வணக்கம் நண்பர்களே,
கொல்லிமலைக்கு பயணித்த ஒரு அனுபவத்தை உங்களுக்காக ஒரு பதிவாக பகிர்கிறேன்.
சுமார் 5 ஆண்டுக்கு முன் நான் பணிபுரிந்த முதல் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்ட மலை பகுதி சுற்றுலா இறுதியில் முடிவானது, அப்போது நாங்க தேர்ந்தெடுத்த இடம் கொல்லிமலை.
கொல்லிமலையும் அதன் சிறப்பையும் என் அனுபவத்தையும் குறிப்பிட ஆவலாய் உள்ளேன்.
பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள திருபுவனையிலிருந்து இரவில் தொடங்கிய எங்கள் பயணம் நண்பர்களின் ஆடல் பாடலுடன் இரவு முழுவதும் தொடர்ந்தது,
அதிகாலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் புத்துணர்ச்சிக்காக தேநீர் அருந்திவிட்டு மீண்டும் மலையை நோக்கிய பயணம் தொடர்ந்தது...
விடியற்காலையில் மலையை நெருங்கி ஏறும் வழியில் மேக கூட்டங்களை கைகளால் தொடுவது போல் ஒரு உணர்வு..இறுதியில் 1400 மீட்டர் உயர்ந்த மலையை அடைந்தோம்.
ஒரு அழகான கிராமத்தில் ஒரு விவசாயியின் நிலத்தில் அந்த மலையை பற்றி தெரிந்து கொண்டோம், கொல்லிமலை மூலிகை ராணி என்றே கூறுவார்கள் என்றார் அந்த பெரியவர், கொல்லிமலையில் கிடைக்காத மூலிகைகளே இல்லாததால் இந்த மலை அவ்வாறு அழைக்கப்படுவதாகவும் கூறினார் அந்த பெரியவர்..
பின் அந்த பெரியவரிடம் இருந்து விடை பெறும் போது 6 பலா பழம் கொடுத்தார் அந்த பெரியவர், இன்றும் மறக்க முடியாத அந்த நினைவுகள்..
வசந்த் அண்ணன் ஏற்பாடு செய்திருந்த புளி சாதத்துடன் காலை உணவு முடிந்தது, எங்கள் பயணம் முழுக்க ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியை நோக்கியே இருந்தது...
ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி:
ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி செல்ல 600 அடி பள்ளத்தில் 1000 படிகளை கடந்து முடிவில் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியை அடைந்தோம்...
குளிர்ந்த காற்றுடன் சிறு தூரல்கள் மேனியில் பட்டு செல்ல ஏதோ ஒரு புத்துணர்ச்சி பெற்றோம்...பின் 20 அடி ஆற்றில் நீந்திய படி நீர் வீழ்ச்சியில் குளித்தோம், கிட்ட தட்ட 3 மணிநேரம் நீர் வீழ்ச்சியிலே குளித்தோம்..
இந்த அருவியில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது
இன்று அதாவது (16.06.2021) அன்று உலக நீர்வீழ்ச்சி தினம் இந்த நாளில் என் நீர்வீழ்ச்சி குறித்த அனுபவத்தை பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
குளியல் முடித்து பின் மீண்டும் 1000 படிக்கட்டுகளை ஏறி மேல் வந்து, அங்கு அமைந்துள்ள அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தோம்...
12ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவில் அப்பர் அவர்களால் "அறப்பள்ள மகாதேவன் " என்று பாடியுள்ளார் என்று கோவிலில் வரலாற்றில் எழுதியுள்ளனர்.
அருகில் படகு சவாரி இருப்பதாக அறிந்து அங்கு சென்ற போது தண்ணீர் இன்றி வரண்டு இருந்ததால் ஏமாற்றம் அடைந்து, பின் அருகில் இருந்த காடுகள் வழியாக பக்கதில் இருந்த கிராம சந்தைக்கு சென்று மிளகு, சீரகம், போன்றவற்றை வாங்கி பின் தாவரவியல் பூங்காவிற்கு சென்று சுற்றி பார்த்தோம் அதற்கே மாலை நேரமாகி போனது..
அதோடு எங்கள் பயணத்தை நிறைவு செய்தி கொண்டு வீட்டை நோக்கி திரும்பினோம்...ஆனால் இந்த அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியான தருணமாக இருந்தது..
இந்த பயணத்தில் அறிந்து கொண்டது கொல்லிமலையை சுற்றி பார்க்க ஒரு நாள் போதாது, குறைந்தது இரு நாட்களாவது தேவை..
அடுத்த முறை கொல்லிமலை பயணம் செய்தால் குறைந்தது இரெண்டு நாளாவது தங்கி சுற்றி பார்த்தால் தான் அந்த அனுபவம் மேலும் சிறப்பாக இருக்கும்..
கொல்லிமலையில் நாங்கள் பார்க்காத சிறப்புகள் இவைகள்:
1.எட்டு கை அம்மன்.
2.வல்வில் ஓரி வாழ்ந்த இடம்
3.kolli malai View Point(காட்சி முனையம்)
4.சித்தர்கள் குகை
5.மூலிகை அருவி
கொல்லிமலையில் காண வேண்டிய சிறப்பு இடங்கள் உள்ளன, நீங்க கொல்லிமலை பயணம் செய்ய விரும்பினால் கண்டிப்பாக நல்ல திட்டமிடல் மற்றும் தங்கி சுற்றி பார்ப்பது போல் சென்றால் கொல்லிமலையை ரசிக்கலாம்...
நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம்,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்
நன்றி வசந்த் அண்ணா, கேப்டன் இமயன், புஷ்பராஜ், ஆனந்தன், சந்துரு, ராஜசேகர், சதிஷ் அண்ணன், ராஜ்குமார், K.சதிஷ்குமார், செந்தில் அண்ணா, தனசேகர், பிரசாத், தாமோதரன்,சிவசக்தி அண்ணா, செல்வா மற்றும் Brite நண்பர்கள்.
அருமையான பதிவு.. அழகா சொல்லிருக்கீங்க நண்பா.. படிக்க படிக்க பயணம் செய்வது போலொரு உணர்வு.. உங்கள் வார்த்தைகள் அழகா பயன்படுத்திருக்கீங்க.. Keep rocking..
பதிலளிநீக்குநன்றி புரோ
நீக்குSuper bro 👌👌 நானும் ஒரு நாள் கொல்லிமலை பயணம் செய்ய வேண்டும்
பதிலளிநீக்குThanks bro.. இரெண்டு நாள் தங்கி சுத்தி பாக்குற மாதிரி போங்க...செம லோகேஷன், மலைவாழ் மக்கள் சந்தை சூப்பரா இருக்கும்..
நீக்கு