது என்பதே தனி சிறப்பாகும்..

  ஒலிம்பிக் போட்டியில் 2000ம் மேற்பட்ட போட்டிகள் இடம்பெற்றுள்ளது, இதில் வெற்றி பெறும் நாடுகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கப்படுகிறது...

   ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் தங்க பதக்கமானது 556 கிராம் எடையுள்ள பதக்கம் தற்போது உள்ள இந்திய மதிப்பில் சுமார் 26லட்சம் ரூபாய் ஆகும்..வெள்ளி பதக்கம் 550கிராம் எடையும், வெண்கல பதக்கம் 450 கிராம் எடையும் இருக்குமாம்..

இந்த முறை ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது, ஆகஸ்டு 8ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்...நம் நாட்டிற்கு வீரர்கள் வெற்றி பெற்று நாடு திரும்புவார்கள் என கடவுளிடம் வேண்டிகொள்வோம்..

ஜெய்ஹிந்த் 🙏..


நன்றி,


தொகுப்பு : தமிழரசன் சண்முகம்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads