வணக்கம் நண்பர்களே,
கடந்த சில மாதங்களாக ATM இயந்திரத்தில் வைக்கப்பாடாத 2000ரூ நோட்டு பற்றியே இந்த பதிவு...
பண மதிப்பிழப்பு:
2016ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி இந்திய பிரதமர் மோடி அவர்களால் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பின் படி அன்று பெரிதும் புழக்கத்தில் இருந்த 500ரூ மற்றும் 1000ரூ நோட்டுகளை செல்லாமல் போனது..
குறிப்பிட்ட நாட்களுக்குள் பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய 500ரூ மற்றும் 2000ரூ நோட்டுக்களாக மாற்றவேண்டும் என்ற அறிவிப்பால் காரணமாக அனைத்து வங்கிகளிலும் மக்கள் தாங்கள் வைத்திருந்த 1000ரூ மற்றும் 500ரூ நோட்டுகளை மாற்ற தொடங்கினர்...
ஒரு நாளுக்கு ஒரு நபர் 2000ரூபாயை மட்டுமே மாற்ற முடியும் என்ற அறிவிப்பால் மக்கள் வங்கிகளில் வரிசையில் நின்று பெரும் இன்னல்களை அனுபவித்தனர், ஆனால் சில பணக்கார தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வங்கி அதிகாரிகள் துணையோடு தங்கள் பதுக்கி வைத்திருந்த பழைய நோட்டுகளை மாற்றிக்கொண்டார்..பண மதிப்பிழப்பால் பெருதும் பாதிக்கப்பட்டது ஏழைகள் மட்டுமே..
அதன் பின் அனைத்து ATM இயந்திரத்திலும் புதிய நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் மற்றும் 2000ரூயை புழுக்கத்தில் கொண்டு வந்தது மத்திய அரசு...
மாயமாகும் 2000ரூ நோட்டு:
தொடர்ந்து புழக்கத்தில் இருந்த 500ரூபாய் மற்றும் 2000ரூபாய்களில் கடந்த சில மாதங்களாக 2000ரூபாய் நோட்டுகள் மட்டும் புழக்கத்தில் இருந்து குறைந்து வருகின்றது...
சிலர் சமூக ஊடகத்தில் 2000ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதாகவும் அதனால் தான் 2000ரூ நோட்டுக்கள் பெரிதும் புழக்கத்தில் இல்லை என்ற வதந்தியை பரப்பி வருகின்றனர்..ஆனால் உண்மையில் 2000ரூ நோட்டுக்களை மதிப்பு இழக்க வைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என தெரியவந்துள்ளது...
கடந்த சில மாதங்களாக ATM இயந்திரத்தில் 2000ரூ நோட்டுகள் வைக்கப்படுவதில்லை..அதனால் சில மாதமாக ATM இயந்திரத்தில் 100ரூபாய் மற்றும் 500ரூபாய் நோட்டுகள் மட்டுமே வைக்கப்பட்டு வருகின்றது, அதனால் மக்கள் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் ATMல் 2000ரூ நோட்டுகள் வெளிவருவது இல்லை...
தொடர்ந்து 2000ரூபாய் நோட்டுக்கள் பல தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதிகளால் பதுக்கப்பட்டு வருகின்றது, இதனால் 2000ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து குறைய தொடங்கியது..
கொரோனா பேரிடர் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி கண்டுள்ள இந்திய அரசின் பணவீக்கம் காரணமாகவும் புதிய 2000ரூ நோட்டுக்கள் அச்சிடப்படவில்லை...
இதன் காரணமாகவே 100ரூபாய், 200ரூபாய், மற்றும் 500ரூபாய் நோட்டுகளே பெரிதும் புழக்கத்தில் இருந்து வருகின்றது...
இது போல் 2000ரூபாய் நோட்டுக்களை பதுக்குவதால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடையும், மற்றம் நிதி நெருக்கடியில் சிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்...
அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பணத்தை பதுக்குவது ஏழை மக்களுக்கும் இந்திய நாட்டுக்கும் செய்யப்படும் பெரிய தூரோகம் ஆகும்...
ஜெய்ஹிந்த் 🙏..
அடுத்த பதிவில் சந்திப்போம்,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்