வணக்கம் நண்பர்களே,
மாதா, பிதா,குரு, தெய்வம் என்பதில் பெற்றோருக்கு பிறகு பெருதும் மதிக்கப்படும் ஆசிரியர்களை ஆசிரியர் தினமான இன்று (05.09.2021) போற்றுவோம்..
ஆசிரியர் தினம்:
முன்னால் குடியரசு தலைவர் திரு. சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் நினைவாக ஆசிரியர் தினம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது...
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு YouTube
டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவராகவும், இரண்டாவது குடியரசு தலைவராகவும் பதவி வகித்தவர், அரசியல், கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் வெற்றி கண்ட இவர் செப்டம்பர் 5ம் தேதி 1962ம் ஆண்டு பிறந்தார்...
டாக்டர் ராதாகிருஷ்ணன் புகழ்பெற்ற அரசியல் ஞானி, மாபெரும் தலைவர், பாரத ரத்னா, என பல்வேறு பெருமைகளை பெற்றிருந்தாலும் அவர் மக்களிடையோ ஆசிரியர் என்ற பெரும் அடையாளத்தை பெற்றிருந்தார், அதையே அவரும் பெருமையாக கருதினார், அவர் பல இடங்களில் நான் ஒரு ஆசிரியர் என்பதையே சொல்லியே பெருமை கொண்டார்...
இந்தியாவில் செப்டம்பர் 5 ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாகவும், பல நாடுகளில் வெவ்வெறு கல்வி தொடர்பான தலைவர்கள், கல்வி தாக்கம் ஏற்பட்ட நாள் என ஒவ்வொரு நாட்டிலும் ஆசிரியர் தினம் ஏதோ ஒரு நாளில் கொண்டாபடுகின்றது...
ஆசிரியர் தினம் கொண்டாட்டம் :
வரிகள் அற்ற வெள்ளை காகிதமாக பள்ளியில் நுழையும் மாணவனை வரிகளுடன் கூட புத்தகமாக மாற்றும் ஆசியர்களை இந்நாளில் போற்றுவோம்...
கல்வி, ஒழுக்கம், முன்னேற்ற பாதை என ஒவ்வொரு மாணவரின் முன்னேற்றத்திலும் பெரும் பங்கு வகிக்கும் ஆசியர்களை ஆசிரியர் தின நாளில் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களை வணங்கி மகிழ்ச்சி கொள்கின்றனர்...
நம் நாட்டின் வளர்ச்சி, எதிர்காலத்தை தீர்மானிக்கும் பெரும் சக்தி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கையில் உள்ளது என்பர்..
ஒருவனுக்கு தன்னை யார் என்ற அடையாளத்தை சுட்டி காட்டும் ஆசிரியர்கள் நம்முடையை தனி திறமையை சுட்டி காட்டி அதனை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்...
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்,உயர்நிலை ஆசிரியர், கல்லூரி ஆசிரியர்கள், அலுவலகத்தில் நமக்கு பயிற்சி கொடுக்கும் சக ஊழியர்களையும் போற்றும் வகையில் இந்த ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது...
நாம் எந்த உயரத்தில் சென்றாலும் நம் வளர்ச்சியை பார்த்து பெருமை கொள்வது அப்பா, அம்மா , ஆசிரியர் மற்றும் நண்பர்கள் மட்டுமே...
ஆசிரியர்கள் நாட்டிற்கு நல்ல திறமையான இளைஞர்கள், அரசியல்வாதி, தொழிலதிபர்கள் என பல துறைகளில் சிறந்து விளங்க வழிநடத்துகின்றனர்...
ஒரு நல்ல ஆசிரியர் எந்த எதிர்பார்ப்பின் இன்றி ஒரு நல்ல ஒழுக்கமுள்ள திறைமையான மனிதனை இந்த சமூகத்தில் உருவாக்குகின்றனர்...
வாழ்க்கையில் நாம் ஆசிரியரை என்றாவது ஒருநாள் சந்தித்து நாம் வளர்ச்சியை அவரிடம் தெரிவித்தால் அவர்களில் முகத்தில் ஏற்படும் சந்தோஷத்தை பார்த்தால் நம் பெற்றோரை விட அதிகமாக இருக்கும்....
யார் ஆசிரியர் ?:
பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று பாடம் கற்பிப்பவர்கள் மட்டுமா ஆசிரியர், இல்லை நமக்கு தந்தை மற்றும் தாய்க்கு ஈடாக ஒழுக்கத்தை கற்பிக்கும் அனைவரும் ஆசிரியர்களே...
பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில், தொழிற்சாலையில்,கூலி வேலையில் என பல்வேறு இடங்களில் நமக்கு கற்பிக்கும் அனைவருமே ஆசிரியர்கள் தான்....
ஆசிரியர் தினத்தில் நம்முடைய வெற்றி பாதைக்கு வழி நடத்திய ஆசிரியர்களை வணங்கி அவர்களில் பணியை போற்றுவோம்..
நன்றி 🙏,
அன்புடன்,
தமிழரசன் சண்முகம்
செந்தமிழ் தென்றல் : Click here
செந்தமிழ் Tech : YouTube Click Here
👍👍👌
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்கு