கல்வராயன் மலை பயணம்

வணக்கம் நண்பர்களே,

      குளிர்ந்த காற்று, நீண்ட நீரோடை,   பசுமை நிறைந்த காடு, அபாயமான சாலை பயணம் நிறைந்த கல்வராயன் மலை பற்றியே இந்த பதிவு....

Kalvarayan - Senthamizh Tech VLOG


கல்வராயன் மலை:

    கல்வராயன் மலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராயபாளையம் அருகில் கல்வராயன் வட்டத்தில் இருக்கும் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி மற்றம் தேசிய வனப்பகுதியும் ஆகும்... 


 


   கடல் மட்டத்திலிருந்து 3800 அடி வரை‌ உயர்ந்து நிற்கின்றது இந்த கல்வராயன் மலை, 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கல்வராயன் மலை வெள்ளிமலை, கரியலூர், குண்டிக்குப்பம் போன்ற மலை கிராமங்களை கொண்டது...


   கல்வராயன் மலை "கரளர்" மற்றும் "வேடர்" என்கின்ற வேட்டைகாரர்கள் மலையில் அதிகம் வசித்து வருகின்றனர், இவர்கள் தங்களை கவுண்டர்கள் எனவும் கூறிகொள்கின்றனர்...


   விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் அங்குள்ள மக்களுக்கு நிலத்தை விவசாயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு பின் அவர்களுக்கு கடுமையான வரிகளை விதித்தாராம் பின் அந்த மக்களுக்கே அந்த நிலங்கள் பிரித்து தரபட்டதாகவும் கூறப்படுகின்றது... காஞ்சிபுரத்தை சேர்ந்த படை வீரர்கள் இங்கு வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது...


    சுமார் 50 வருடத்திற்கு முன் இந்த மலை கிராமங்களுக்கு சென்று வர காட்டு வழியையே பயன்படுத்தி வந்துள்ளனர் அந்த மக்கள், பின் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் வான்வழி போக்குவரத்தில் பயணிக்கும் போது மனித நடமாட்டத்தை பார்த்த அவர் பின் அந்த கல்வராயன் மலை கிராமத்திற்கு அனைத்து அரசு சலுகைகள் மற்றும் உரிமைகளை வழங்கினாராம், பின் அந்த மலை கிராமத்தில் சாலை வசதிகளை அமைத்துள்ளனர் பின் வந்த ஆட்சியாளர்கள்...


    கோடைகாலத்தில் நடைபெரும் கோடை விழா இங்க விமர்சையாக கொண்டாடப்படுகின்றது, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்று காரணமாக இங்க கோடை விழா நடைபெறாமல் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது...


   தற்போது கல்வராயன் மலையில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது...பள்ளிக்கூடம், மருத்துவ மனை, காவல் நிலையம், பேருந்து சேவை என அனைத்து வசதிகளும் உள்ளது...


    மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களின் தேவைக்காக வெள்ளிமலை என்ற கிராமத்திற்கே சென்று வருகின்றனர், வெள்ளி மலையில் காய்கறிகள், மளிகை, வீட்டு வசதி பொருட்கள் என அனைத்து மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது....


    மலை எங்கும் சிறு‌ சிறு கோவில்கள் காணப்படுகின்றது, மக்கள் அனைவரும் அந்த கோவில்களிலே வழிபாடு, திருமணம், வேண்டுதல் செய்கின்றனர்...


   வெள்ளிமலையில் உள்ள ஒரு அய்யனாரப்பன் கோவிலில் வித்தியாசமான வேண்டுதல் நடத்தப்பட்டு வருகின்றது, மக்கள் தங்கள் வைக்கும் வேண்டுதல் நிறைவேறினால் நாற்காலிகளை கோவிலுக்கு வழங்குகின்றனர், அந்த கோவிலை சுற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட நாற்காலிகள் இருப்பதை பின் இணைத்திருக்கும் புகை படத்தில் காணலாம்...


விவசாயம் :

   கல்வராயன் மலை பகுதியில் பெருதும் மரவள்ளி, தக்காளி, கத்தரிக்காய், மலை வாழை, நெல், சவுக்கு போன்றவை விவசாயம் செய்யப்படுகின்றது, சம தள பரப்பே இல்லாத இந்த பகுதியில் விவசாயம் செய்யப்படுவது பெரும் ஆச்சர்யம் நிறைந்ததாகவே உள்ளது....மலை முழுக்க பசுமையான தோற்றமே காணப்படுகின்றது...


 
   இங்கு விளைவிக்கப்படும் மரவள்ளி தக்காளி போன்றவை சேலம் மாவட்டத்தில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன...


   மானாவாரி விவசாயம் மட்டுமே நடை பெருகின்றது, மலை அருவி மற்றும் ஆறுகளில் இருந்தே விவசாயத்திற்கு மோட்டார் இயந்திரத்தின் மூலம் தண்ணீர் விவசாய நிலத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது...


சுற்றுலா தளங்கள் :

     கள்ளக்குறிச்சி மற்றும் கச்சிராயபாளையம் வழியாக கல்வராயன் மலை வருபவர்கள் கோமுகி அணையை பார்வையிட்டு பின் மலை ஏற தொடங்கலாம்...


  மலை ஏறும் போது பெரியார் நீர் வீழ்ச்சியை காணலாம், படகு துறையில் படகு சவாரி செய்யலாம், சிறுவர் பூங்காவில் விளையாடலாம், மேகம் நீர் வீழ்ச்சியை View Point மூலம் பார்வையிடலாம், மேகம் நீர்வீழ்ச்சிக்கு இறங்கி குளிக்கலாம்...




கல்வராயன் மலை Full View youtube


   மலையில் எந்த தடைகளும் இன்றி எங்கும் பாதுகாப்பாக சென்று திரும்பலாம்...எங்கும் பசுமையான நீர் நிலைகளும் குளிர்ந்த காற்றும் மனதிற்கு சிறந்த மகிழ்ச்சியை தருகின்றது...குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் உள்ளது, உணவகங்கள் வெள்ளி மலையில் உள்ளது...


    முடிந்த வரை இருசக்கர வாகனத்தில் சென்றால் அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்கலாம், முடிந்த வரை மழை காலத்தில் சென்று வந்தால் நீர்நிலைகள் நிரம்பி இருக்கும்...


     தமிழக அரசு கல்வராயன் சுற்றுலா தளங்களை சரியான முறையில் பராமரித்து பாதுகாத்தால் அரசுசால் நல்ல வருமானம் ஈட்ட முடியும்...


அதே போல் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மலைகளில்  மதுபாட்டில் போன்ற பொருட்களை உடைத்து மலைகளை அசுத்தம் செய்து வருவதை தவிர்த்தால் இயற்கையை சரியான முறையில் பாதுகாக்கலாம்...

Google Map

நன்றி...

தொகுப்பு : தமிழரசன் சண்முகம்


நன்றி : கவியரசன் கண்ணபிரான், தமிழரசன் ராமன், கணேஷ் கண்ணபிரான், சிவக்குமார் ஜெய்சங்கர்..

செந்தமிழ் தென்றல் : Blog

செந்தமிழ் Tech : YouTube Link



   

2 கருத்துகள்

கருத்துரையிடுக
புதியது பழையவை

Google auto Ads