வணக்கம் நண்பர்களே,
நீர் நிலையின் ஆதாரமான மழை பற்றிய இந்த பதிவு..
மழை :
மழையை வெறுக்கும் மனிதர்களும் உண்டோ இவ்வுலகிலே
இயற்கையின் ஓர் உன்னத படைப்பு மழை, பஞ்ச பூதங்களில் நீர் அடங்கும், அந்த நீர் ஆதாரமே இந்த மழை தான்...
மழையை மாரி என்றும் அழைப்பர்.
மாரி பெய்தால் -
மானாவாரி பயிர்களை விதைக்க காத்திருக்கும் ஒரு விவசாயிக்கு ஒரு துளி மழை ஒரு தங்ககாசுக்கு ஈடாக மதிக்கப்படுகின்றது, வறண்டு கிடக்கும் ஆறு குளங்களை உயிர்
பெற வைக்கும், வெய்யிலின் தாக்கத்தின் துவண்டு கிடக்கும் மக்களின் நெஞ்சங்களை குளிர்விக்கும், மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கும்..
மனிதன் மழைக்காக காத்திருப்பது போல் மழையும் நிலத்தை அடைய காத்திருக்கிறது, முகில்களில் இருந்து பிரியும் மழையோ குளம், ஆறு, கடல் சேரும் வரை நீண்ட பயணம் செய்கிறது..
இயற்கையின் மழை கோபம் கொண்டால் உலகமே தாங்காது.
மழையின் கோர தாண்டவத்தால் ஆற்றின் வெள்ளத்தால் அடையும் சேதத்தை பார்த்தாலே மழையின் வலிமை புரியும்..
மரங்களையும் காடுகளையும் அழித்ததின் விளைவு தான் இப்போது தகுந்த காலத்தில் மழை வராமல் பஞ்சத்தை ஏற்படுத்துகிறது, காலம் தாழ்ந்த வரும் மழைகளால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது...
மழையின் ஆதாரமான மரங்களை வளர்த்து மழையை தொடர்ந்து பெறுவோம்...
நன்றி, அடுத்த பதிவில் சந்திப்போம்..
தயாரிப்பு : தமிழரசன் சண்முகம்