கேப்டனின் சினிமாவும் அரசியலும்


வணக்கம் நண்பர்களே,


     தமிழக மக்கள் கேப்டன் என அன்போடு அழைக்கும் திரு.விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளான இன்று (25.08.2021) அவரை பற்றி பதிவு...



    முதலில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம்....


     நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என் பல பரிணாமத்தில் வலம் வரும் விஜயகாந்த் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புகோட்டை அருகே ஒரு சிறிய கிராமத்தில்  25.08.1952 அன்று பிறந்தார், பின் அவரது குடும்பம் மதுரைக்கு வசிக்கத் தொடங்கினார்...


விஜயகாந்த் சினிமா:


    சினிமாவில் கதாநாயகன் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் விஜயராஜ் அழகர்சாமி என்ற பெயருடன் சினிமாவில் நுழைந்த விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக தனது பெயரை விஜயகாந்த் என்று மாற்றிக்கொண்டார்....இதனை மலேசிய நட்சத்திர விழாவில் விஜயகாந்த் அவர்களே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...



      1978ம் ஆண்டு விஜயகாந்த் "இனிக்கும் இளமை" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார், ஆனால் அவரின் முதல் படம் தோல்வியை தழுவினாலும் சற்றும் மனம் தளராத விஜயகாந்த் தன்னோட  விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பாலும் "சட்டம் ஒர் இருட்டறை" மூலமாக மிகப்பெரிய வெற்றியை தன் வசப்படுத்தினார் விஜயகாந்த், தமிழ் சினிமாவை விஜயகாந்த் தன் பக்கம் ஈர்க்கதொடரங்கினார், 1980களில் முக்கிய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோருக்கு இணையான நடிகராக மிகக்குறுகிய காலத்தில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டார்...


கேப்டன் தலைமையில் நடந்த நட்சத்திர கலை விழா - Youtube


    தொடர்ந்து ரஜினி மற்றும் கமலின் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்காத சிறிய இயக்குனர்கள் விஜயகாந்த் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தனர்...


Click here 👇 YouTube video

40 வருட விஜயகாந்த் கலைத்துறை பயணம் - பிடக்காதவர்களுக்கும் பிடிக்கும் என விஜயகாந்தை பார்த்தால் -ரஜினிகாந்த் வாழ்த்து


   நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களை சிறப்பாக தேர்வு செய்த விஜயகாந்த் சற்றும் யோசிக்காமல் 100வது நாள், ஊமை விழிகள் போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்...


    உளவுத்துறை, காவல் அதிகாரி, அரசு அதிகாரி என்ற கதாபாத்திரங்கள் விஜயகாந்துக்காகவே தயார் செய்யப்பட்ட கதாபாத்திரம் போல அமையும் படி தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார்....தனது 100வது படமான "கேப்டன் பிரபாகரன்" படத்தின் மூலமாக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து கேப்டன் என்ற செல்ல பெயரை பெற்றார் விஜய்காந்த், ரஜினி மற்றும் கமலின் நூறாவது படங்கள் பெரிய வெற்றியை பதிவு செய்யாத நிலையில் விஜயகாந்திற்கு 100வது படம் 200நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி பெரிய வெற்றியை பெற்றது....இன்றும் வலைதள பக்கத்தில் கேப்டன் என தேடினால் முதலில் வருவது விஜயகாந்த் பற்றி தான்...


    சிகப்பாக இருந்தால் மட்டுமே திரையுலகில் வெற்றி பெற முடியும் என்ற கருத்தை ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் அவர்களும் வெற்றிகள் மூலம் பொய்யானது....


   தொடர்ந்து தனக்கே உள்ள மாறுபட்ட நடிப்பால் திரையுலகில் தொடர்ந்து தன் நிலையை தக்கவைத்துகொண்டார் விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன், வாஞ்சிநாதன்,சேதுபதி ஐபிஎஸ், ஹானஸ்ட்ராஸ்,  வல்லரசு, தென்னவன், போன்ற படங்களின் வெற்றியின் மூலம் தனது தேசபக்தியை வெளிப்படுத்தி இருப்பார்..


     புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மீது கொண்ட அன்பின் காரணமாக புரட்சி கலைஞர் என்ற பட்டத்தை திரையுலகினர் விஜயகாந்த் அவர்களுக்கு வழங்கினர்...


    1990ல் பிரேமலதா அவர்களை மணந்து கொண்டார் நடிகர் விஜயகாந்த்...


    தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த விஜயகாந்த் ரமணா படத்தின் மூலம் மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார்.... 160க்கும் மேற்பட்ட படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கினார் விஜயகாந்த்...


விஜயகாந்த் படத்தின் பட்டியல் தொகுப்பு - Click here


    தொடர்ந்து தனது பாடல்கள் மூலம் அரசியல் வாதிகளை சீண்டிய விஜயகாந்த், பின் அரசியலில் கால்பதித்தார், முழு அரசியலில் ஈடுபட்ட விஜயகாந்த் அவர்கள் 2010க்கு பின் திரையுலகிலிருந்து தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்தி கொண்டார்.....


விஜயகாந்த் அரசியல் :


        கேப்டன், புரட்சி கலைஞர், கருப்பு எம்.ஜி.ஆர் என்று அவரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் கொண்டாடப்பட்டார் விஜயகாந்த்...


புரட்சி கலைஞர் விஜயகாந்த் அரசியல்


     கொடை உள்ளம் கொண்ட விஜயகாந்த் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு பல உதவிகளை செய்து ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் பெரிய இடத்தை பெற்றார், விஜயகாந்த் T.நகர் அலுவலகத்தில் இலவசமாக நாள் தோறும் அன்னதானம் வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...


      விஜயகாந்த் அவர்களின் ரசிகர் மன்றத்தை சேர்ந்த நபர்கள் 90க்கு பின் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வெற்றியை பதிவு செய்த நிலையில் ஏற்கனவே மக்களுக்கு உதவும் மனம் கொண்ட விஜயகாந்த் அவர்களுக்கு அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்ய ஆர்வம் கொண்டார்...


   அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையின்  நெருக்கடிகளில் மூலம் தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்தார் விஜயகாந்த்...


   2000ம் ஆண்டுகளில் ரசிகர் மன்றத்திற்காக ஒரு தனி கொடி மற்றும் சின்னத்தை உருவாக்கி வெளியிட்டார் விஜயகாந்த்...


   2000ம் ஆண்டுக்கு பின்னர் நெடுஞ்சாலை துறையால் விஜயகாந்த் திருமண மண்டபம் சில அரசியல் காரணமாக தகர்க்கப்பட்டது.. இதன் தாக்கத்தால் விஜயகாந்த் தனக்கென தனி கட்சியை ஆரம்பிக்க திட்டமிட்டார்...


   2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த மதுரையில் தன் கட்சியின் பெயர், கொடி, கொள்கையை வெளியிட்டார் கேப்டன் விஜயகாந்த்...." தேசிய முற்போக்கு திராவிட கழகம்" என்ற கட்சியை இரு பெரும் திராவிட கழகத்திற்கு மாற்றாக ஊழல் மற்றும் வறுமை ஒழிப்பை வலியுறுத்தி அரசியலில் கால் பதித்தார் விஜயகாந்த்...


    மறைந்த முன்னால் முதல்வர் கருணாநிதி மற்றும் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்த அதே காலத்தில் தன்னுடைய அரசியல் நுழைவு மூலம் தைரியத்தை வெளிப்படுத்தினார்....


   அதன் பின் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதியிலும் தனித்து நின்று அந்த தேர்தல் கட்சி தோல்வியை சந்தித்தாலும் தனக்கென உள்ள ஓட்டு வங்கியை (8.45 சதவீதம்) வெளிப்படுத்தி மற்ற அரசியல் கட்சிகளின் பார்வையை விஜயகாந்த் தன் பக்கம் திருப்பினார்....


    அதன் பின் 2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் விஜயகாந்த் தனது வாக்கு சதவீதத்தை 10.45 ஆக உயர்த்தி தன்னுடைய வலிமையை காட்டினார் விஜயகாந்த்...


      அதனை தொடர்ந்து ஜெயலலிதா அவர்கள் கவனம் விஜயகாந்த் பக்கம் திரும்ப அதிமுக மற்றம் தேமுதிக கூட்டணி 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் உறுதியானது...


    தேர்தலில் போட்டியிட 41 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கியது அதிமுக, அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது விஜயகாந்த் அவர்களில் தேமுதிக கட்சி...29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவர் ஆனார் விஜயகாந்த்....அந்த தேர்தலில் அசுர பலம் கொண்ட திமுக படுதோல்வி அடைந்து எதிர்கட்சி தலைவர் பதவியும் கிடைக்காமல் போனது...


அதிமுக தேமுதிக கூட்டணி - Youtube


தேமுதிக தேர்தல் முடிவு


    சட்ட மன்ற கூட்டத்தொடரில் ஜெயலலிதா உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தேமுதிக அதிமுக கூட்டணி உடைந்தது...அதுவரை ஜெயலலிதாவை பார்த்த பேச தயங்கிய அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஜெயலலிதாவை எதிர்த்து பேசியவர் என்ற சிறப்பை பெற்றார் விஜயகாந்த்....ஆனால் அதன் பின் விஜயகாந்த் அவர்களில் உடல்நிலை காரணமாக தேமுதிக எதிர்வந்த தேர்தலில் பெரிய வெற்றியை பதிவு செய்யாமல் போனது...


கேப்டனின் இடி‌ முழக்கம்


    அந்த சமயம் விஜயகாந்த் அவர்களில் உடல்நிலை காரணமாக அவரின் பேச்சுக்கள் சமூக ஊடகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் தொழில்நுட்ப அணியால் திரித்து சில வீடியோ மற்றும் மீம்ஸ் மூலம் விஜயகாந்த் அவர்களில் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி வந்தனர்...இதன் காரணத்தினாலும் கூட்டணியை உறுதி செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தாலும்  எதிர் வந்த தேர்தல்களில் தேமுதிக வெற்றியை தக்க வைக்க முடியாமல் போனது...


   மாற்று அரசியலை வழிநடத்தி வறுமை மற்றும் ஊழல் ஒழிப்பை கொள்கையாக வைத்திருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கூடிய விரைவில் உடல் நலம் பெற்று எதிர்வரும் காலத்தில் மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் என கடவுளை பிரார்த்திப்போம்...🙏...


நன்றி,


தொகுப்பு : தமிழரசன் சண்முகம்



கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads