வணக்கம் நண்பர்களே,
கருணை சுவர் என அழைப்பட்டும் அக்ஷயப் பாத்ரா பற்றியே இந்த பதிவு...
கருணை சுவர் :
கருணை சுவர் மற்றும் அக்ஷயப் பாத்ரா எனும் பெயரில் ஆதரவற்று சாலைகளில் திரியும் மனிதர்களுக்கு உதவு நோக்கில் பசுமை துளிகள் என்ற ஒரு தனியார் அமைப்பு இந்த Rack முறையை தொடங்கி உள்ளனர்...
ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என தனி தனி Rack மூலம் பிரிக்கப்பட்டுள்ளது இதில் இந்த இடத்தில் தேவையற்ற துணிகளை வைத்துவிட்டு செல்லலாம்.
அக்ஷயப் பாத்ரா :
அக்ஷயப் பாத்ரா என்ற இந்த Fridge Rackல் நீங்கள் தானமாக கொடுக்க விரும்பும் உணவை வைத்துவிட்டு செல்லலாம், இந்த Rack இடத்தில் வைக்க கூடிய வைக்க கூடாத பொருட்கள் என வகை படுத்தப்பட்டுள்ளது, அதாவது பிரிக்கப்படாது தண்ணீர் பாட்டில், பிரிக்கப்படாத பொட்டலத்தில் உள்ள உணவு, போன்றவற்றை இந்த ரேக்கில் வைக்கலாம், அது போல எளிதில் கெட்டு போகும் உணவு, கெட்டுபோன உணவு, கடல் உணவு, முட்டை, போன்ற பொருட்களை உள்ளே வைக்க கூடாது என வகை படுத்தப்பட்டுள்ளது...
பாண்டிச்சேரியில் கருணை சுவர்/ அக்ஷய பாத்ரா எனும் பெயரில் ஒரு சிறிய இடத்தில் மக்கள் தங்களால் முடிந்த உணவு மற்றும் உடைகளை அந்த இடத்தில் தானமாக கொடுத்தால் அந்த உணவு பொருட்களும், உடைகளும் ஆதரவற்றவர்களுக்கு அந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் ..
AKSHAYA PATHRA (Community fridge and community Rack) என்ற சேவை 20.06.2021 அன்று முதல் பாண்டிச்சேரியில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக சேவை தொடர்ந்து வருகின்றது இந்த அமைப்பின் நோக்கம் Excess Food & Cloth போன்றவற்றை ஆதரவற்றோருக்கு கொடுப்பதே ஆகும்...
திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளில் தேவை முடிந்த உணவு பொருட்களை இந்த அக்ஷய பாத்ரா அமைப்பில் கொடுத்தால் அவர்கள் ஆதரவற்றர்களுக்கு கொடுத்து விடுவார்கள்...
முடிந்த வரை இதே போன்ற அமைப்பை பயன்படுத்தி தேவைக்கு அதிகமான உணவு பொருட்களை ஆதரவற்றோருக்கு கொடுத்து உதவுவதே சிறந்த மனிதாபிமானமாகும்...இதன் மூலம் வீணாக்கப்படும் உணவு பொருட்களை தடுக்கலாம், உணவு பொருட்களை வீணடிப்பதற்கு பதில் யாருக்காவது ஒரு வேலை உணவு தேவை தீர்ந்தால் நல்லது தானே...
இந்த சேவை இருப்பதை பிறருக்கும் பகிர்ந்தால் யாரிடமாவது யாருக்காவது உதவி கிடைக்கும்...🙏
இந்த சேவை உள்ள இடம்:
கம்பன் கலையரங்கம் பக்கத்தில் Anna Signal Bussy street , பாண்டிச்சேரி...
திறந்திருக்கும் நேரம் : காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
Contact : 7708538869
8881199111
பசுமை துளிகள் - AKSHAYA PATHRA YouTube
FB page : I Love Pondicherry
நன்றி 🙏...
Don't waste food
Share maximum
Published by Tamilarasan Shanmugam