வணக்கம் நண்பர்களே,
இன்று மாலை வெளியான ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரெய்லரில் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ள குறியீடுகளை இந்த பதிவில் காண்போம்....
இன்று காலை ருத்ர தாண்டவம் படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்கள் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5.06க்கு வெளியாகும் என அறிவித்திருந்தார்..
மோகன் ஜி அவர்கள் இயக்கி மாபெரும் வெற்றி அடைந்த திரௌபதி படத்தை தொடர்ந்து அவர் இயக்கி வரும் ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ட்ரெய்லரை அய்யங்கார் மியூசிக் தங்கள் யூடியூப் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டது....ட்ரெய்லரில் மிரட்டும் வசனங்களும் சில மறைமுக குறியீடுகளையும் பயன்படுத்தி உள்ளார் திரு.மோகன் ஜி அவர்கள்...
ருத்ர தாண்டவம் ட்ரெய்லர் - YouTube
திரௌபதி திரைப்படத்தில் நடித்த நடிகர் ரிச்சார்ட் அவர்களே இந்த திரைப்படத்திலும் நடித்துள்ளார், மோகன் ஜி இயக்கிவரும் இந்த ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், ரிச்சார்ட், ராதாரவி, JSK கோபி போன்றோர் நடித்துள்ளனர், GM Flim Corporation தயாரிப்பில் வெளியாகும் ருத்ர தாண்டவம் இந்த வருடம் தியேட்டரில் வெளியாகும் என படக்குழு ட்ரெய்லர் மூலம் வெளிப்படுத்தி உள்ளது...
படத்தின் இசை உரிமத்தை அய்யங்கார் மியூசிக் வாங்கியுள்ளது எனபது குறிப்பிடத்தகுந்தது...
குறியீடுகள் :
ட்ரெய்லரின் தொடக்கத்தில் ருத்ர தாண்டவம் படத்தின் கதாநாயகன் ரிச்சார்ட் போலீஸ் உடையில் தோன்றுகிறார்.இதனால் போலீஸ் சம்மந்தப்பட்ட படமாக இருக்கலாம்...
அதனை தொடர்ந்து போதை மருந்துக்கு பெண்கள் அடிமை ஆக்கப்பட்டிருப்பதை கதாநாயகன் சொல்லி இருப்பதால் போதை மருந்து சம்மந்தமான கதை அம்சம் இருக்கலாம்..
மதமாற்றம் செய்த நபர் இறப்புக்கு காரணமாக கதாநாயகன் என ஒரு காட்சி அமைந்துள்ளது, அதோடு லாக் அப் மரணம் தொடர்பான காட்சிகள் இருக்கலாம்...
போராளிகள் தங்களை வளர்க்கும் கட்சிக்கு ஆதரவாகவும், எதிரான கட்சிக்கு எதிராகவும் பேசுவது போல் ட்ரெய்லர் அமைந்துள்ளது....
சில போலி போராளிகளை தோலுரித்து காட்டுவது போல் ஒரு காட்சி அமைத்துள்ளது...." நானே உன்னை கொலுத்தி போட்டு நானே வீர வணக்கம் செலுத்துவேன்" என்ற வசனத்தின் மூலம் பல போலி போராளிகளின் முகத்திரையை கிழித்து பார்க்கிறார் இயக்குனர்.....
மதமாற்றத்துக்கு எதிராகவும், மத மாற்ற பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மதத்திற்கு எதிராக பேசுவதை சுட்டி காட்டும் வசனம் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளதால் படத்தில் பெரும்பாலான காட்சிகள் மதமாற்றத்தை தோலுரித்து காட்டும் என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்..
கதாநாயகன் ஊர் தர்மபுரி என்றும் அவனை பார்த்தால் அடங்கி போற ஆள் மாதிரி இல்லை எனவும் சில குறியீடுகளை வைத்துள்ளார் இயக்குனர்...
உண்மையாக போராடும் ஒருவனை சாதி சாயம் பூசுவதை கதாநாயகன் வசனம் மூலம் வெளிப்படுகின்றது...
திரௌபதி படத்தில் கதாநாயகன் பெயர் பிரபாகரன் இந்த ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகன் பெயர் ருத்ர பிரபாகரன் என்பது ட்ரெய்லர் மூலம் தெரிய வருகின்றது...
படத்தின் பின்னணி இசை திரௌபதி படத்தின் இசையை தழுவி அமைக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லரில் காணலாம்...
படம் இந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ட்ரெய்லரில் முடிவில் படக்குழு அறிவித்துள்ளது....
திரௌபதி வெளியாகி நாடக காதல் மற்றும் போலி ஆணவ கொலைகளை தோலுரித்ததை போல் ருத்ர தாண்டவம் திரைப்படம் மதம் மாற்றம் மற்றும் போலி மத பிரச்சாரங்களுக்கு எதிராக இருக்கும் என தெரியவந்துள்ளது....
நன்றி,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்