வணக்கம் நண்பர்களே,
கொரோனாவும் கட்டுப்பாடுகளும் :
கொரோனா கொடும் தொற்று நோயால் நம் குடும்பம், நெருங்க உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு சிலர் அவர்களின் உறவுகளையும் இழந்துள்ளனர்..
கொரோனா நோயால் பெரிதும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது...குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லாமல் மொபைல் விளையாட்டு ஆன்லைன் வகுப்புகளால் மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது...
சிலர் பொருளாதார வளர்ச்சி இன்றி பெரிய நஷ்டங்களை சந்தித்துள்ளனர்...கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத இந்த நோயால் உலகையே புரட்டி போட்டது இந்த கொரோனா...
விவசாயம், தொழிற்சாலைகள், திரையுலகம் என பல துறையில் பணி புரியும் அனைவரும் கொரோனா பெரும் தொற்றால் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து நிற்கின்றனர்...
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பெரிதளவில் இருந்து தற்போது தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1700க்கும் குறைவாக குறைந்துள்ளது என்ற செய்தி சற்று மகிழ்ச்சி அளிக்கின்றது....
கொரோனா தமிழக அரசு பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது...அவற்றில் சில கடைகள், கோவில்கள் மற்றும் வழிபாட்டு தளங்கள் திறந்திருக்க சில கட்டுப்பாடுகள், திரையரங்கு, கேளிக்கை விடுதி போன்றவைகளுக்கு முழுமையாக தடை விதித்திருந்தது...
பிறகு இரெண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் கோவில்கள், கடைகள், திறக்க சில ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு...தற்போது கேளிக்கை விடுதி மற்றும் திரையரங்குகளை 50 சதவீத பார்வையாளர்கள் உடன் செயல் பட அனுமதி அளித்தது தமிழக அரசு, அந்த அறிவிப்பால் 23.08.2021 அன்று திரையரங்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்கு இன்று திறக்கப்பட்டது....
இதனை தொடர்ந்து செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு தளர்வு அறிவித்துள்ளது...
திரையிட காத்திருக்கும் திரைப்படங்கள் :
தமிழக அரசு அளித்த தளர்வுகள் இன்று 23.08.2021 அன்றிலிருந்து நடைமுறைக்கு வந்தது, அதனை தொடர்ந்து தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது...
கொரோனா கொடும் காலத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது திரைத்துறையும் திரையரங்க ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களும் தான், பெயராகும் வருமானம் இன்றி தவித்த திரைத்துறையினருக்கு இந்த தமிழக அரசு அறிவித்த தளர்வுகலால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறையின் படி 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது...தற்போது எந்த புது படமும் வெளியாகாததால் பழைய படங்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள், ஹாலிவுட் திரைப்படங்கள் என இன்று பல திரையரங்குகளில் திரையிடப்பட்டது..
இந்த வருடம் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தவிர வேறு எந்த பெரிய நடிகர்கள் படம் திரையிடப்படவில்லை....
திரையரங்க உரிமையாளர்கள் பெரிதும் நம்பியுள்ளது சன் பிக்சர் இயக்கும் ரஜினி அவர்கள் நடிக்கும் அண்ணாத்த திரைப்படமும், அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தையுமே பெரிதும் நம்பி உள்ளனர்...
ஏற்கனவே ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படம் இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது, அதோடு அந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகின்றது, அதே போல் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் பெரும் பகுதி படமாக்கப்பட்டு வருகின்று....
சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த கடந்து வந்த பாதை
தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், ஆர்யா நடித்த டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை, என் பல திரையரங்கில் கொண்டாடப்படவேண்டிய திரைப்படங்கள் OTT தளங்களில் வெளியாகி வெற்றியும் அடைந்துள்ளது...
ஏற்கனவே OTT தளத்தில் திரைப்படங்கள் வெளியாவதால் பெரிய நஷ்டம் அடைந்துள்ளனர் இந்த திரையரங்க உரிமையாளர்கள், பெரிய இழப்புகளை சந்தித்து வரும் திரையரங்க உரிமையாளர்கள் ரஜினி, அஜித் மற்றும் விஜய் படங்களையே பெரிதும் நம்பி உள்ளனர்....
அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் தங்களின் கதாநாயகனின் காட்சியை திரையில் கொண்டாட காத்து கொண்டே உள்ளனர்...
திரைத்துறை மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மீண்டும் பழைய நிலைக்கு மீள்வார்களா ?..அல்லது மூன்றாம் அலையில் மீண்டும் திரையரங்கம் மூடப்படுமா ?...என பல கேள்விகள் இருந்தாளும் திரைத்துறை மற்றும் திரையரங்க ஊழியர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்வோம்...
நன்றி,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்