வணக்கம் நண்பர்களே,
இது என் பத்தாவது பதிவு, தொடர்ந்து என் பதிவுக்கு ஆதரவு கொடுத்து ஆயிரம் வாசகர்களை கடக்க வைத்த உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..🙏
1990ல் இருந்து 1999 வரை பிறந்த குழந்தைகளை பற்றியும் அவர்களின் பொற்கால வாழ்க்கையை பற்றியுமே இந்த பதிவு....
90ஸ் கிட்ஸ் என்று அழைக்கப்படுபவர்களின் நானும் ஒருவன் என்று பெருமை கொள்கிறேன்...
இப்போது உள்ள குழந்தைகள் வளரும் சூழ்நிலையும் நாங்கள் வாழ்ந்த சூழ்நிலைகளும் வேறுபட்டு இருக்கின்றது அவை பின் தொகுப்பு வாரியாக கூறி இருக்கின்றேன்
தின்பண்டங்கள் :
தேன் மிட்டாய், எடைக்கல் மிட்டாய், ஆசை சாக்லேட், ஆரஞ்சு மிட்டாய், பொறி உருண்டை, முறுக்கு, கடலை மிட்டாய், எள் உருண்டை, சீடை, அதுரசம், கமரகேட், சவ்வு மிட்டாய் போன்றவைகளை தாத்தா, அப்பா வாங்கி தரும் போது அளவில்லா ஆனந்தாமாய் இருக்கும்..
பால் ஐஸ், ஜவ்வரிசி ஐஸ், கலர் ஐஸ், குல்பி போன்றவற்றை மதிய வெயிலில் பாட்டில் எடுத்து வந்து கொடுத்து வாங்கி சாப்பிட்ட காலம் திருப்பி வராது...
பழைய நோட் புத்தகத்திற்கு தரும் பஞ்சு மிட்டாய் இன்றும் மனதில் இனிக்கின்றது
மம்மி டாடி பாக்கு, பூமர் பப்பில்கம், அருண் பால் ஐஸ்கிரீம் இவைகளை மறக்கவே முடியாது...
பொழுதுபோக்கு :
இந்த காலத்தில் வீட்டிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் சேனல்கள் பொழுதுபோக்கிற்கு முக்கியமாக அமைந்துள்ளது, 90களில் பிறந்த நாங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தது பஞ்சாயத்து தொலைக்காட்சியில் மட்டுமே அதுவும் 40 முதல் 50 பேர் வரை வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியை பார்த்து ரசித்தோம்...
ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படும் சக்திமான் தொடர் ஹிந்தியில் ஒளிபரப்ப படும்போது அன்று காலையில் வெளியாகும் செய்தித்தாளில் வெளியாகும் தமிழ் மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டு மகிழ்ச்சி அடைவோம், பின் பொதிகையில் தமிழிலே ஒளிபரப்பப்பட்டது,
90கிட்ஸ் குழந்தைகளின் வீட்டு அலமாரியில் இடம் பிடித்த முதல் கதாநாயகன் சக்திமான் ஸ்டிக்கர் Parle-G பிஸ்கட்டுக்கு இலவசமாக தருவாங்க.
அனைத்திந்திய வானொலி நிலையம் என்று வானொலியில் கேட்டது ரசித்தது இன்றும் நம் செவியை விட்டு பிரியவில்லை..
ஞாயிறுகளில் ஒலிபரப்படும் திரைப்படத்தை காலில் கேட்ட உணர்ந்து ரசித்தோம்..
மேற்கூறிய அனைத்தும் தொழில்நுட்பத்தை சார்ந்த பொழுது போக்காக இருந்தாலும் பெரும் பகுதி விளையாட்டை சார்ந்தே இருந்தது.
விளையாட்டுகள் :
கபடி, கோ-கோ, கோலி குண்டு , பம்பரம், மரம் ஏறும் ஆட்டம், குச்சாட்டம், மறைந்து விளையாடும் ஆட்டம், கண்ணாமூச்சி, திருடன் போலீஸ், தாயம், பேபே, கிரிக்கெட்,வைச்சா வாழைப்பழம், டயர் ரெஸ், நிக்கல் குந்தல், பச்சகுதிரை, போன்ற விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்த எங்களுக்கு இப்போ இதில் பாதி விளையாட்டுகள் கூட எந்த குழந்தைகளாலும் விளையாடப்படுவது இல்லை என்று நினைக்கும் போது நமக்கு கிடைத்த அந்த பொற்கால வாழ்க்கை இப்போது உள்ள குழந்தைகளுக்கு கிடைக்கப்படுவது இல்லை என்றே கவலையா இருக்கு...
விடியோ கேம், பிரிக்ஸ் கேம் பிளேயர் இதை மறக்க முடியுமா?
பகல் பாதி பள்ளியிலும் அடுத்த பாதி முதல் ஸிளையாட்டாலுமே முழு நேரமும் சுற்றி திரிந்தது இன்னும் நினைவில் நீங்காமல் உள்ளது..
சம்பளம் :
90கிட்ஸ் முதன் முதலில் வாங்கிய சம்பளம் நிலக்கடலை விதை பயிரை உரித்து தர படிக்கு 5 பைசா வாங்கிய பின் அதற்கு தேன் மிட்டாய் வாங்கிய அனுபவம் மறக்க முடியாத ஒன்றாய் உள்ளது..
நிலக்கடலை அறுவடையின் செடிகளை பிடிங்கி அதில் நிலக்கடலையை ஆய்ந்து தர மதிய வெயிலில் அம்மாவுடன் இருந்த அந்தக் நாட்கள் பொற்காலத்தை விட உயர்ந்தது...
திருவிழாக்கள்:
இன்று திருவிழா என்றால் வானவேடிக்கையும் ஒளி,ஒலி அமைப்புகளால் மட்டும் சிறப்புற்று இருக்கிறது , 90களில் திருவிழா என்றால் பொம்மைகளும், பொரி மற்றும் விளையாட்டு பொம்மைகளாலும் மகிழ்ச்சியாக இருந்தோம், கலர் கண்ணாடி, பலூன், பஞ்சு மிட்டாய், என்று திருவிழாக்கள் எங்களால் கொண்டாடப்பட்டது.
தொழில்நுட்பம் வளர ஆரம்பித்தது நாங்கள் வாழ்ந்த காலங்களில் தான் என்று சொல்லி பெருமைப்படுகின்றோம்.
லேன் லைன் தொலைபேசி முதல் பின் ஒரு ரூபாய் காயில் தொலைபேசி, பட்டன் கைபேசி (Reliance & Nokia1100) பின் தொடுதிரை கைபேசி என்று வளர்ச்சி அடைந்து வருகின்றது...
கருப்பு வெள்ளை தொலைக்காட்சி, கலர் தொலைக்காட்சி, பின் LCD, LED என்று தொலைக்காட்சியிலும் புதுமை புகுந்தது...
90'S கிட்ஸ் என்ற நாங்கள் அனுபவித்த அந்த சொர்க்க நாட்களை இன்று உள்ள குழந்தைகள் அனுபவிக்கவில்லை என்பதில் பெரும் கவலையா உள்ளது...
நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம்,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்
Super machi 👏👏👏
பதிலளிநீக்கு😍😍 thanks machi
நீக்கு