வணக்கம் நண்பர்களே,
ஆயிரம் வலிகள் இருந்தாலும் உள்ளே பாசத்துடனும் முகத்தில் கோபத்துடனுன் குடும்பத்திற்க்காக உழைத்த உழைக்கும் அப்பாவுக்காக இந்த பதிவு....
இன்று தந்தையர் தினம் (20.06.2021), தந்தையர் தின வாழ்த்துக்கள்...
அப்பா அதிசய மனிதன் :
அப்பா ஒரு அதிசய மனிதன், அப்பா நமது பாதுகாப்புக்காக கண்டிக்கும் போது புரிந்துகொள்ள முடியாது, அது ஏன் என்று புரியும்போது மீண்டும் அந்த கண்டிப்பு நமக்கு கிடைக்காது..
" அம்மாவின் பாசம் கருணையை போல அப்பாவின் பாசம் கடமையை போல " என்பர்
சிறுவயதில் அம்மாவின் பாசமும் அப்பாவின் பாசமும் வேறுபடுவது போல் தோன்றும் உண்மையில் இருவரின் பாசமும் பிள்ளைகளின் மகிழ்ச்சியையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டே இருக்கும்....
பிள்ளை முதல் அடி எடுத்து வைத்ததிலிருந்து அடுத்தடுத்த பிள்ளையின் சிறு சிறு வளர்ச்சியை கூட பெரும் வெற்றியாக நினைத்து வெளியில் அதை காட்டாமல் உள்ளுக்குள்ளே அதை கொண்டாடும் ஒரு உன்னத மனிதன் அப்பா...
வறுமையில் இருந்தாலும் இருப்பதில் முழுவதையும் பிள்ளைகளுக்கு கொடுத்து அதை பார்த்தே மகிழ்ச்சியடைவான் அந்த மனிதன்..
பிள்ளைகளின் வெற்றியை தன் வெற்றியாகவும், பிள்ளைகளில் தோல்வியில் ஊக்கம் கொடுக்கும் உற்ற நண்பனாகவும் இருந்து ஆறுதல் தரும் அற்புத மனிதன் அப்பா...
அப்பா, அம்மா பாசத்தை அளவிடும் அளவுகோளும் உள்ளாதா ?..அப்பா அம்மாவின் பாசத்திற்கு ஈடான மதிப்பு வேறு உள்ளதா.??
சுயநலமற்ற அப்பா, அம்மாவை கைவிட்டு வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா.?
தன்னை சந்தோஷமா வைத்திருந்த தகப்பனின் கடைசி நிமிடம் வரை சந்தோஷமா வைச்சி இருப்பதை விட பெரும் கடமை பிள்ளைகளுக்கு உள்ளது..
பிள்ளையின் ஒழுக்கத்திலும், வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும் நமது முதல் நாயகன் அப்பாவை வணங்குவோம் இந்நாளில்...
நன்றி வணக்கம்,
அன்புடன் தமிழரசன் சண்முகம்.