வணக்கம் நண்பர்களே,
விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் காய்கறி விலை விவசாயிகள் முதல் நுகர்வோர் வரை வேறுபடுவதை இந்த பதிவில் பார்ப்போம்....
நீங்கள் வாங்கும் ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் விலை உங்களுக்கு தெரியுமா?..
விவசாயிகளின் பங்கு
நீங்கள் விலை கொடுத்து வாங்கும் காய்கறி விலையில் நான்கில் ஒரு பங்கு கூட விவசாயிகளிடம் போய் சேர்வதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா ?...
உதாரணமாக ஒரு கிலோ தாக்காளிக்காக நீங்கள் கொடுக்கும் 15 ரூபாயில் 3ரூ மட்டுமே விவசாயிக்கு சென்று சேர்கிறது...மீதம் உள்ள 12 ரூ இடைத்தரகர்களுக்கும், வியாபாரிகளுக்கும், கடைக்காரர்களுக்கும் சென்று சேர்கிறது...
3 ரூபாய்க்கு வாங்கப்படும் அந்த தக்காளி இடை தரகர்கள் மூலம் 7 ரூபாய்க்கு வியாபாரிகளிடம் விற்கப்படுகிறது, வியாபாரிகளிடம் இருந்து கடைக்காரர்கள் 12 ரூபாய்க்கு வாங்குகின்றனர், அந்த 12 ரூபாய்க்கு வாங்கப்பட்ட அந்த தக்காளியானது 15 ரூபாய்க்கு மக்களிடம் விற்கப்படுகிறது...
விவசாயிகள் உழைப்பு:
இதன் படி ஒரு விவசாயி தன் நிலத்தில் உழவு செய்து, பயிரிட்டு, உரமிட்டு, தண்ணீர் பாய்ச்சி, வேலைக்கு ஆள் வைத்து பறிக்கப்பட்டு இடை தரகர்களிடம் கொண்டு சேர்க்கும் வரை அவர் உழைப்பு உள்ளது அதற்கு அவருக்கு கிடைப்பது 4ல் ஒரு பகுதி விலை கூட இல்லை...
இடைத்தரகரின் உழைப்பு :
விவசாயின் முழு உழைப்பில் உருவான அந்த காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்து கை மாற்றி விடும் இடைத்தரகர்களுக்கு நான்கில் ஒரு பங்கிற்கும் மேல் வருமானம் ஈட்டுகிறான், இதற்காக அவருக்கு நிலமோ, உரமோ, உழைப்போ தேவையில்லை, காய்கறி மண்டியில் தனக்கேன ஒரு அடையாளத்துடன் கூடிய ஒரு இடம் மட்டுமே போதுமானது.
வியாபாரியின் உழைப்பு:
இடைத்தரகர்களிடமிருந்து வாங்கும் வாங்கப்படும் காய்கறிகளை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்று சிறு வியாபாரிகளிடம் விற்கப்படுகிறது, இதற்காக அவருக்கு கிடைப்பது நான்கில் ஒரு பங்கு, இதில் வியாபாரிகளின் பங்கு ஒவ்வொரு இடத்தில் இருந்து வாங்கப்படும் காய்கறிகளை பல்வேறு இடங்களில் உள்ள சிறு கடைக்காரர்களிடம் கொண்டு சேர்ப்பது...
கடைக்காரரின் உழைப்பு:
வியாபாரிகளிடம் இருந்து வாங்கப்படும் காய்கறிகளை நுகர்வோர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்கு பெறும் கடைக்காரர்களின் பங்கு அதிகம், இதற்கான அவருக்கு கிடைக்கும் பங்கு நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாகவே உள்ளது, இதிலும் சில கடைக்காரர்கள் நுகர்வோர்களிடம் விலை ஏற்றி அதிலும் லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்....
அதிக முதலீடு, அதிக உழைப்பை போட்ட விவசாயிக்கு கிடைப்பது ஏதோ சிறிய பங்குதான், ஆனால் எந்த உழைப்பும் இன்றி கை மாற்றிவிடும் தரகர்களுக்கு கிடைப்பதோ பெரும் லாபம்...
அனைத்து வகையான செலவு மற்றும் உழைப்பிற்கேற்ற விலையை கடைசியில் நுகர்வோரிடம் இருந்தே வசூலிக்கப்படுகிறது....
இதில் அறிவது விளைவிப்பவனுக்கும், விற்பனை செய்பவனுக்கும் கிடைக்கும் லாபத்தை விட கைமாற்றி விடுபவரே அதிக லாபம் ஈட்டுகிறார்...
விவசாயம் காப்போம் என்ற நிலை மாறி விவசாயியை காப்போம் என்ற நிலை வரும் போல...
அனைத்து துறைக்கும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் ஆட்சியர்கள் கண்ணுக்கு முதுகெலும்பான விவசாயியும் விவசாயமும் தென்படுவதே இல்லை...
ஆட்சியாளர்கள் விவசாயிகளை கைவிட்டது போல் விவசாயிகள் விவசாயத்தை கைவிட தொடங்க ஆரம்பித்துவிட்டனர்...
விலை மாறும் விவசாயி நிலை இனியாவது மாறுமா?...
காலம் பதில் சொல்லும்...
நன்றி..🙏
அடுத்த பதிவில் சந்திப்போம்,
தயாரிப்பு : தமிழரசன் சண்முகம்