வணக்கம் நண்பர்களே,
வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தோட கூடவே ஆபத்தும் வளர்ந்து வருகின்றது, சமூக வலைதளம் மூலம் ஏமாற்றும் நபர்களின் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியே இந்த பதிவு
ஆன்லைன் வசதிகள் :
சில வருடங்களுக்கு முன் நாம் சிரமப்பட்ட பல வசதிகளை தற்போது ஆன்லைன் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது....
முன் காலத்தில் dictionaryயில் தூக்கியபடி மாணவர்கள் முதல் அலுவலக பணியாளர் வரை சுற்றியதை நாம் அறிவோம், தற்போது அவை அனைத்தும் மொபைல் போன் மூலம் சுலபமானது, ஒரு வார்த்தையின் அர்த்ததை எந்த மொழியில் வேண்டுமானாலும் சுலபமாக்குக்கியது இந்த தொழில்நுட்பங்கள்...
ஒரு விஷயத்தை பற்றி அறிந்து கொள்ள அது சம்மந்தப்பட்ட துறையில் உள்ளவரிடம் கேட்டு தெரிந்துகொண்ட காலம் மாறி Google/ youtube மூலம் அனைத்து வகையான நமது சந்தேகத்தையும் உடனுக்குடன் வீடியோ மற்றும் கட்டுரைகள் மூலம் தெரிந்துகொள்ளமுடிகின்றது...
சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இன்னொரு நபருக்கு வங்கி மூலம் பணம் செலுத்த சம்மந்தப்பட்ட வங்கிக்கு சென்று பணம் அனுப்பினர், அதற்கு முன் அஞ்சல் துறையின் மணி ஆர்டர் மூலமே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பணம் அனுப்பப்பட்டது..ஆனால் தற்போது ஒருவரின் மொபைல் எண் மூலம் அவரது வங்கி கணக்கில் நொடி நேரத்தில் பணம் செலுத்தும் டிஜிட்டல் மணி(UPI) தொழில்நுட்பம் மூலம் சுலபமாக பணம் அனுப்பமுடிகின்றது...
பணம் அனுப்ப நாம் பயன்படுத்தும் Google pay, Phone Pay, Amazon pay, paytm, MI pay என UPI idயுடன் லிங்க் செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் சுலபமாக பணம் அனுப்ப முடியும்....
இவ்வாறு நாம் பயன்படுத்தும் இந்த பண பரிமாற்ற செயலிகளை ஆன்லைன் fraud அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்...
ஆன்லைன் Frauds & Prevention :
ஆன்லைனில் எப்படி எல்லாம் பணத்தை ஏமாற்றுவார்கள் 👇 அதை அப்படி ...
Don't share ATM details & OTP No ;
வங்கி அதிகாரி போல் நமக்கு போன் செய்து உங்கள் ATM / Account லாக்/Lock ஆனது என்று உங்களில் கூறி அதை சரி செய்ய உங்கள் ATM 16 இலக்க எண்ணையும், உங்கள் மொபைல் போனில் வரும் OTP (One Time Password) ஐ சொல்ல வேண்டும் என தொடர்புகொள்வார்கள்...
நாம் செய்யவேண்டியது :
மேல் கூறியதை போல் உங்களை தொடர்பு கொண்டு உங்களில் ATM No / OTP-ஐ கேட்டால் தயவு செய்து யாரிடமும் உங்கள் வங்கியின் விவரம் மற்றும் OTPயை யாரிடமும் கூற கூடாது, ஏனெனில் வங்கி அதிகாரிகள் இதுபோல் உங்களுக்கு போன் செய்து எந்த விவரத்தையும் கேட்கமாட்டார்கள், அப்படி சந்தேகம் இந்நாவல் நீங்கள் சம்மந்தப்பட்ட வங்கியை அனுகவும்..
Click Link :
உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு Website link அனுப்பி இதை தொட்டால் உங்களுக்கு பணம் / ஒரு ரூபாய்க்கு மொபைல் என்று வரும் குறும் செய்திகள்...
நாம் செய்யவேண்டியது:
மேற்கூறியவை போல் வரும் குறும் செய்தியில் உள்ள லிங்கை எப்போதும் கிளிக் செய்ய கூடாது, அனுப்பியவரின் தரத்தை ஆராய்ந்து அது நம்மத் தகுந்தா என ஊர்ஜிதம் செய்தி பின் வேண்டுமானால் கிளிக் செய்து பார்க்கலாம்....
Share & Get Mobile phone at 1 Rs. :
வாட்ஸ் ஆப்பில் அதிகம் காணும் ஒரு ஏமாற்று வேலை இது, இந்த செய்திகளை 5 பேருக்கு ஷேர் செய்தால் உங்களுக்கு ஒரு ரூபாயில் மொபைல் அல்லது பரிசு பொருட்கள் என ஒரு செய்தி வரும்...
வாட்ஸ் ஆப் மூலம் சில POP ads மூலம் Create செய்துள்ள Defult website மூலம் இந்த மாதிரி ஒரு Click செய்தால் சில பரிசு பொருட்களில் இருந்து உங்களுக்கு ஒரு ரூபாயில் குறிப்பட்ட பொருள் பரிசாக கிடைத்தது போலும் இதை நீங்கள் 5 நபருக்கு ஷேர் செய்தால் உங்களுக்கு அந்த மொபைல் பரிசு என வரும்...
நாம் செய்யவேண்டியது ;
மேற்கூறியதை போல் வரும் செய்திகளை கண்டுகொள்ளாமல் விடுவதோடு அனுப்பும் நபரிடம் விவரத்தை கூறி எச்சரிக்கை செய்யவும்....
இது மூலம் பலர் 2 ஆயிரம் முதல் இருபது ஆயிரம் வரை இழந்துள்ளனர்....
Click & Get Money :
ஒரு சில website மூலம் பணம் வீழ்ந்துள்ளதாகவும் இதனை உங்கள் Gpay/ Phone pay மூலம் எடுத்துக்கொள்ளலாம் என் வரும் அதை தொடர்ந்து அதை கிளிக் செய்தால் உங்கள் UPI PIN-ஐ கேட்கும் பின் அதனை நாம் உள்ளிட்டால் தொடர்ந்து நமது வங்கி கணக்கில் இருந்து அனைத்து பணமும் கொள்ளையடிக்கப்படும்...
நாம் செய்யவேண்டியது:
இது போல் வரும் குறும் செய்திகளை Delete செய்துவிடலாம் அதோடு முடிந்தால் அந்த TRAI website மூலம் சம்மந்தப்பட்ட எண்ணின் மீது புகார் அளிக்கலாம்...
சமூக வலைதளம் மூலம் பணம் பெறுவது :
சமூக வலைதளத்தில் நமக்கு நெருங்கிய நபர் போல Profile -ஐ Create செய்து உங்களை அதன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்பது...
நாம் செய்யவேண்டியது :
நமது சமூக வலைதளத்தை Privacy மூலம் லாக் செய்து பயன்படுத்தலாம். ஏனெனில் நமது Profile போல கிரியேட் செய்து நமது நண்பர்களை ஏமாற்றலாம்...
அதே போல் சமூக வலைதளம் மூலம் நமது நண்பர்கள் போல பேசி பணம் கேட்டால், உடனே உங்களை நண்பரிடம் கால் செய்தி அதனை உறுதி செய்துவிட்டு பின் பணம் அனுப்பிவிட வேண்டும்...
அப்படி பணம் அனுப்பி ஏமாந்து விட்டால் உடனே அந்த UPI ஐடியை Report செய்யவேண்டும்...
உங்கள் UPI PIN எண்ணை ரகசியமாகவும் யாரிடமும் பகிராமலும் இருக்க வேண்டும்...
இது போல் சமூக வலைதளம் மற்றும் ஆன்லைன் மூலம் ஏமாற்றுவதை தவிர்க்க எதையும் உறுதி செய்யாமல் பணம் அனுப்பவோ அல்லது லிங்கை கிளிக் செய்யகூடாது...
Protecting against Fraud or Unauthorised activity
மோசடி அல்லது அங்கீகரிக்கப்படாத செயல்பாட்டுக்கு எதிராகப் பாதுகாத்தல்
நன்றி....
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்