வணக்கம் நண்பர்களே,
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியையும் அதன் பெருமையும் இந்த பதிவில் காண்போம்...
பண்ருட்டி நகர பஞ்சாயத்தாக 1886ஆம் ஆண்டும் பின் 1966 ஆம் ஆண்டு நகராட்சியாக மாற்றப்பட்டது..
பண்ருட்டி என்றதும் நம் நினைவிற்கு வரும் பலாப்பழம்-மும் முந்தரியும்..
15-வது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,62,692 பேர் பண்ருட்டி தாலுகாவில் வசிக்கின்றனர்...பண்ருட்டி சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு...
பண்ருட்டி நான்கு உள் வட்டங்களையும் 99 கிராமங்களையும் கொண்டுள்ளது.
பண்ருட்டியை சுற்றி ஆறுகளும் அதனை சார்ந்தே விவசாயமும் நடை பெறுகிறது, முழுக்க முழுக்க விவசாயமும் அதன் தொடர்புடைய தொழில்களே இங்கு பெரும்பாண்மையாக உள்ளது..
பண்ருட்டி பெயர் காரணம் :
1.பழங்காலத்தில் பண் ரொட்டி போன்ற தின்பண்டங்கள் வாணிபம் செய்யும் இடமாக இருந்ததால் பண்ரொட்டி என்பது பண்ருட்டி ஆனது என சில தரப்பால் அறியப்படுகிறது.
2.பாட்டெழுதுவதால் சிறந்து விளங்கியதால் பண் உருட்டி என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் அது மருவி பண்ருட்டி என பெயர் பெற்றதாகவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.
பண்ருட்டி தொண்டை நாட்டின் உட்பட்ட பகுதியாக அமைந்துள்ளது.
பண்ருட்டி போக்குவரத்து :
சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, காட்டுமான்னார் கோவில், நாகப்பட்டினம், சிதம்பரம் செல்ல பெரும்பாலும் பண்ருட்டி மார்க்கத்தையே தேர்ந்தேடுக்கின்றனர்.
பண்ருட்டி மையப்பகுதியில் ரயில் நிலையமும் பேருந்து நிறுத்தமும் உள்ளது.
பண்ருட்டி வழிபாட்டுதளங்கள்:
1.திருவதிகை வீரனேட்டஸ்வரர்
பண்ருட்டி அருகே திருவதிகையில் ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலும், ஏழாம் நூற்றாண்டின் பாதிக்கு மேல் வாழ்ந்த அப்பர் அவர்களால் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில் ஐந்தாம் நூற்றாண்டு காலத்தை சார்ந்ததாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ இருந்திருக்கும் என்பது வரலாறு.
தஞ்சையில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோவில் கோபுரம் திருவதிகையை கோவிலின் மாதிரி என்றும் கூறப்படுகிறது.
2.சரநாராயண பெருமாள் திருக்கோயில்.
பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் அமைந்துள்ளது சரநாராயண பெருமாள் திருக்கோயில்.
3.ரங்கநாதர் திருக்கோயில்
பண்ருட்டியிலிருந்த கடலூர் செல்லும் வழியில் திருவதிகையில் அமைந்துள்ள ரங்கநாதர் திருக்கோவில் பழம்பெரும் திருத்தலம், பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் வழிபடப்படுகின்றார்..
4.நூர் மொஹம்மத் ஷா அவிலா தர்கா
பண்ருட்டியிலிருந்து புதுப்பேட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள நூர் மொஹம்மத் ஷா அவிலா தர்காவானது கடலூரிலே பெரிய மசூதி ஆகும்.
இந்த தர்காவில் நடத்தப்படும் கூண்டு திருவிழாவானது பிரசித்திப்பெற்றது, தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவுக்கு அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வது கூறிப்பிடத்தக்கது..
5.பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
பண்ருட்டியிலிருந்த புதுப்பேட்டை செல்லும் வழியில் ஆண்டிக்குப்பம் எனும் இடத்தில் பஞ்ச முக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
6.ஶ்ரீ படைவீட்டம்மன் கோவில்
பண்ருட்டியிலிருந்து புதுப்பேட்டை செல்லும் வழியில் அமைந்துள்ளது படைவீட்டம்மன் கோவில்.
7.ஶ்ரீ தன்வந்திரி பெருமாள் கோவில்
பண்ருட்டி நான்கு முனை சந்திப்பின் அருகே கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது தன்வந்தரி பெருமாள் கோவில்.
8.ஶ்ரீ காசிவிஸ்வநாதர் கோவில்
பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையில் கடைவீதியில் அமைந்துள்ளது காசிவிஸ்வநாதர் திருக்கோவில்.
9.சிஸ்டகுருநாதர் திருக்கோயில்
பண்ருட்டியிலிருந்து சுமார் 8கிமீ தொலைவில் உள்ளது திருத்துறையூர் சிஸ்டகுருநாதர் திருக்கோயில், ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிக பழமையான பாடல் பெற்ற சிவ ஸ்தலம்...ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
பண்ருட்டியை சுற்றியும் சுமார் 2 கிமீ சுற்றளவில் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற பல திருத்தலங்கள் அமைந்துள்ளது...
சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்தை பற்றியும் தென் பெண்ணை ஆற்றை பற்றியும் இப்பதிகாரம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது,
"மலையார் அருவித் திரள்மா மணியுந்திக்குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்க
கலையார்அல்குற்கன் னியராடுந் துறையூர்த்தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே"
துறையூர் தலைவா என்று சிஸ்டகுருநாதரை பற்றி புகழ்ந்துள்ளார் சுந்தரர்.
பண்ருட்டியும் விவசாயமும் :
பண்ருட்டி முழுக்க முழுக்க விவசாயம் அதனை சார்ந்தே தொழில்களே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது...
இங்கு பெரும்பாலும் கரும்பு, கொய்யா, சவுக்கு, முந்திரி, பலா, மிளகாய், முருங்கை, கத்திரிக்காய் உள்ளிட்ட அனைத்து வகையான உணவுப் பொருட்களும் பயிரிடப்படுகிறது...
பண்ருட்டி காய்கறி மார்க்கெடிலிருந்து காய்கறிகள் பெரும்பாலும் விழுப்புரம், கடலூர் , பாண்டிச்சேரி , சென்னை போன்ற இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது...
பண்ருட்டியும் சுற்றுவட்டாரமும் :
பண்ருட்டியிலிருந்து சுமார் 21கிமீ தூரத்தில் கடலூரும், சுமார் 33 கிமீ தூரத்தில் விழுப்புரமும், சுமார் 47கிமீ தொலைவில் பாண்டிச்சேரியும், சுமார் 58 கிமீ தொலைவில் சிதம்பரமும் உள்ளது...
பண்ருட்டி பிரபலங்கள் :
1.பண்ருட்டி ராமச்சந்திரன்
2.வேல்முருகன் - தவாக
3.தங்கர்பச்சான் - இயக்குனர்
4.சினேகா - நடிகை
முக்கிய இடங்கள் :
1.அரசு மருத்துவமனை
2.நீதி மன்றம்
3.காவல்நிலையம்
4.சிறைச்சாலை
5.காந்திபூங்கா
6.திருவதிகை கோவில்கள்
7.பண்ருட்டி மணி கூண்டு 8.கெடிலம் ஆறு. 9.தென்பெண்ணை ஆறு 10.தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நினைவு வளைவு
தியேட்டர்கள் :
ஜெயராம் தியேட்டர், சரவணா தியேட்டர், புவனேஸ்வரி தியேட்டர் மற்றும் விஜயா தியேட்டர் அனைத்தும் பண்ருட்டி நகரிலே அமைந்துள்ளது...
சில புகைப்படங்கள் உங்களுக்காக:
காந்தி பூங்கா
நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம்,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்
பிழைகள் மற்றும் விடுபட்டவை இருந்தால் கமெண்ட் செய்யவும்...