வணக்கம் நண்பர்களே,
நீண்ட நாட்களுக்கு பிறகு ஓர் ஆன்மீக பயணத்தின் அனுபவத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
இதுவரை சென்ற ஆன்மீக பயணத்தில் இருந்து இந்த முறை சென்ற பயணம் சற்று வேறுபட்டது, காரணம் இம்முறை நாங்கள் பயணித்தது இது வரை நேரில் சந்தித்திடாத சமூக வலைதள நண்பர்களுடன் சென்று அனுபவம் மறக்கமுடியாத ஒன்றாய் அமைந்தது..
இதுவரை சென்று வந்த சில மலைகளும் அதன் அனுபவத்தையும் இங்கு இணைத்துள்ளேன்..
1.தேவதானம்பேட்டை வன துர்கை கோவில் Click Here
2.பர்வத மலை பயணம் Click here
புதிய அனுபவமாய் கிடைக்கப்பெற்றது தென்கையிலாயம் எனும் வெள்ளியங்கிரி பயணத்தையும் அனுபவத்தையும் இந்த பதிவில் வெளியிடுகின்றேன் 🙏 அதற்கு முன் தென் கயிலாயம் பற்றி தெரிந்து கொண்டு பதிவை தொடங்குவோம்...
வெள்ளியங்கிரி மலை :
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூண்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையே வெள்ளியங்கிரி மலை ஆகும்...கேரள மாநிலத்தில் அருகே அமைந்துள்ள வானுயர்ந்த வெள்ளியங்கிரியின் உச்சியை அடைய 6.0 கி.மீ மலையில் பயணிக்க வேண்டும், ஏழு மலைகளை கடந்தால் மட்டுமே வெள்ளியங்கிரி ஆண்டவனை தரிசிக்க முடியும்...தரை மட்டத்தில் இருந்து சுமார் 6000அடி உயரம் வாய்ந்தது வெள்ளியங்கிரி... பாம்பாட்டி சுனை, வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சித்தர் குகை, கைதட்டி சுனை, ஆண்டி சுனை, தான்தோன்றி விநாயகர் சிலை, பீமன் களி உருண்டை, சீதை வனம், விபூதி மலை என்று சிறப்பு இடங்களை கொண்டுள்ளது வெள்ளியங்கிரி மலை...
வெள்ளியங்கிரி வரலாறு :
வெள்ளியங்கிரி மலையை தென் கையிலாயம் என்றும் அழைப்பார்கள், சிவன் எங்கெல்லாம் அமந்தாரோ அவ்விடங்களை வெள்ளியங்கிரி என்று அழைப்பார்கள்...
ஆம் தென் கையிலாயம் எனும் வெள்ளியங்கிரியும் சிவன் அமர்ந்த மலை தான், சிறு கோவத்துடனும் மன உலைச்சலுடனும் வெள்ளியங்கிரியில் அமர்ந்ததாக வரலாறு கூறுகின்றது...
சிவனையே கணவன் ஆக்குவேன் என்று விடாப்படியாய் தமிழ்நாட்டின் நின்ற ஒரு பெண், தன்னை ஈசன் மணந்து கொள்ளவேண்டும் என்பதற்காக தன்னை ஆயத்தப்படுத்தி கொண்டாள், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் ஈசன் தன்னை அடையவேண்டும் இல்லை என்றால் உயிர் துறப்பேன் என்று நின்ற பெண்ணை தேடி வந்த சிவபெருமான் வரும் வழியில் சிலரின் சதியால் அந்த பெண் குறிப்பிட்ட நாட்களுக்குள் வரமுடியாமல் போனது, இதனால் மனம் உடைந்த அந்த பெண் நின்ற படியே தன் உயிர் துறந்தாள், இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னிகோயிலில் நின்ற கோளத்தில் காட்சி அளிக்கிறாள் கன்னியாகுமரிமாக..
இதன் காரணமாக மனம் உடைந்த ஈசன் மனச்சோர்வில் இருந்து வெளி வர வேண்டும் என்பதற்காக யாரும் சுலபமாக வரமுடியாத இம்மலையில் சிலகாலம் அமர்ந்தார் என்பதே வரலாறு..
ஏற்ற தாழ்வு கொண்ட ஏழு மலைகளை கொண்ட வெள்ளியங்கிரியில் ஏழாவது மலையில் பாறைகளுக்கு இடையே காட்சி அளிக்கிறார் எம்பெருமான் ஈசன்.. உயர்ந்து நிற்கும் இந்த ஏழாவது மலையில் அதிக காற்று வீசி கொண்டிருப்பதால் புல் தவிற வேறு எந்த செடியோ மரமோ வளராதாம்..
ஏழாவது மலையில் உள்ள இந்த லிங்கம் யாராலும் பிரதிஷ்டை செய்திடாத சுயம்பு லிங்கம் என்பது குறுப்பிடத்தக்கது... சித்தர்களும் ஞானிகளும் சுற்றித்திரிவதாகவும் அங்கு மனித நடமாட்டம் இல்லாத நாட்களிலும் பூஜை நடைபெறுவதாகவும் கூறுகின்றனர்...
‘தென்னாடுடைய சிவனே போற்றி!’
பல அதிசயங்களை கொண்ட வெள்ளியங்கிரி மலையில் நாங்கள் பயணித்த போது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தை வெளியிடுகின்றேன்..
வெள்ளியங்கிரி பயண அனுபவம் :
பர்வத மலை சென்று வந்த பின் அதுபற்றிய என் பதிவை வெளியிடும் போது சில சமூக வலைதள நண்பர்கள் அடுத்த முறை சேர்ந்து பயணிக்கலாம் என்று கூறிய நேரத்தில் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது, அடுத்த வெள்ளியங்கிரி செல்லலாம் என திட்டமிட்டோம் அதன் படி அனைவரும் சேர்ந்து ஏப்ரல் 23 & 24 வெள்ளியங்கிரி பயணிக்கலாம் என மார்ச் மாதம் இறுதியில் முடிவெடுத்தோம், திட்டமிட்ட படி ஏற்பாடுகளை செய்தோம்....
திட்டமிட்ட படி ஏப்ரல் 23 அன்று காலை 10.00 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தை அடைந்தோம், ஈஷா மையத்தில் ஒன்று கூடலாம் என முடிவெடுத்த படி அனைவரும் ஒன்று கூடி வெள்ளியங்கிரி அடி வாரத்தை மாலை 4.30 மணிக்கு வெள்ளியங்கிரியின்ஸஅடிவாரத்தை அடைந்தோம், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது, மலை ஏற கோவில் நிர்வாகமும் வனத்துறையும் உத்தரவு பிறப்பித்தது, அதே நேரத்தில் மலை ஏற நாங்களும் மூங்கில் கம்புகளை வாங்கினோம் மலை ஏற தயார் ஆனோம், மாலை 5.30 மணி அளவில் அங்கிருந்த வனத்துறை அதிகாரிகள் எங்களுடன் சிலருக்கு மட்டும் மலை ஏற அனுமதி கொடுத்தது, ஈசனின் மீது உள்ள நம்பிக்கையில் பலத்த மழையிலும் நாங்கள் மலை ஏற தொடங்கினோம், நாங்கள் மலை ஏற தொடங்கியது சில நிமிடத்தில் மீண்டும் மலை ஏற அனுமதி மறுத்தது வனத்துறை, அதோடு காலை 4.00 மணி வரை மலை ஏற அனுமதிக்கவில்லையாம்...
நாங்கள் தொடர் மழையிலும் தொடர்ந்து மலை ஏறி கொண்டே இருந்தோம், முதல் மலையானது கடினமான படி வழியை கொண்டுள்ளது, முதல் மலை முடிந்ததும் வெள்ளை விநாயகரை வழிபட்டு தொடர்நது இரண்டாவது மலையை ஏற தொடங்கினோம்.. காட்டு வழி, வழுக்கு பாறைகளை கடந்து பாம்பாட்டி சித்தர் குகையை அடைந்தோம் இதனை தொடர்ந்து மூன்றாவது மலையை ஏற ஆரம்பித்தோம் போகும் வழியில் அட்டை பூச்சி பாம்பு, இடி, மழை என சில தடைகள் இருந்தாலும் பயணம் நிற்காமல் நான்காம் மலையை அடைந்தோம், மிக மோசமான வானிலை காரணமாக அங்கு உள்ள சிறு கடையின் அருகே தங்க முடிவெடுத்தோம், அடிகளார் கொண்டு வந்த சாதத்தை அங்கே சாப்பிட்டு விட்டு காலை 3.45மணி வரை ஓய்வேடுத்து பின் மழை நின்ற காரணத்தினால் மீண்டும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம், ஐந்து மற்றும் ஆறாவது மலைகளை கடந்ததும் ஆண்டி சுனையில் இருந்த சிவ லிங்கத்தை தரிசனம் பின் ஏழாவது மலையான வெள்ளியங்கிரி ஆண்டவனின் இருப்பிடத்தை நோக்கி மலை ஏற ஆரம்பித்தோம், மழை பெய்ததன் காரணமாக களிமண் மட்டுமே கொண்ட அந்த மலை ஏற சிரமம் அதிகமாக இருந்தது, போகும் வழியில் தான்தோன்றி விநாயகர் கோவிலை வழிப்பட்டோம்..
இறுதியில் மேகங்களும் காற்றும் நம்மை தழுவும் வெள்ளியங்கிரி மலையின் உச்சியை அடைந்தோம் அடிகளார் எடுத்து வந்த பிரசாதத்தை வைத்து வழிபட்டோம்...🙏 சிவ சிவ..
இதனிடையே சில அற்புதங்களை நாங்கள் கண்டோம், சிவனடியார் SSR அண்ணன் சிவ பூஜை செய்ய தண்ணீர் இல்லாத போது யாரோ ஒரு சிறு தம்பி தண்ணீரை கொடுத்ததும், 8.00மணிக்கு நடந்து பூஜையும், அதில் ஈசனுக்கு படைத்த படையல் எங்களை தேடி வந்ததும், இரயில் வண்டியை பிடிக்கவே முடியாமல் போகும் நிலை வந்த பிறகு அண்ணன் நாகேந்திரன் வடிவில் கிடைத்த உதவியும், சரியான நேரத்தில் பஸ் கிடைத்ததும், இரயில் வண்டியின் 10நிமிட தாமதம் அனைத்தும் யாரோ நடத்தியது போல் ஓர் உணர்வு..
சிவ பெருமான் ஆசி பெற்றோம் என எங்களுக்குள் வந்த அந்த உணர்வு மறக்க முடியாது...🙏..
மீண்டும் இதே போல் ஓர் ஆன்மீக பயணத்தில் நண்பர்களோடு இணைவோம்...❤️🙏
பலநாள் பழகியது போல் அன்போடு வழி நடத்திய SSR அண்ணன், செந்தில் அண்ணன், சதீஷ் அண்ணன், ஐயப்பன் அண்ணா, நாகேந்திரன் அண்ணா, யாதவ், தமிழரசன், ராக்கி, சங்கர் மணி, அருண், கணேஷ், கவியரசன், தீனா, பரணி மற்றும் உடன் பயணித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, அடுத்த பயணத்தில் இணைவோம்...
எங்களுக்கு ருத்ராட்ச மாலையை வழங்கிய சிவராஜ் அண்ணனுக்கு நன்றி..
நன்றி,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்
அடுத்த பதிவில் சந்திப்போம்...🙏
வெள்ளியங்கிரி பயண அனுபவம் மட்டுமின்றி அதன் வரலாறையும் சேர்த்து இங்கு பதிவிட்டுள்ளது சிறப்பு 👌👌👌 கண்டிப்பாக மற்றுமொரு பயணத்தில் மீண்டும் சந்திப்போம் ❤️
பதிலளிநீக்குகண்டிப்பாக மீண்டும் சந்திப்போம் புரோ...❤️
நீக்கு