Important dates August ஆகஸ்டு மாத முக்கிய தினங்கள்-

வணக்கம் நண்பர்களே,

  இந்த பதிவில் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள முக்கிய தினங்களை பற்றி பார்ப்போம்..


ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள்
August month important days  :


ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா தினம்


ஆகஸ்ட் 7 - தேசிய கைத்தறி தினம்


ஆகஸ்ட் 8 - நண்பர்கள் தினம்


ஆகஸ்ட் 9 - நாகசாகி தினம்


ஆகஸ்ட் 12 -International day of Indigenous People (கருப்பர்கள்/ பழங்குடியினர் தினம்) மற்றும் இளைஞர்கள் தினம்


ஆகஸ்ட் 13- உலக உறுப்புதான தினம்


ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திர தினம்


ஆகஸ்ட் 19 - உலக மனிதநேய தினம்


ஆகஸ்ட் 22 - ரக்ஷா பந்தன்


ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம் (National Sports Day)


ஆகஸ்டு 6 - ஹிரோஷிமா தினம்


     உலக வரலாற்றின் மிகப்பெரிய பேரழிவு - ஹிரோஷிமா குண்டு வெடிப்பு நிகழ்ந்த தினம் ஆகஸ்டு 6...


    ஜப்பான் நாட்டில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் ஜப்பான் தன் பொருளாதாரத்தின் அடிமட்டத்திற்கே சென்றது...


ஆகஸ்டு 7 -  தேசிய கைத்தறி தினம்


      நாடு முழுவதும் ஆகஸ்டு 7 தேசிய கைத்தறி தினம் (National handloom day) கொண்டாடப்படுகின்றது..


     இந்தியாவில் பெருமை கொண்ட கைத்தறி மற்றும் நெசவாளர்களை இந்த தினத்தின் போற்றுகிறோம்..


ஆகஸ்ட் 8 - நண்பர்கள் தினம்


      ஆகஸ்டு 8 உலக நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது..


      நண்பர்களின் நட்பையும், பாசத்தையும் பகிர்ந்து கொள்ளவும், நட்பு மற்றும் நண்பர்கள் இந்த தினத்தில் போற்றபடுகின்றனர்..


ஆகஸ்ட் 9 - நாகசாகி தினம் :


    ஆகஸ்டு 9ம் நாள் நாகசாகி தினம் கடைபிடிக்கப்படுகின்றது, ஜப்பானின நாட்டில் நடந்த ஹிரோஷிமா குண்டு வெடிப்பை தொடர்ந்து நாகசாகி நகரிலும் அதே போல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த கருப்பு நாள்...


   இதன் பின் ஜப்பான் பொருளாதாரத்தில் மீள பல வருடங்கள் ஆனாலும் தற்போது பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்து வாழாத நாடாய் திகழ்கின்றது..


ஆகஸ்ட் 12 - International day of Indigenous People :


       United State உள்ள பழங்குடி மக்களின் உரிமைகளுக்கும், பாதுக்காப்பிற்கான விழிப்புணர்வுக்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது..


ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம் :


  
      ஆகஸ்ட் 12ம் நாள் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது..


ஆகஸ்ட் 13 - உலக உறுப்புதான தினம் :


     உடல் உறுப்புகளை தானம் செய்வதை வலியுறுத்தும் விதமாகவும் உறுப்பு தானத்திற்கான விழிப்புணர்வுகாகவும் உலகம் முழுவது கடைபிடிக்கப்படுகின்றது..


ஆகஸ்ட் - 15 : இந்திய சுதந்திர தினம்( Independence Day): 


    ஆகஸ்ட் 15 ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து பெரும் போராட்டங்களுக்கு பிறகு இந்தியா சுதந்திரம் பெற்றது..


    இதனை தொடர்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் விதமாக நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் நாள் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது..


ஆகஸ்ட் 19 : உலக மனிதநேய தினம்(world Humanitarian Day) :


     ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் மனித நேயத்தை போற்றும் வகையில் உலக மனித நேய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது..


ஆகஸ்ட் 22 - ரக்ஷா பந்தன் (Raksha Bandhan)


    சகோதரத்துவத்தை போற்றும் வகையில் சகோதரிகள் தங்களுக்கு பிடித்த நபர்களை கையில் கயிறு கட்டி சகோதரர்களாக ஏற்கும் தினம் ரக்ஷா பந்தன், இது இந்தியாவில் வட நாட்டில் பொதுவாக கொண்டாடப்படுகின்றது..


ஆகஸ்ட் 29- தேசிய விளையாட்டு தினம்(National Sports Day) :


    ஹாக்கி வீரர் தயன்செண்ட் பிறந்த தினமான ஆகஸ்ட் 29ஐ இந்தியாவில் விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது..


நன்றி 🙏


தொகுப்பு : தமிழரசன் சண்முகம்

    

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads