அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மூன்றாம் அலை குழந்தைகளை பாதிக்குமா ?


வணக்கம் நண்பர்களே,

 
  ‌கொரோனா பெரும் தொற்றின் காரணமாக உலகமே தங்களின்‌ பொருளாதாரத்தையும் சொந்தங்களையும் இழந்து நிற்கின்றோம்...மூன்றாம் அலையின் தாக்கத்தில் இருந்து நம் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த பதிவில் காண்போம்...



தொடங்கியது கொரோனா மூன்றாம் அலை :


    கொரோனா எனும் COVID-19 வைரஸின் தாக்கம் இந்தியா மற்றும் உலக அரங்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக பெரும் தாக்கத்தை எற்படுத்தி வருகின்றது...கடந்த ஆண்டு உருவான கொரோனா முதல் அலையில் இந்தியாவில் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டாலும் ஊரடங்கின் காரணமாக பெரிய பொருளாதார இழப்பை சந்தித்தது, ஆனால் உலக அரங்கில் சீனா, அமெரிக்கா, பிரேசில், ஈரான் போன்ற நாடுகளில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது...



   உலக சுகாதார நிறுவனம் கொடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து ஊரடங்கை அமல் படுத்தியதாலும், இந்தியாவில் பெரும் உயிரிழப்பை தவிர்த்தோம்....அதன் இந்தாண்டு கொரோனா நோய் தொற்று குறைந்து வந்த சூழலில் இந்தியாவில் சட்டமன்ற தேர்தல்களில் கொரோனா நோய்க்கான சரியான முன்னெச்சரிக்கை எடுக்காததன் விளைவாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கியது, அதன் விளைவாக மனித உயிர்கள் கொரோனா நோயில் பாதிக்கப்பட்டதாலும் ஆக்சிசன் தட்டுப்பட்டினாலும் கொத்துக் கொத்தாக மக்கள் இறந்தனர்... இந்தியா முழுக்க பெரும் உயிரிழப்பை சந்தித்தது கொரோனா இரண்டாம் அலை காரணமாகவே...

    கடந்த மாதம் கொரோனா நோய் தொற்று தொடந்து குறைந்து வந்ததால் மத்திய அரசு மற்றும் மாநில ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்து வந்தது...மூன்றாம் அலை அச்சத்தின் காரணமாகவும் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்தியா முழுக்க எளிமையாக கொண்டாடப்பட்டது மற்றும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும் தடைவிதிக்கப்பட்டு மக்களும் அதனை கடைப்பிடித்தனர்...

  
    ஏற்கனவே நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா மூன்றாம் அலை துவங்கிய நிலையில் தினசரி கொரோனா‌ பாதிப்பு எண்ணிக்கை கேரளாவில் 30 ஆயிரத்தை கடந்தது, இதன் காரணமாக தமிழக அரசு கேரளாவில் இருந்து தமிழகம் திரும்புவோரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்....இரெண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா நோய் தொற்று கண்டறிந்ததை தொடர்ந்து நாம் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அரசு தரப்பில் கூறிவந்தாலும் தடுப்பூசியினால் 90 சதவீத உயிர் இறப்பை தவிர்க்கலாம் என கூறப்படுகின்றது...

   
    இந்த நிலையில் இரண்டு நாட்களாக தமிழக கொரோனா பாதிப்பு 1600க்கும் குறைவாக இருந்த நிலையில் இன்றைய தமிழக கொரோனா பாதிப்பு 1691 ஆக உயர்ந்துள்ளது, இதனால் மூன்றாம் அலை கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் தொடர்ந்துள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது....

மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கபடுவார்ளா?..

     
    
        கொரோனா இரெண்டாம் அலையில் இளம் வயதினரை பெரிதாக பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என சுகாதார நிறுவனங்கள் தெரிவித்திருந்த நிலையில் அதற்கான‌ அச்சம் தற்போது எழுந்துள்ளது...

        இன்றைய மத்திய அரசின் அறிக்கையில் அதற்கான அறிகுறி தென்பட்டுள்ளது, அதாவது இன்றைய அறிக்கையில் கொரோனா பாதிப்பில் மாநிலவாரியாக 8 சதவீதத்திற்கும் மேல் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கின்றது....

  ‌
     கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா முழுவதிலும் பதிவான பாதிப்பில் குழந்தைகளை மட்டும் கணக்கிடும் போது 3 சதவீதம் குழந்தைகள் பாதிக்கபட்டிருந்தனர், தற்போது வெளியான அறிக்கையில் 8 சதவீதம் குழந்தைகள் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர், அதில் கேரளா போன்ற மாநிலங்களில் 8 சதவீதங்களுக்கு அதிகமாகவும், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஒடிசா போன்ற மாநிலங்களில் 8 சதவீதங்களுக்கும் கீழாக குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்...இதனால் கொரோனா பாதிப்பு மூன்றாம் அலையாக மாறும் அபாயம் உருவாகி உள்ளது...


Corona Awareness - அந்நியன் version


கொரோனாவை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: 


Tamil Nadu Government Corona Awareness video

      கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள அனைவரும் முன்னெச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கவேண்டும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சில :


1.தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ளவேண்டும்.

Cowin - Link


2.கூட்டமான இடங்களில் முக கவசத்தை கழட்டாமல் இருக்க வேண்டும்.


3.அப்படி கூட்டமான இடங்களுக்கு சென்று திருப்பினால் கட்டாயம் கைகளால் முகங்களில் கை வைக்காமல், சோப்பு/ சானிடைசர் கொண்டு கை கழுவிய பின் முகங்களில் கைவைக்க வேண்டும்..

4.குழந்தைகளை பொது இடங்களில் அனுப்பாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்...

5.சானிடைசர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்...

6.குழந்தைகளுக்கு சோப்பு போட்டு  கைகழுவும் முறையை சொல்லி தரவேண்டும்...

7.பொதுவெளியில் பயணிக்கும் போது முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்...

8.சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்யாமல் முக கவசத்தை  தொடக்கூடாது..

9.பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பது நல்லது...

10.பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்...


      அரசு கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மதித்து பின்பற்றுவோம் கொரோனாவை ஒழிப்போம்....

நன்றி,


முக கவசம் !

உயிர் கவசம்!!...

தடுப்பூசியால் கொரோனாவை வெல்வோம்....


தொகுப்பு : தமிழரசன் சண்முகம்



கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads