வணக்கம் நண்பர்களே,
பழைய நாணயங்கள் மற்றும் 786 என்று முடியும் அல்லது ஆரம்பிக்கும் பணத்திற்கு 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஆன்லைனில் விற்பனையாகிறது என்று பரவும் செய்தியை பற்றியே இந்த பதிவு...
சில நாட்களாக வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளத்தில் பரவி வரும் ஒரு செய்தி தான் பழைய நாணயம் கொடுத்தால் பதிலுக்கு லட்சக்கணக்கில் பணம் தருவார்கள் என்பதே.
1994, 1996 ஆம் ஆண்டு என அச்சடிக்கப்பட்ட 2 ரூபாய் நாணயம், பழைய 20 பைசா, UK One Anna Coil 1818 மகாலட்சுமி அச்சடிக்கப்பட்ட நாணயம், வைஷ்ணவி தேவி அச்சடிக்கப்பட்ட 5ரூபாய் நாணயம், 786 என் முடியும் அல்லது ஆரம்பிக்கும் நோட்டுகள் போன்ற நோட்டுகளுக்கு 5,00,000 முதல் 20,00,000 தருவதாக வரும் செய்தியில் பிரபல பழைய பொருட்களை விற்கும் வலை தளத்தில் உங்கள் நாணயத்தில் படத்தை பதிவேற்றி உங்கள் நாணயத்திற்கான விலையை நீங்களே நிர்ணயிக்க வேண்டும்...
அவ்வாறு பதிவேற்றினால் வாங்க விருப்பம் உள்ளவர்கள் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் நிர்ணயித்த பணத்தை கொடுத்துவிட்டு உங்களின் நாணயத்தை வாங்கி கொள்வார்கள் என்ற பதிவு சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
உண்மையா? அல்லது பொய்யா ??
தமிழக நாணயவியல் சங்க தலைவர் மணிகண்டன் அவர்கள் தெரிவிப்பது சமூக வலைதளத்தில் பரவி வரும் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்றே...
எதற்காக இந்த தகவல் பரப்பப்பட்டது என்று அலசிய பார்த்ததில் Coin Bazzar இணைய தளத்தில் நாம் வைத்திருக்கும் நாணயத்தை விற்க மூன்றாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை கேட்கப்படுகிறதாம்...
ஐந்து லட்சத்திற்கு ஆசை பட்டு ஐம்பதாயிரம் வரை சிலர் இழந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது..
இனியாவது பொய்யான தகவல்களை சரியானதா என உறுதி செய்யாமல் நம்ப கூடாது...
அளவுக்கு மீறிய ஆசை உள்ள வரை சதுரங்க வேட்டை தொடரும்...
நன்றி 🙏..
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்