உலக யோகா தினம்


வணக்கம் நண்பர்களே,

     இன்று(21.06.2021) உலக யோகா தினம்...


     உடல் ஆரோக்யம்தையும் உடல் வலிமையையும் அமைதியையும் தரும் யோகாசனத்தை பற்றியே இந்த பதிவில் காண்போம்..

   உலகில் உன்னத கலைகளில் ஒன்றான யோகா கலையே ஐந்தாயிரம் வருடத்திற்கு மேம்பட்ட கலையாகும்..

    2014ம் ஆண்டு பாரத பிரதமர் மோடி அவர்களால் ஐ.நா சபை கூட்டத்தில் யோகாவை பற்றியும் அதற்கான தினம் ஒன்றை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது இதை சீனா போன்ற நாடுகளும் ஆதரித்தால் ஜூன் -21 யை உலக யோகா தினமாக கொண்டாட டிசம்பர் 2014ம் ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டது, அன்று முதல் ஜூன் 21ம் நாள் அனைத்து வருடமும் யோகா தினம் கொண்டாடப்படுகின்றது..

அதே இந்த வருடமும் இன்று யோக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது, எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் யோகா பற்றி விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் பரவியுள்ளது ஏனென்றால் பல பிரபலங்கள் யோகா தினமான இன்று தங்கள் யோகா செய்யும் புகைபடத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்..

சில நூறு வருடத்திற்கு முன் யோகா ஆசனம் பிரபல கலையாக இருந்தது, பின் வந்த காலங்களில் யோகா பற்றிய விழிப்புணர்வு குறைந்தது, பின் தற்போது சில வருடங்களாக யோகா மீண்டும் உயிர்பெற தொடங்கியுள்ளது..

சித்தர்களும் யோகாவும் :

       சித்தர்கள் யோகாசன கலையில் சிறந்து விளங்கியதாகவும், அவர்களில் யோகா கலையில் மூலம் பல வருடங்கள் சாப்பிடாமலும் தங்கள் தவ வலிமையை பெருக்கி கொண்டதாகவும் சொல்லப்படுகிறது..

யோகாசன வகைகள்:

      பத்மாசனம், சலபாசனம், தனுராசனம், திரிகோணாசனம், ஏகபாதாசனம், புஜங்காசனம், சக்ராசனம், ஹலாசனம், மயூராசனம், சிரசாசனம், சர்வங்காசனம் மற்றும் சூர்ய நமஸ்கார் போன்ற ஆசன வகைகள் உள்ளது (collected from Yoga books)

யோகாவின் பயன்கள்:
     மன அழுத்தம் குறையும், மனவலிமை அதிகரிக்கும், தசை பகுதிகள் வலிமையாகிறது, ஞாபக சக்தியை அதிகரிக்கும், உடலை சுறு சுறுப்பாக்கும்,உடல் எடையை குறைக்கும், பல்வேறு வகையான உடல் வலிகளை போக்கும்.

    மேற்கூறிய அனைத்தையும் யோகாவால் பெற தொடர்ந்து யோகாசனம் செய்யவேண்டும்...

தொடர்ந்து யோகாசனம் செய்து உடல் மற்றும் மன வலிமையை பெறுங்கள்

நன்றி 🙏

தயாரிப்பு : தமிழரசன் சண்முகம்

அடுத்த பதிவில் சந்திப்போம்...

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads