பேருந்து பயண அனுபவம்

வணக்கம் நண்பர்களே,

        பல கனவுகளோடும், பல கடமைகளோடும், பல அனுபவங்களோடும் ஒரிடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு செல்லும் பயணிகளை சுமந்து செல்லும் பேருந்தை பற்றியும் அதன் பயணம் பற்றியும் சில வரிகள்..

    தன் எதிர் காலத்துக்காக பேருந்தில் பயணம் மாணவர் கூட்டம், தன் கடமைக்காக பேருந்தில் பயணம் செய்யும் ஒரு கூட்டம், வீட்டிற்கு தேவையானதை வாங்க சந்தைக்கு செல்லும் ஒரு கூட்டம், கனவுகளோடு வேலை தேடி செல்லும் ஒரு கூட்டம், தன் பேர குழந்தைகளை கண்டு மகிழ்ச்சி அடைய செல்லும் ஒரு கூட்டம், மருத்துவ சேவைக்காக ஊர் தாண்டி செல்லும் ஒரு கூட்டம், வெளியூரிலிருந்து வேலை செய்து விட்டு சொந்த ஊருக்கு செல்லும் ஒரு கூட்டம் என ஒவ்வொருவரும் பல தேவைக்காகவும், கனவுக்காகவும், எதிர்காலத்துக்காகவும் பேருந்தில் பயணம் செய்கின்றனர்...

    வயதானவர்கள் பேருந்தின் இருக்கையை தேடியும், வயது வந்தோர் தன்னோட இளம் வயது ஜோடியை தேடியும், ஜன்னல் விரும்பிகள் ஜன்னல் சீட்டை தேடியும் தொடங்கும் பேருந்து பயணமானது சிலருக்கு தான் விரும்பி தேடும் இடம் கிடைத்தும், சிலருக்கு ஏமாற்றமும் கிடைக்கும்...

பயணமும் எண்ணங்களும் :

    புது ஊருக்கு செல்லும் பயணி தன் செல்லும் நிறுத்தத்தை எதிர்பார்த்து கொண்டே நெஞ்சில் சில பட படப்புடனும் அவரது நிறுத்தம் தாண்டிவிட்டோமோ என்ற எண்ணத்திலே அவர்களின் பயணம் சிலர்...

    நடத்துனரிடம் கொடுத்த பணத்தின்  மீதி சில்லரையை தருவாரா என்று எண்ணியே பயணம் செய்யும் சிலர்..

   சில பெரியவர்கள் தான் வாயில் வைத்துள்ள வெற்றிலை எச்சிலை துப்ப சரியான நேரம் பார்த்தே பயணம் செய்யும் சிலர்..

   நீண்ட நேரம் நின்றே பயணிக்கும் பயணி அடுத்த நிறுத்தத்திலாவது சீட்டு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் பயணிக்கும் சிலர்...

   பாலம் வரும் வழியில் அமைந்துள்ள ஆற்றை காண காத்துக்கொண்டு பயணிக்கும் சிலர்..

   இந்த முறையாவது வேலை கிடைத்துடுமா என்று எண்ணிக் கொண்டே பயணம் செய்யும் சிலர்...

   திருவிழாவை காண நீண்ட தூரம் ஆர்வத்துடன் பயணிக்கும் சிலர்..

   விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்காக ஏக்கத்துடன் வெளியூர் செல்லும் சிலர்...

   அடுத்து பேருந்தில் எந்த பாட்டு ஓடும் என எதிர்பார்த்து பயணிக்கும் சிலர்...

   வெளியூரில் வேலை முடித்துவிட்டு குழந்தைகளை காண ஆவலுடன் பயணிக்கும் சிலர்..

       இப்படி வெவ்வேறு காரணங்கள், வெவ்வேறு எண்ணங்களுடன் செல்லும் பயணிகளை சுமந்து செல்லும் பேருந்தும் அதன் அனுபவங்களும் நெஞ்சில் அழியாது..

    பேருந்து பயணம் சிலருக்கு வெறுப்பை தந்தாலும் பலருக்கு அதுவும் ஒரு அழகான அனுபவங்களே..

நன்றி வணக்கம்,

தொகுப்பு : தமிழரசன் சண்முகம்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads