வணக்கம் நண்பர்களே,
நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த அனைத்து செயல்களும் சமூக வலைதளத்தில் வைரல் ஆனாது..அதனை தொடர்ந்து வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் போனி கபூர், அதனை தொடர்ந்து வலிமை படத்தின் ஒரு பாடல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு தொடர்ந்து சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது...
சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்து வரும் "அண்ணாத்த " கடந்த ஆண்டு வெளிவருவதாக படக்குழு அறிவித்திருந்தது, ஆனால் கொரோனா காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு முழுமை பெறாமல் போனது, அதனை தொடர்ந்து அண்ணாத்த படம் இந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது...
அஜித் ரசிகர்கள் போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களும் அண்ணாத்த அப்டேட் கேட்டு சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றது...
கடந்த ஆண்டு வரை Shooting Spot போட்டோவை வெளியிட்டது, அதன் பின் first look Soon என வெளியிட்ட படக்குழு அதன் பின் இதுவரை அண்ணாத்த அப்டேட் தரவில்லை, இதற்கிடையில் விஜய்,தனுஷ், சூர்யா என பல நடிகர்கள் நடிக்கும் படம் பற்றிய அப்டேட் தொடர்ச்சியாக வந்துகொண்டிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..
அண்ணாத்த கடந்து வந்த பாதை :
சன் பிக்சர்ஸ் தன் ட்வீட்டர் பக்கத்தில் முதன் முதலில் அக்டோபர் 11ம் தேதி 2019ம் ஆண்டு Thalaivar168 என்ற பெயரில் முதல் அறிவிப்பை வெளியிட்டது..
Thalaivar168 - First Anouncement
அதனை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா என்றும், இசையமைப்பாளர் இமான் என்றும், அதன் பிறகு மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதிபாபு போன்றவர்கள் தொடர்ந்து அறிவித்தது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்...
டிசம்பர் 11ம் தேதி 2019ம் ஆண்டு Thalaivar168 படத்தின் பூஜை நடைபெற்றது..
பிப்ரவரி 24ம் தேதி 2020ல் தலைவர் ரஜினியின் போட்டோ இல்லாத அண்ணாத்த டைட்டில் மோஷன் போஸ்டர் சன் பிக்சரால் வெளியிடப்பட்டது.. அதுவரை Thalaivar168 என அழைக்கப்பட்டது, பின் அண்ணாத்த என பெயரிடப்பட்டது..
இதனை தொடர்ந்து அண்ணாத்த திரைப்படம் 2021 பொங்கல் அன்று வெளியாகும் என்பதை திரைப்பட குழு அண்ணாத்த பொங்கல் என அறிவித்தது...
இதனை தொடர்ந்து கொரோனா காரணமாக அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் போனது..
மீண்டும் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாதில் நடைபெற்றது, அப்போது திரு.ரஜினிகாந்த் அவர்களில் உடன் இருந்த படக்குழுவினருக்கு கொரோனா இருந்ததால் நடிகர் ரஜினிக்கும் பரிசோதனை செய்யப்பட்டு பின் கொரோனா தொற்று இல்லை என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாதில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் ரஜினிகாந்த்...
29ம் தேதி டிசம்பர் மாதம் 2020ம் ஆண்டு உடல் நலம் காரணமாக அரசியல் கட்சி ஆரம்பிக்க முடிவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ரஜினிகாந்த் அவர்கள்..
அதன் பின் படத்தை பற்றிய பெரிய அறிவிப்பு ஏதும் வராத நிலையில் கடந்த மாதம் அண்ணாத்த முதல் தோற்றம் விரைவில் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனர் ட்வீட்டரில் வெளியிட்டது...
இந்த ஆண்டு தீபாவளி அன்று அண்ணாத்த வெளியாகும் என்று அறிவித்த படக்குழு, இதுவரை அண்ணாத்த முதல் தோற்றத்தை வெளியிடவில்லை...அண்ணாத்தவின் முதல் தோற்றம் கேட்டு ட்வீட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்..
இன்னும் கொரோனா தொற்று காரணமாக திரையரங்கம் திறக்கப்படாத நிலையில் கொரோனா மூன்றாம் அலை பெரும் பாதிப்பை தந்தால் இந்த வருடம் அண்ணாத்த திரைப்படம் வெளியாகாது என சினிமா பிரபலங்கள் தெரிவிக்கின்றனர்...
அண்ணாத்த நூறு சதவீதம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என படக்குழுவினர் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றனர்...
வரும் விநாயகர் சதுர்த்தி தினமான 10.09.2021 அன்று அண்ணாத்த படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என்று சமூக வலைதளத்தில் செய்திகள் பரவிக்கொண்டுள்ளது, ஆனால் இது வரை அண்ணாத்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் படத்தின் முதல் தோற்றம் வெளியாவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...
தந்தி நியூஸ் - அண்ணாத்த First look news
இந்த செய்தியை கொண்டாடும் விதமாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவத்திற்கு முதல் தோற்றம் வெளியிடுவதை வலியுறுத்தியும் சமூக வலைதளத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் Common DP ரீலீஸ் செய்தி கொண்டாடி வருகின்றனர்...விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் முதல் தோற்றம் வெளிவருமா பொருத்திருந்து பார்ப்போம்..
ஏற்கனவே திரு.ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்தை திரைப்படத்தை பார்த்து விட்டு இயக்குனர் சிறுத்தை சிவா அவர்களை போனில் தொடர்ப்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
இந்த வருடம் தீபாவளி அன்றே அண்ணாத்த வெளியாகி மாபெரும் வெற்றியை படைக்கும் என நம்புவோம்...கொரோனா காரணமாக நலிவுற்ற சினிமா துறையும் திரையரங்க தொழிலாளர்களும், ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் மூலமே மீண்டும் புத்துணர்வு பெறும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்...
அண்ணாத்த முதல் தோற்றம் :
நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டரை செப்டம்பர் 10ம் தேதி வெளியிட்டது சன் பிக்சர்ஸ்...
அனல் பறக்கும் வசனத்துடன் முதல் தோற்றம் மோஷன் போஸ்டர் வடிவில் வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்
மோஷன் போஸ்டரில் இருந்த தெறிக்க விடும் வசனங்களால் படத்தின் மீது மேலும் ஆர்வம் துண்டதொடங்கியது...
பின் படத்தின் இரண்டாம் தோற்றத்தை ட்வீட்டரில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம்...
அதோட படத்தின் முதல் பாடல் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாளில் வெளியாகும் என சமூக வலைதளத்தில் செய்தி, பரவியது ஆனால் அதன் படி செப்டம்பர் மாதம் 25ம் தேதி பாடல் வெளியாகவில்லை..
SPBயின் அண்ணத்த பாடல் :
அக்டோபர் 1ம் தேதி சன்பிக்சர் வெளியிட்ட ட்வீட்டில் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் அக்டோபர் 4ம் தேதி 6 மணிக்கு வெளியாகும் என்ற செய்தியை வெளியிட்டது...
அதனை தொடர்ந்து அக்டோபர் 4ம் தேதியான இன்று மாலை 6மணிக்கு படத்தின் பாடலை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்....SPB கம்பீர குரலில் அண்ணாத்த அண்ணத்தா எனும் பாடல் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...மறைந்த பாடகர் SPBயின் கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது...
லிரிக்ஸ் வீடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வயதை கணிக்க முடியாதவாரும், முகத்தில் திருநீறு பூசி அருணாச்சலம், அண்ணாமலை ரஜினி போலும் வலம் வருகின்றார் நம்ம தலைவர்,...இளமை ததும்பும் ரஜினி + இமான் பாடல் + SPB + சிவா கூட்டணியில் பெரும் அண்ணாத்த திருவிழா ரசிகர்களுக்கு தீபாவளி அன்று காத்துள்ளது...
இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி- SPB பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று ட்வீட் செய்துள்ளார்...
நம்மை விட்டு SPB நீங்கினாலும் ஒலிக்கும் ஒவ்வொரு பாடலிலும் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்...
சூப்பர் ஸ்டார் படம் தீபாவளி அன்று வெளியாக 30 வருடத்திற்கு மேல் இருக்கும், சுமார் 30 வருடத்திற்கு பின் தீபாவளியின் வெளியாகும் அண்ணாத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேட்பை பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை...
அண்ணாத்த வெற்றி அடைய வாழ்த்துக்கள்...🤩
நன்றி,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்
சூப்பர் அண்ணா 🔥💯🥳
பதிலளிநீக்குநன்றி புரோ 💕
நீக்கு