வணக்கம் நண்பர்களே,
உலகத்தையே உள்ளங்கையில் கொண்டு வந்த தொழில்நுட்பம் மற்றும் இணையத்தின் நன்மை தீமைகளை இந்த பதிவில் காண்போம்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இணையம் தற்போது அத்தியாவசியமானது...வளர்ந்து வரும் தொழில்நுட்பமானது பல நன்மைகளை நமக்கு வழங்கினாலும், கூடவே தீமைகள் இருக்கத்தான் செய்கிறது...
விரல் நுனியில் வந்த இணையம் மற்றும் தொழில்நுட்பத்தால் நொடி நேரத்தில் பணத்தை வங்கி கணக்கிலிருந்து வேறு கணக்குக்கு மாற்றவும் ஒரு செய்தியை பலருக்கு பகிரவும் முடிகிறது..
பலர் இணையத்தால் மனதாலும் பொருளாதாரத்தாலும் முன்னேற்றம் அடைந்து வந்தாலும், சிலர் இணையத்தால் மனதாலும், பொருளாதாரத்தாலும் பெரும் இழப்புகளையும் சந்திக்கின்றனர்...
பல ஆண்டுகளுக்கு முன் தந்தி கொடுத்த செய்தி பெறுனருக்கு போனதா இல்லை போகலையா என்ற எண்ணத்திலே இருந்த காலம் மாறி தற்போது வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு செய்தியை நொடி நேரத்தில் பகிரப்படுகின்றது...
இணையத்தில் வளர்ச்சி வளர்ந்து வர வர கூடவே சில தீமைகள் பெரிதும் வளர்ந்து வருகின்றது...
தீமைகள்:
இணையத்தின் நன்மைகளை பார்ப்பதற்கு முன் தீமைகளை தெரிந்துகொள்ள வேண்டும்...
அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இணையம் மற்றும் தொழிற்நுட்பத்தால் அவ்வளவு தீமைகள் உள்ளது, தீமை என்றால் இணையம் தீமை இல்லை இணையத்தை வைத்து நாச வேலையில் ஈடுபடும் குண்டர்களால் தான் தீமை நடக்கும்...
1.பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றிவிடுவதாக கூறி பணம் மற்றும் கற்பை சூரையாடுகின்றர்..
2.பெண்களை புகைபடத்தை ஆபாசமாக மாற்றி மற்றும் ஆபாச இணையத்தில் பதிவேற்றுவது...
3.பலரை ஏமாற்றி அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவது...
4.தவறான சில தகவல்களை பரப்புகின்றனர்..
5.ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகளை மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்...
நாம் செய்ய கூடாத சில விஷயங்கள் இதோ...
1.பெண்கள் முக்கியமாக சமூக வலைதளத்தில் தங்கள் புகைபடத்தை வைப்பதை தவிர்க்க வேண்டும்..அப்படி வைத்தே ஆக வேண்டும் என்றால் முகத்தை ஒரு பக்கம் மறைத்த மாதிரி வைக்க வேண்டும்...
2.மொபைல் போனுக்கு வரும் குறும்செய்திகளில் வரும் லிங்க் -ஐ தொடாமல் இருக்கவேண்டும்..
3.அழைப்பில் வந்து உங்கள் ATM எண்னையோ அல்லது One Time password (OTP) கேட்டாலோ அதற்கு அந்த எநத விதமான பதிலும் தராமல் தவிர்க்க வேண்டும்..
4.அதிக நேரம் சமூக வலைதளத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும்...
5.ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டங்களை விளையாடாமல் தவிக்க வேண்டும்...
6.உங்கள் UPI Id மற்றும் PIN நம்பரை யாருக்கும் பகிராமல் இருக்கவேண்டும்...
7.உண்மை என தெரியாத ஒரு விஷயத்தை பகிர்வது...
8.முன் பின் தெரியாத நபரிடம் நமது விபரத்தினை கொடுக்க கூடாது..
நன்மைகள்:
இணையம் இல்லாத ஊர், இணையம் இல்லாத கிராமம் தற்போது இணையம் இல்லாத வீடு என்பது அதிசயம் ஆனது...
இணையம் பேருக்கு ஏற்றார் போல் பலரை இணைக்கவும் செய்கிறது...
1. ஒரு தகவலை நொடி நேரத்தில் அறிந்துகொள்ளலாம்...
2.நமக்கு தெரியாத பல விஷயங்களை கற்று கொள்ள பாலமாகிறது...
3.ஒரு தகவலை பலருக்கு பரிமாற்றம் செய்யும் கருவியானது இணையம்...
4.ஒரு கேள்விக்கான விடையை எழுத்தாகவும் படமாகவும் அறிந்து கொள்ள முடிகிறது...
5.வெளி நாட்டிலோ வெளியூரிலோ உள்ளவர்களை நேருக்கு நேர் பார்த்து பேச முடிகிறது..
6.வங்கி கணக்கில் இருந்து சுலபமாக இணையத்தில் வாயிலாக பரிவர்த்தனை செய்ய முடிகிறது..
7.நம் எண்ணங்களை சமூக ஊடகத்தில் வாயிலாக வெளிப்படுத்தலாம்..
8.பொழுதை போக்க கூட இணையம் பயண்படுகிறது..
9.நண்பர்களை இணைக்கும் பாலம் ஆனது..
10.வீட்டிலிருந்தே வெளியில் நடக்கும் அனைத்து விதமான செய்தி நிகழ்ச்சிகளையும் சுலபமாக தெரிந்துகொள்ளமுடிகிறது...
அன்னத்தை போல் பால் தண்ணீர் என பிரித்து எடுப்பது போல் இணையத்தில் உள்ள நன்மைகளை நாம் எடுத்துக்கொண்டு தீமைகளை அங்கேயே விட்டு சென்றால் இணையம் ஆபத்தானதாக இல்லாமல் இருக்கும்...
நன்றி,
அடுத்த பதிவில் சந்திப்போம்...
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்