மே தினமும்‌ மே தின‌ நாயகனும்...

வணக்கம் நண்பர்களே,

     இன்று மே தினம், மே தினம் என்றாலே உழைப்பாளர்களை போற்றும் தினமாகும், உழைப்பாளர் தினத்தில் தன் கடின உழைப்பால் உயர்ந்த நடிகர் அஜித்குமார் அவர்களை பற்றி அவர் பிறந்த நாளில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்...அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..


மே தினமும் வரலாறும் :

      முதலில் மே தினமான இந்த நாளில் மே தினத்தின் வரலாறு பற்றி தெரிந்துகொள்வோம்...

     மே தினம் என்பது தொழிலாளர்களின் ஒற்றுமையை உணர்வை அழுத்தமாக குறிக்கின்றது, போராடினால் வெற்றி பெறமுடியும், போராடினால் உரிமையை பெற முடியும் என்பதையே மே தினம் உறுதிப்படுத்தியது...

   1980ம் ஆண்டுக்கு முன் அமெரிக்காவில் 16மணி நேரம் வேலை என்ற எட்டு மணி நேர ஓய்வு/உறக்கம் என்ற நிலையை எதிர்த்து 1980ம் ஆண்டில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது, அந்த போராட்டத்தில் எட்டு மணிநேர வேலை, மீதி 16 மணி நேரத்தில் ஓய்வும், உறக்கமும் வேண்டும் மற்றும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்ற நோக்கத்துடன் போராட்டம் நடத்தப்பட்டது, அதற்கு செவி சாய்க்காத அமெரிக்கா அரசு தொழிலாளர்கள் மேன் மாபெரும் தாக்குதலை நடத்தியது, இந்த தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்..

    தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால் எதுவும் சாத்தியமே என்று முழங்கிய காரல் மார்க்ஸ், "உலக தொழிலாளர்களே" ஒன்று‌ சேருங்கள் என்று முழக்கத்துடன் தொழிலாளர்களை ஒன்றிணைத்தார்..

   1886ம் ஆண்டு நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, 1200 நிறுவனங்களில் பணி புரியும் சுமார் 1,30,000 தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வேலைநிறுத்தம் செய்தனர், மே 1 1886ம் ஆண்டு நடைபெற்ற அந்த வேலை நிறுத்த போராட்டமே மே தினம் உருவாவதிற்கான காரணம், பின் இது மாதிரியான வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டே இருந்தது, 1890ம் ஆண்டில் அந்த 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை ஏற்றது அமெரிக்க அரசு...
 
    இந்தியாவிலே முதன் முதலில் சென்னையில் தான் மே தினம் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது...சென்னை உயர்நிதிமன்றத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் 1923ம் ஆண்டு பொதுவுடைமைவாதி ம.சிங்காரவேலர் அவர்களால் மே தினம் கொண்டாடப்பட்டது...

    தொழிலாளர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் பறைசாற்றும் மே தின நாளில் தொழிலாளி என்று பெருமை கொள்கின்றேன்....

   அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்...🙏

மே தின நாயகன் அஜித்குமார்:

        மே தினத்திற்கு மிகவும் நெருக்கமானவர், மே தினத்தில் இந்திய மண்ணில் பிறந்த நடிகர் அஜித்குமார் அவர்களின் பிறந்தநாளில் அவரின் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் நினைத்து பெருமைகொள்வோம்...

      மே மாதம் 1ம் தேதி 1971ம் ஆண்டு பிறந்த அஜித்குமார் 1986ம் ஆண்டு தன் உயர்கல்வியை முழுவதும் முடிக்காமலே கல்வியை நிறுத்தினார்...பின் குடும்ப சூழலுக்காக மெக்கானிக் வேலையை தேர்வு செய்துவந்தார்..

    ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்தார் அஜித்குமார்,  1992ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பிரேம புத்தகம் எனும் பாடத்தில் அறிமுகமானார் அதோட சிறந்த புதுமுக நடிகர் என்ற விருதை தன் முதல் படத்தில் பெற்றார்.. அதன் பின் தமிழில் அமராவதி என்ற படத்தில் தமிழ் திரையுலகில் தன்னை இணைத்துக்கொண்டார் அஜித்குமார், அது முதல் இன்று வரை அவர் கண்ட வெற்றிகளை விட தோல்விகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது...

தன்னடக்கமும் தைரியமும் :

      ஆரம்பகாலத்தில் அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் ரசிகர்களை கொண்டாடினர், பின் வந்த நாட்களில் அல்டிமேட் ஸ்டார் என்பதை திரையில் தவிர்த்த அஜித்குமார், தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று கடந்த வருடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்...அஜித்குமார் அல்லது AK என்று அழையுங்கள் குறிப்பிட்டிருந்தார் அஜித்குமார்..

    எவ்வளவு உயர்ந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் போல் தன்னடக்கத்தை தன் சொத்தாக கருதினார் அஜித்குமார், பொது விழாக்களில் பெரிதும் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டாதவர் அஜித்குமார்...

    கலைஞர் முதல்வராக இருந்த நேரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் " நடிகர்கள் விழாக்களில் கலந்து கொள்ள  வற்புறுத்த படுகின்றனர்" என்று கூறி தன் துணிச்சலை வெளிப்படுத்தினார், இதற்கு ஆதரவாக ரஜினிகாந்த் இருக்கையில் இருந்த எழுத்து கை தட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது...

   தன் இயல்பான நடிப்பு மற்றும் தோற்றத்தை அப்படியே திரையில் வெளிக்காட்டி வந்தார், தலை நரையை தற்போது பெருமையாக இளைஞர்கள் நினைப்பதிற்கு அஜித்குமார்  ஒரு காரணம்...

    அமராவதியில் ஆரம்பித்து வலிமை வரை இருந்த காலங்களில் அவர் கண்ட வெற்றியை விட தோல்வியே அதிகம் என்பது, அவரின் தன்னம்பிக்கையை காட்டுகின்றது..

   2000ம் ஆண்டுக்கு பின்னர் மோட்டர் பந்தயங்களில் கலந்தகொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டினார், அதனால் அந்த காலங்களில் சினிமாவில் அதிக படங்களை நடிப்பதை தவிர்த்தார்...

   காதல் கோட்டை, வாலி, தீனா, அமர்க்களம், காதல் மன்னன், பூவெல்லாம் உன் வாசம், சிட்டிசன் போன்ற தரமான படங்களை நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார் அஜித்குமார், 2000ம் ஆண்டுக்கு பின் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பில்லா படத்தை மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்றது "பில்லா" மற்றும் ரஜினிகாந்தின் பாராட்டையும் பெற்றார் அஜித்குமார்..

   வரலாறு, பில்லா, கிரீடம், அசல் போன்ற படத்தில் வெற்றியை பெற்று வந்த அஜித்குமார், தன்னுடைய 50வது படமான "மங்காத்தா"வில் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் மற்றும் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தினார் அஜித்குமார்...அதன் பின் வீரம், விஸ்வாசம், வலிமை-யை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து இன்னும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார் அஜித்குமார்...

   மெக்கானிக் முதல் நடிகர் வரை இவரின் உழைப்பு போற்றத்தக்கது..இது போன்ற சிலரின் உழைப்பை பற்றி பின் வரும் வரிகளில்..

   அப்துல் கலாம், எம்.ஜி.ஆர், சிவாஜி, மோடிஜி, சுந்தர் பிச்சை, ரஜினிகாந்த், அஜித்குமார் போன்றவர்கள் தங்களின்‌ உழைப்பின் மூலமே உயர்ந்துள்ளனர்.

உழைப்பே உயர்வு தரும்...

மீண்டும் ஒரு முறை மே தின வாழ்த்துக்கள் 🙏🙏🙏

நன்றி,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads