வணக்கம் நண்பர்களே,
ஆடி அமாவாசை பற்றி இந்த பதிவு ட்வீட்டரில் @SSR_Sivaraj என்ற நண்பரின் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது...
மாத்ருப்யோ நமஹா
பித்ருப்யோ நமஹ
ஆடி அமாவாசை ஸ்பெஷல் :
திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது
[ஆஷாட] ஆடி அமாவாசை திதி.
இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம் நம்பிக்கையும் உள்ளது.
அவர்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தானதர்மங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும்.
இதனால்,அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை, அவரவர் குடும்ப வழக்கபடி முன்னோர்களுக்கு எந்த வகையில் வேண்டுமானாலும் வழிபாடுகள் செய்யலாம்.
புரோகிதர்களை அழைத்து யாகம்,திலஹோமம் செய்து வணங்கலாம்.
முடியாத பட்சத்தில் இறந்தவர்களின் போட்டோவுக்கு வீட்டில் மலர் மாலைகள் சூட்டி அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளை படைத்து வணங்கலாம்.
இறந்த அப்பா, அம்மாவுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், அப்பா,அம்மா இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசை புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம்.
துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகும்.
மகாளய அமாவாசையன்று புரோகிதர்களுக்கு எள் தானம் தருவது சிறப்பாகும்.சனீஸ்வரனுக்கு எள் எண்ணெய் விளக்கு ஏற்றி வணங்கலாம்.
ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை, துண்டு போன்றவற்றை வாங்கித் தரலாம்.
வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஏழை பெண்களுக்கு நல்லெண்ணெய் குத்து விளக்கு தானம் செய்யலாம்.
முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவு வைக்கலாம். பசுவிற்கு கீரை, பழ வகைகள் தரலாம். யானைக்கு கரும்பு, பழவகைகள், சர்க்கரை பொங்கல் அளிப்பதால் சகல தோஷங்களும் நீங்கி சுபிஷம் உண்டாகும்.
அமாவாசை நிறைந்த நாள் என்று சொல்லி நல்ல காரியங்களை ஆரம்பிக்கும் வழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.ஆனால், சாஸ்திரத்தில் இதுபற்றி எதுவும் சொல்லப்படவில்லை.
அமாவாசை என்பது இருட்டு நாள், நீத்தார் நினைவு நாள் என்றே பல சாஸ்திர நூல்களில் இருக்கிறது.
த்ரயோதசி திதி முதல் பிரதமை திதி வரை எந்த புதிய விஷயங்களும் ஆரம்பிக்கக் கூடாது.
ஆகையால் அமாவாசையன்று புது காரியங்கள் தொடங்குவது, அட்வான்ஸ் கொடுப்பது, அக்ரிமென்ட் போடுவது, வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது.
புண்ணிய மாதமான ஆடியில் வரும் அமாவாசையன்று இந்த செயலை செய்வது மிகமிக விசேஷமாக கூறப்படுகிறது.
குறிப்பு;- இன்று 08.08.2021 தான் ஆடி அமாவாசை இந்நாளில் முன்னோரை நினைவு கூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோமாக.
நன்றி வணக்கம் 🙏
தொகுப்பு : SSR சிவராஜ்
நன்றி : SSR Thread
வெளியீடு : செந்தமிழ் தென்றல்