வணக்கம் நண்பர்களே,
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஒரு முறையாவது பயணம் செய்து இருப்போம், அந்த பயணத்தை பற்றியே இந்த பதிவு...
பயணங்கள் மனிதனாய் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு பயண அனுபவம் மறக்க முடியாததாய் அமைந்திருக்கும்...
நண்பர்களுடன் பயணம், தனிமை பயணம், உறவுகளுடன் பயணம், குடும்பத்தினருடன் என பயணம் யாருடனாவது தொடர்புடன் இருக்கும்...
மனிதனின் பயணம் குழந்தையாய் பிறந்ததிலிருந்து வாழ்க்கை என்ற பயணத்துடன் பயணம் சொய்து கொண்டுள்ளது..
மனிதன் பயணம் செய்கிறான், பறவை பயணம் செய்கிறது, பூச்சி இனங்கள் பயணம் செய்கின்றது, இலைகள் பயணம் செய்கின்றது, விதைகள் பயணம் செய்கின்றது, காய் கனிகள் பயணம் செய்கின்றது, நீர் பயணம் செய்கின்றது, காற்று பயணம் செய்கின்றது, நிலா பயணம் செய்கின்றது ஆக இயற்கையை சார்ந்துள்ள அனைத்து உயிரினங்களும், ஆசையும் அசையா பொருட்களும் பயணம் செய்கின்றது..
பயணமும் அதன் முடிவும் :
மழை நீர் கடல் சேரும் வரை பயணிக்கின்றது.
விதை மரமாகி மீண்டும் விதை ஆகும் வரை பயணம் செய்கின்றது.
வார்த்தை கவிதையாகவும் வரை பயணம் செய்கின்றது.
வரிகள் பாடல் ஆகும் வரை பயணம் செய்கின்றது.
கதை படம் ஆகும் வரை பயணம் செய்கின்றது.
தங்கம் நகை ஆகும் வரை பயணம் செய்கின்றது.
மனிதன் உரமாகும் வரை பயணம் செய்கின்றான்.
உரம் மண் ஆகும் வரை பயணம் செய்கின்றது.
பணம் பதுக்கபடும் வரை பயணம் செய்கின்றது.
நெல் சாதம் ஆகும் வரை பயணம் செய்கின்றது.
நெருப்பு சுடும் வரை பயணம் செய்கின்றது.
கற்பனை நினைவாகும் வரை பயணம் செய்கின்றது.
வெளிச்சம் இருள் வரும் வரை பயணம் செய்கின்றது.
இருள் வெளிச்சம் வரும் வரை பயணம் செய்கின்றது.
வெறுப்பு பகை ஆகும் வரை பயணம் செய்கின்றது.
காற்று சத்தம் ஆகும் வரை பயணம் செய்கின்றது.
தோல்வி வெற்றி அடையும் வரை பயணம் செய்கின்றது.
மேகம் மழை ஆகும் வரை பயணம் செய்கின்றது.
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் ஏதோ ஒரு வகையில் தங்கள் பயணத்தை செய்துகொண்டே உள்ளது..
பயணம் அனுபவமாகும், அனுபவம் வழி நடத்தும், வழி பின் வருவோருக்கு வழிகாட்டியாய் இருக்கும், பயணம் மட்டும் பயணம் செய்யாது பின் வருபவர்களுக்கு வழிகாட்டியாய் அமைந்து இருக்கும்.
பயணம் முடிவதில்லை வெறும் தொடக்கமே...
நன்றி...
தயாரிப்பு : தமிழரசன் சண்முகம்
தொடர்ந்து 2500 பார்வையாளர்களை கடந்தது செந்தமிழ் தென்றல் வலை பக்கம்..
ஆதரவுக்கு நன்றி நண்பர்களே...🙏
சிறப்பு.. உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள் நண்பரே..
பதிலளிநீக்குநன்றி புரோ 💕
நீக்குNice information machan
பதிலளிநீக்குThanks macha...
நீக்கு