வணக்கம் நண்பர்களே,
இது ஒரு விதை மற்றும் மனிதன் தனக்கான இடத்தில் வேர் பதிக்கும் போராட்டத்தின் ஒப்பீட்டை சில வரிகள் உங்களுக்காக...
பருவம் வந்த மரம் தன் தாய்மையை நிருபிக்க துளிரும் மொட்டு பூவின் விதை ஆகும், அந்த மரம் பூக்கும் பூ கனியின் விதை ஆகும், அந்த கனியால் உருவான விதையின் விதை கனியாகும், ..
விதை மொட்டா, பூவா, கனியா அல்லது அந்த கனியின் கருவா ?...
தன்னோட தன் நம்பிக்கையையும் திறமையையும் கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்தி தன் நிலையை உயர்த்தும் அனைத்தும் விதை தான்...
முற்றிய விதையானாலும் தடையில்லாமல் தளிர மண் வேண்டும், தளிர் விட மண் கிடைத்தாலும் மண்ணில் ஈரம் வேண்டும், மண்ணில் ஈரம் இருந்தாலும் பாதுகாப்பான சூழல் வேண்டும்.
முதிர்ந்த கனியின் கருவான விதை தன் ஊர் தெரியா பயணம் நிலத்தில் வேர் பதிக்கும் வரை தொடரும்...
வெளி உலகத்தை காண கூட்டத்தோடு கூட்டமாக நெருங்கி கிடந்த விதைகளின் போராட்டம் தொடரும் இடம் கனியில் கருவில் இருந்து தொடங்குகிறது..
விதையும் மனிதனும்:
எப்படியோ கனி பழுத்து வெடித்து வெளிவரும் விதைகள் தன்னோட இடத்தில் வேருன்ற அதற்கு மண் தேவைபடுகிறது அதாவது வாய்ப்பு...
மண் என்ற வாய்ப்பு இருந்தாலும் ஈரப்பதம் என்ற திறமை இருந்தே ஆகவேண்டும், விதை தளிர் விட ஈரப்பதம் என்பது முக்கியமாகிறது...
ஈரப்பதம் இல்லாமல் விதை தளிர் விட்டாலும் தொடர்ந்து ஈரப்பதம் இல்லாமல் வளர முடியாமல் பட்டுப்போக கூடும் அதே போலத்தான் திறமை இல்லாதவர் வாய்ப்பிலே வாழ்ந்தாலும் அது நெடுநாள் அந்த பயணம் தொடராது...
இதையே ப.விஜய் தன் கவிதை ஒன்றில் _ திறமை அற்றவன் ஜொலித்தால் இப்படி எண்ணிக்கொள் என்றார்
"அடிக்கிற காற்றில் பறவையும் பறக்கும் பேப்பரும் பறக்கும்,
காற்று நின்றால் தான் தெரியும் பறவை எது பேப்பர் எது என்று"
அப்படியே அந்த விதைக்கு மண் மற்றும் ஈரப்பதம் கிடைத்து வேருன்றி தளிர் விட்டாலும் அந்த செடியை சுற்றி இருக்கும் சூழலும் சமுதாயமுமே அந்த மரம் குறையின்றி வளர்ச்சி அடைய முக்கியாமாக அமைகிறது அது போலத்தான் மனிதன் கிடைத்த வாய்ப்பையும் திறமையையும் வைத்து வாழ ஆரம்பிக்கும் போது தான் வாழும் சூழலும் சமுதாயமுமே அவன் வளர்ச்சியை தீர்மானித்தாலும் அதை வென்று அடுத்த அடியை எடுத்து வைப்பதே வளர்ச்சி ஆகும்..
அப்படி வளர்ச்சி அடைந்த மரமானது காய்க்கும் கனியாலே அந்த விதையின் வாழ்க்கை முழுமையானது...அதே போலத்தான் வாழ்வில் வெற்றிபெற்ற மனிதன் அவர் வழி வந்தோர் அல்லது அவரிடம் பயணித்தோரின் வளர்ச்சியை பார்க்கும் போது தான் அந்த மனிதனின் வாழ்க்கை முழுமையாகும்...
வெற்றியை நோக்கி பயணிக்கும் போது வீழ்ந்தால் நீ முளைக்கச் போகிறாய் என்றே அர்த்தம்
வெற்றியோ தோல்வியோ மீண்டும் மீண்டும் எழுந்துக்கொண்டே இரு வாழ்க்கையை ரசித்துக்கொண்டே இரு..
நன்றி 🙏...
தயாரிப்பு : தமிழரசன் சண்முகம்
Nice machan
பதிலளிநீக்குThanks machi
நீக்கு