வணக்கம் நண்பர்களே,
முக்கனிகளை பற்றி இந்த பதிவில் காண்போம்...
மா, பலா, வாழை என்ற மூன்று பழங்களையே முக்கனி என்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும்...அந்த முக்கனிகளை பற்றியே இந்த பதிவில் காண்போம்...
மாம்பழம் :
மாம்பழமே முக்கனிகளில் முதல் கனி ஆகும், மாம்பழம் குழந்தைகளை மனதை கொள்ளை கொள்ளும் அரிய இயற்கையின் படைப்பு
பழம்காலத்தில் மலைப்பகுதிகளில் வசித்த ஆதிவாசிகளுக்கு பெரும் உணவாக இருந்தது மாங்கனியே.
அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் தட்டு வரிசைகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த மாங்கனி..
மாம்பழத்தின் சாறு என்பது அமிர்தத்தை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் என்பர் அதுகூட உண்மைதான்...
மாம்பழத்தை பிடிக்காது என்றும் கூறும் மனிதர்களும் இங்குள்ளனரா.?.
மா விதையில் இருந்து எளிதில் தளீர் விடும் படி அமைந்தது இயற்கை...
கோடை காலத்தில் மாம்பழத்தின் சீசன் ஆரம்பித்து அமுத சுவையை தரும் மா கனியின் விதையை தூக்கி எறியாமல் வீட்டு தோட்டத்தில் முளைக்க வைத்து பயன் பெறுங்கள்...
தற்போது நிறைய கலப்பின முறைகளிலும் மரபணுக்களை மாற்றியும் நிறைய மாங்கனியில் நிறைய வகைகளை உருவாக்கி வருகின்றனர்...
மாம்பழத்தின் சில வகைகள் மல்கோவா மாம்பழம், சேலத்து மாம்பழம், அல்போன்ஸா ரகம், பீதர் மாம்பழம், செந்தூரம் மாம்பழம், பங்கன பள்ளி இன்னும் இது போன்ற ரகங்கள் உள்ளன..இதில் சேலத்து மாம்பழத்திற்கேன்று தனி சுவை உள்ளது..
பலாப்பழம் :
பலா என்பது முக்கனிகளில் இரண்டாவது பழமாக குறிப்பிடப்பட்டுள்ளது
பலா பழம் வெளிப்புறத்தில் முட்கள் நிறைந்த ஒரு பார்ப்பதற்கே கரடுமுரடாக காட்சி அளிக்கும் அந்த பலா உள்ளே தேன் போல சுளைகளை கொண்ட அற்புதமான கடவுளின் படைப்பு...
பல பழங்களை(சுளைகளை) உட்கொண்ட பழம் எனபது மருவி பலா பழம்...
பண்ருட்டி என்றதும் நம் நினைவில் வருவது ஒன்று பலா இன்னொன்னு முந்திரி..
திண்ண திண்ண திகட்டாத கனி ஆன பலாவில் தான் இன்னும் மரபணு மாற்றப்பட்ட வகைகள் உருவாக்கப்படவில்லை..
நிலப்பரப்பில் பலா சுளைகள் சற்று தடித்த சதை பகுதியாகவும், மலை பகுதிகளில் மெலிந்த சதை பகுதியாகவும் காணப்படுகின்றது...இந்த கொல்லி மலைகளில் காணப்படும் பலா மரங்கள் பெரும் பழமை வாய்ந்ததாகவும் நிறைய கனிகளை காய்ப்பதாகவும் கூறப்படுகின்றது...
வாழைப்பழம்:
முக்கனிகளில் மூன்றாவதாய் அமைந்துள்ள வாழைக்கு என்று தனி சீசன் என்பது இல்லை அனைத்து நாட்களிலும் கிடைக்கப்படும் கனி வகையில் முக்கியமானது வாழைப்பழமாகும்..
வாழையடி வாழயாய் என்று பெரியவர் வாழ்த்துவது ஏனென்றால் வாழை மரங்கள் அடுத்தடுத்து தன்னோட வேரிலிருந்து இன்னொரு மரத்தை உருவாக்கும் என்பதாகும்...
விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் பூஜை போன்ற அனைத்து இடங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது வாழைப்பழம்...
வீட்டில் பின் தோட்டம் ஒன்று இருந்தால் கண்டிப்பாக வாழை என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும், வாழையில் பயன்களை தனி பதிவாகவே வெளியிடலாம் அந்த அளவிற்கு வாழையின் பயன்கள் உள்ளது...
வாழையின் வகைகள் பேயன், செவ்வாழை, ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மலை வாழை, பூவன் பழம் என்று பல வகைகள் உள்ளது...
எளிதில் செரிமானம் ஆகவும், மலச்சிக்கலை போக்க சிறந்தது வாழைப்பழம். இரெண்டு வாழைப்பழம் இருந்தால் ஒரு வேலை உணவையே முடித்துக் கொள்ளலாம் என்பர்...
மரபணு மாற்றப்பட்ட நிறைய வாழை ரகங்கள் சந்தையில் கிடைக்கின்றன...
நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம்..🙏
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்