32 விநாயகரின் அவதாரங்கள்

வணக்கம் நண்பர்களே,

     விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகரின் 32 திருஅவதாரங்கள்‌ பற்றிய பதிவு...



     முழுமுதல் கடவுளும், யானை முகமும் மனித உடலும் கொண்ட விநாயக பெருமான் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் மகனாக பிறந்தார் என்பது ஆன்மீக நம்பிக்கை,  சிவபெருமானின் தீராது கோபத்தினால் தன் மகனின் கழுத்தை தானே வெட்டிய சிவபெருமான் பார்வதி தேவியின் கண்ணீரை துடைக்க யானையின் முகத்தை மகனின் உடலுடன் சேர்த்து விநாயகரை மீண்டும் உயிர் பெறச் செய்தார் என்பது வரலாறு...


    விநாயகருக்கு கணபதி, முழு முதற்கடவுள், யானை முகத்தான், எலி வாகனத்தான், பிள்ளையார் என பல்வேறு பெயர்களால் பக்தர்கள் வழிபடுகின்றனர்...


விநாயகர் சதுர்த்தி:


          விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களால் ஆவணி மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது, ஆவணி மாதத்தில் வரும் இரு சதுர்த்திகளில் வளர்பிறை சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகின்றது, இந்த நாளில் தான் விநாயகர் பிறந்ததாக கூறப்படுகிறது....


32 விநாயகர் திருஅவதாரங்கள் :

     
       விநாயகர் மனிதர்களின் தேவையை நிவர்த்தி செய்வதற்கான நோக்கத்தில் தொடங்கும் நல்ல காரியங்களுக்கு ஏற்றவாறு சில அவதாரம் எடுத்ததாக கூறப்படுகின்றது, அந்த திரு அவதாரங்கள் பின் வரிசைபடுத்தியுள்ளேன்...


1.ஸ்ரீபால விநாயகர்

2.ஸ்ரீ தருண விநாயகர்

3.ஸ்ரீ பக்தி விநாயகர்

4.ஸ்ரீ வீர விநாயகர்

5.ஸ்ரீ சக்தி விநாயகர்

6.ஸ்ரீ துவிஜ விநாயகர்

7.ஸ்ரீ சித்தி விநாயகர்

8.ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்

9.ஸ்ரீ ஷிப்ர விநாயகர்

10.ஸ்ரீ விக்ன விநாயகர்

11.ஸ்ரீ ஹரம்ப விநாயகர்

12.ஸ்ரீ லட்சுமி விநாயகர்

13.ஸ்ரீ மகர விநாயகர்

14.ஸ்ரீ விஜய விநாயகர்

15.ஸ்ரீ நிருத்திய விநாயகர்

16.ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்:

17.ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்

18.ஸ்ரீ வரத விநாயகர்

19.ஸ்ரீ திரயாட்சர விநாயகர்

20.ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்

21.ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்

22.ஸ்ரீ ஏகதந்த விநாயகர்

23.ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்

24.ஸ்ரீ உத்தண்ட விநாயகர்

25.ஸ்ரீ ருணமோகன விநாயகர்

26,ஸ்ரீ துண்டி விநாயகர்

27.ஸ்ரீ இருமுக விநாயகர்

28.ஸ்ரீ திரிமுக விநாயகர்

29.ஸ்ரீ சிங்க விநாயகர்

30.ஸ்ரீ யோக விநாயகர்

31.ஸ்ரீ துர்க்கா விநாயகர்

32.ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்


32 விநாயகர் அவதாரங்கள்_ YouTube Link


32 அவதாரங்களும் நோக்கங்களும் :


     32 விநாயகர் அவதாரங்களின் வடிவங்களும், விநாயகரின்‌ நோக்கமும் பின் காண்போம்....

1.ஸ்ரீபால விநாயகர் :


         குழந்தை வடிவம் கொண்ட பால விநாயகர், நான்கு கரங்களை கொண்ட தோற்றத்துடன், துதிக்கையில் கொழுக்கட்டையும், கரும்பு, மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் போன்ற குழந்தைகளுக்கு பிடித்த பழங்களை வைத்திருப்பார்...

    குழந்தைகள் நலமுடன் நோயுற்று வாழ்வும், குழந்தையின் கல்வி மேம்படவும் பால விநாயகரை வழிபடுவார்கள்...


2.ஸ்ரீ தருண விநாயகர்:


      நான்கு கரங்களுடன் கூடிய விநாயகர் ஒரு கையில் உடைந்த தந்தையும், கரும்பு, விலாம்பழம், அங்குசம் பாசம் ஆகியவற்றை ஏந்தியவாறு அழகிய இளைஞர் போல் யானை முகத்துடன் காட்சி அளிக்கிறார்...


   மன வலிமை பெற்று எடுத்த காரியத்தில் வெற்றியடைய தருண விநாயகரை வழிபடுவார்கள்...

3.ஸ்ரீ பக்தி விநாயகர் :


       பக்தி விநாயகர் நான்கு கரங்களுடன் வாழைப்பழமும், மாம்பழம், அங்குசம் பாசம், உடைந்த தந்தம் போன்றவற்றை ஏந்திய அருள்கிறார்...


4.ஸ்ரீ வீர விநாயகர் :


        வீர விநாயகர் ஆஞ்சநேயர் போல கட்டுடல் கொண்ட வீரனை போல் காட்சி அளிக்கிறார் வீர விநாயகர், மனதில் உறுதியுடன் கூடிய வலிமை பெற வீர விநாயகரை வழிபடுவார்கள்...எட்டு கரங்களுடன்‌ காட்சி அளிக்கும் விநாயகர் வில் அம்பு, , கலப்பை, வாள், சூலம், சங்கு, சக்கரம் போன்றவற்றை ஏந்தியவாறு காட்சி அளிக்கிறார்...

5.ஸ்ரீ சக்தி விநாயகர் :


      சக்தி விநாயகர் பெரும் உடல் வலிமை வெளிப்படுத்தும் வகையில் காலில் அசூரனை அழுத்தி பிடித்தவாறு, அங்குசம் பாசம், அபயம் அளிக்கும் வகையில் காட்சி அளிக்கிறார்...


6.ஸ்ரீ துவிஜ விநாயகர்:

    
       நான்கு முகத்தை வெளிப்படுத்தும் தவிஜ விநாயகர், நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார்...

    
7.ஸ்ரீ சித்தி விநாயகர்:


      துதிக்கையில் எள் உருண்டை ஏந்தியவாறு, நான்கு கரங்களை கொண்ட சித்தி விநாயகர், எடுத்த காரியம் தடையின்றி வெற்றி அடைய சித்தி விநாயகரை வழிபடுகின்றனர்..

   

8.ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்:


      இசை ஞானம் வளம் பெற உச்சிஷ்ட விநாயகரை வழிபடுகின்றனர், ஒரு கையில் வீணை எந்தியவாறும், மாதுளை பழம், வஜ்ர திரிசூலம் ஏந்தி நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார் உத்திஷ்ட விநாயகர்...

       
9.ஸ்ரீ ஷிப்ர விநாயகர்:


      கும்பத்தினை துதிக்கையில் ஏந்திய ஷிப்ர விநாயகர் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்...புதிய காரியம் தொடங்கும் முன் ஷிப்ர விநாயகரை வழிபடுகின்றனர்....

     

10.ஸ்ரீ விக்ன விநாயகர் :

      துதிக்கையில் கொழுக்கட்டையை ஏந்தியும்,  பூங்கொத்து, சங்கு, சக்கரம்,  தந்தம், அம்பு போன்றவற்றை ஏந்திய எட்டு கரங்களுடன் காட்சி அளிக்கிறார் விக்ன விநாயகர்,

     
     
11.ஸ்ரீ ஹரம்ப விநாயகர்:


       ஐந்து முகத்துடன் சிங்க வாகனத்தில் காட்சி அளிக்கிறார் ஹரம்ப விநாயகர், அங்குசம், பாசம், தந்தம், மலர் மாலை, கொழுக்கட்டை, வாழைப்பழம் போன்றவற்றை எந்தி பத்து கரங்களுடன் காட்சி அளிக்கிறார்...

        
12.ஸ்ரீ லட்சுமி விநாயகர்:

    
       லாபம் மற்றும் வெற்றியை பெற லட்சுமி விநாயகரை வழிபடுகின்றனர், எட்டு கரங்களை கொண்ட லட்சுமி விநாயகர் பச்சை கிளி, அங்குசம், பாசம், கற்பக கொடி, போன்றவற்றை ஏந்தி அருளிக்கிறார்..

       
13.ஸ்ரீ மகர விநாயகர்:


        மகர விநாயகர் சில பெருமான் போன்று மூன்று கண்களுடன், பத்து கரங்களுடன், தாமரை, சங்கு, சக்கரம், நெல் கதிர், கரும்பு போன்றவற்றை எஏந்தியவாறு அருளிக்கிரார்...


14.ஸ்ரீ விஜய விநாயகர்:

   
      விஜய விநாயகர் கல்வியிலும் திறமையிலும் வெற்றி அடைந்து சிறந்து விளங்க வழிபடுகின்றனர், மூஷிக வாகனத்தில் காட்சி அளிக்கும் விஜய விநாயகர், நான்கு கரங்களுடன் அங்குசம், பாசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன் அருளிக்கிறார்...


15.ஸ்ரீ நிருத்திய விநாயகர்:


     வலது கால் தூக்கியவாறும், இடது காலை ஊன்றியவாறும், நடனமாடும் தோற்றத்துடன் அபிநயம் காட்டுவது போலும் அருளிக்கிறார் நிருத்திய விநாயகர், நான்கு கரங்களுடன் அனைத்து கலைகளிலும் வெற்றி பெற திருத்திய விநாயகரை வழிபடுகின்றனர்...

     
16.ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்:


      தேவியை இடது மடியில் அமர்த்தி வைத்திருப்பது போலும், ஆறு கரங்களுடன் தாமரை, கரும்பு, அம்பு, போன்றவையில் கையில் ஏந்தி காட்சி அளிக்கிறார்....

17.ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்:


     மூஷிக வாகனத்தில் பத்மாசன நிலையில் சிவபெருமானை போல் தலையில் பிறை சூட்டியும் மூன்று கண்களுடனும் , நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார் ஏகாட்சர விநாயகர்...

     
18.ஸ்ரீ வரத விநாயகர்:


     வரத விநாயகர் நான்கு கரங்களுடன் பிரை மூடியும், மூன்று கண்களுடன் காட்சி அளிக்கிறார் வரத விநாயகர்...அங்குசம், பாசம், தேன் கொண்ட கிண்ணம், மாதுளை பழம் ஏந்தியவாறு காட்சி அளிக்கிறார்...


19.ஸ்ரீ திரயாட்சர விநாயகர்:


       துதிக்கையில் கொழுக்கட்டை, அங்குசம், பாசம், தந்தம் மாம்பழம் போன்றவற்றை ஏந்திய நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார்...


20.ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்:

    
       ஆறு கரங்களுடன், மூன்று கண்களுடனும், ஆறு கரங்களுடன், தந்தம், மாம்பழம், அங்குசம், பாசம், தாமரை போன்றவற்றை ஏந்தி காட்சி அளிக்கிறார் ஷிப்ர பிரதாக விநாயகர்..

     
21.ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்:


     நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார் ஹரித்ரா விநாயகர், தந்தம், அங்குசம், பாசம் போன்றவற்றை கையில் ஏந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்....

     
22.ஸ்ரீ ஏகதந்த விநாயகர்:


       உடல் பெருத்த நிலையில் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார் ஏகதந்த விநாயகர், அங்குசம், பாசம், தந்தம், கோடாரி போன்றவற்றை ஏந்தியும், துதிக்கையில் லட்டுடன் காட்சி அளிக்கிறார்....

     
     
23.ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்:


     எலி வாகனத்தில் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார் சிருஷ்டி விநாயகர், தந்தம், தாமரை, அங்குசம்,  பாசம் ஆகியவற்றை ஏந்தியவாறு காட்சி அளிக்கிறார்...

  
     
24.ஸ்ரீ உத்தண்ட விநாயகர்:


      இடது புறம் தேவியையும், வலது கையில் தாமரையையும் ,ஒன்பது கரங்களுடன் காட்சி அளிக்கிறார் உத்தண்ட விநாயகர்...

       
25.ஸ்ரீ ருணமோகன விநாயகர்:

       
      துதிக்கையில் நாவல்பழம், அங்குசம், பாசம், தந்தம் மாம்பழம் என நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார் ருணமோகன விநாயகர்...

     
26,ஸ்ரீ துண்டி விநாயகர்:


      மரம் வெட்டும் தொழிலாளி போல் கையில் கோடரியுடனும், தந்தம், ரத்தின பாத்திரம், அக்கமாலையுடன் காட்சி அளிக்கிறார் துண்டி விநாயகர்..

     
27.ஸ்ரீ இருமுக விநாயகர்


       இரண்டு யானை முகத்துடன் நான்கு கரங்களுடன் ரத்தின வைர கிரிடத்துடன் காட்சி அளிக்கிறார் இருமுக விநாயகர்...


28.திரிமுக விநாயகர்:

     
       மூன்று யானை முகத்துடன் தாமரை மலரில் அமர்ந்து ஆறு கரங்களுடன் காட்சி அளிக்கிறார் திரிமுக விநாயகர், அங்குசம்,  பாசம், அபயம், அமுத கலசம் போன்றவற்றை ஏந்தியவாறு காட்சி அளிக்கிறார் திருமுக விநாயகர், அன்ன தானம் செய்பவர்களுக்கு அருள் தருவார் திரிபுக் விநாயகர்...


29.ஸ்ரீ சிங்க விநாயகர்:


         சிம்ம வாகனத்தில் அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார் சிங்க விநாயகர்,  தொலைதூரம் பயணம் செய்பவர்களுக்கு துணையாக வருவதாக நம்பப்படுகிறது...


30.ஸ்ரீ யோக விநாயகர் :


        யோகாசன நிலையில், யோக பட்டம் கட்டிக்கொண்டு தண்டம், அங்குசம்,  பாசம் ஆகியவற்றை கையில் ஏந்தி நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார் யோக விநாயகர்...

     

31.ஸ்ரீ துர்க்கா விநாயகர்:


      எட்டு கரங்களுடன் அங்குசம், பாசம், அம்பு, வில், கொடி, அஸ்திரம் ஆகியவற்றை கையில் ஏந்திய நிலையில் காட்சி தருகிறார் துர்க்கா விநாயகர்...

      
32.ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்:


      சங்கடங்களை அதாவது துயரங்களை போக்கும் வல்லமை பெற்ற சங்கட ஹர விநாயகர், நான்கு கரங்களுடன் தேவியை அருகில் அமர்ந்தவாறு காட்சி அளிக்கிறார்....



     விநாயகர் சதுர்த்தி தினமான இன்று அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 💐 ...


    இனி வரும் காலம் கொரோனா நோய் தொற்று குறைந்து உடல் வலிமையுடனும் மன வலிமையுடனும் எதிர் காலம் அமையட்டும் என பிரார்த்திப்போம்..

நன்றி 🙏,


அடுத்த பதிவில் சந்திப்போம்...


தொகுப்பு : தமிழரசன் சண்முகம்

செந்தமிழ் தென்றல் : Home - Click here


செந்தமிழ் Tech :YouTube Click here


     
       

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads