வணக்கம் நண்பர்களே,
வெளிச்சத்தில் பிறந்து இருட்டில் தடம் தெரியாமல் போகும் நிழலை பற்றியே, உண்மையுடன் நெருங்கி உள்ள நிஜத்தை பற்றியுமே இந்த பதிவு...
நிழலும் நிஜமும்
வெளிச்சத்தில் பிறக்கும் நிழல், நிஜத்தில் நிழலும் கானல் நீராகிவிடுகிறது...
சோகம், சுகம் வெளிப்படுத்த தெரியாத நிழல், நிஜத்தின் விதிவிலக்கு...
இருட்டில் நடை போட தெரியாது ஆனால் கொஞ்சம் வெளிச்சம் கிடைத்தால் கூட திமிராக நம்மை கிண்டல் செய்கின்றது...நாம் நடந்தால் நடக்கும் நாம் நின்றால் நிற்கும்..
வெளிச்சம் எதிரில் இருந்தால் நிழல் நம் பின்னும் வெளிச்சம் நம் பின் இருந்தால் நிழல் நம்மை முந்தியும் செல்லும்...
கானல் நீர் மற்றும் நிழல் பெரும் வித்தியாசம் இல்லை..
பொய்மைக்கும் நிழலுக்கும் மற்றும் உண்மைக்கும் நிஜத்திற்கும் பெரும் ஒற்றுமை உண்டு..
பொய் மற்றும் நிழல் நெடு நேரம் பயணம் செய்யாது..
வெளிச்சம் பின் இருக்கும் போது நிழல்(பொய்) நம்மை வென்றாலும் இறுதியில் நிஜம் (உண்மையே வெல்லும்)..
நிழலின் நிறம் கருப்பு, நிஜத்தின் நிறம் உண்மை...
நிழல் நிஜமாகினால் நேசிக்கிறோம், நிழல் பொய் ஆனால் வெறுக்கிறோம்..
நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம்,
தயாரிப்பு : தமிழரசன் சண்முகம்