வணக்கம் நண்பர்களே,
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு உதாரணமான நடை வண்டியை பற்றியே இந்து பதிவே...
நடை வண்டி
நடை வண்டி பழகாத குழந்தையும் இன்று ஓடி திரியும் மனிதர்காளாக இருக்க முடியுமா...?...
பிறந்த குழந்தை தன்னோட தட்டி தவரும் தருணம் தாயின் தந்தைக்கு தோன்றுவது குழந்தைக்கு நடை வண்டி வாங்கனும் என்பதாகத்தான் இருக்கும்....அப்படி தன் குழந்தை உலகில் தன் கால் தடத்தை பதித்து நடக்க ஆசைப்படும் பெற்றோருக்கு ஏதோ ஒரு வகையில் ஊன்றுகோலாக இருப்பது நடை வண்டி மட்டுமேதான்...
நடை வண்டியின் நம்பிக்கை :
குழந்தை மேல் வைக்கும் நம்பிக்கையில் பாதியை நடை வண்டியின் மீது வைத்து தனது குழந்தையை நடக்க பயிற்சிக்கும் தாய் தந்தையர்...
நடை வண்டியின் உதவியுடன் நடக்கத் தொடங்கும் குழந்தை எதிரில் நின்று உற்சாகப்படுத்தும் பெற்றோர்களால் தன்னோட கால்தடத்தை பதிவு செய்யும் குழந்தையின் தன் முதல் வெற்றியை பதிவு செய்கின்றது...
உறுதியான இலக்கு சொந்த காலில் நடப்பதே என அறிந்த குழந்தை இலக்கை நோக்கி தொடர்ந்து நடைபோடும்..
"உறுதியான இலக்கு ஒன்றை மனதில் தீர்மானியுங்கள். அதை நோக்கிய பயணத்துக்கான வழியை உலகம் உங்களுக்கென உருவாக்கும்"
-நெப்போலியன் ஹில்.
குழந்தை காலெடுத்து வைக்க துணை நின்றது பெற்றோர்களின் உற்சாகமும், குழந்தையும் தன் நம்பிக்கையுமே ஆகும்...அது போல வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கையும் உடன் இருப்போரின் உற்சாகமும் இருந்தால் மனிதன் வாழ்க்கையில் பெரும் வெற்றியை சுலபமாக பதிவு செய்ய முடியும்...
"சாதிக்க முடியாததைக் கூட சாதிக்க முடியும். தன்னம்பிக்கை எனும் மனோ சக்தியால்"
-நேதாஜி
ஒவ்வொரு மனிதனின் முதல் வெற்றி நடை எடுத்து வைப்பதில் இருந்து தொடங்குகின்றது...
தானாக வீழ்ந்து தானாக எழும் அனுபவத்தை கொடுக்கும் நடை வண்டி, வெற்றியின் முதல் படி தோல்வி என்பதை ஆரம்பத்திலிருந்தே உணர வைக்கின்றது என்பது மிகை ஆகாது...வெற்றியை தீர்மானிப்பது தொடர்ந்து படும் தோல்வி என்பதே ஆகும்..
"தனக்கான வாய்ப்பு வரும்போது மனிதன் தயாராக இருப்பதே, வாழ்க்கையில் அவன் வெற்றி பெறுவதற்கான ரகசியம்"
-டிஸ்ரேலி
தட்டு தடுமாறி, தானாக வீழ்ந்து, தானாக எழுந்து, தொடர்ந்து முன்னேறி கொண்டே இருக்க வேண்டும், இடையில் வரும் இடையூறுகளை அனுபவமாக நினைத்து வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்...
நன்றி,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்
7000 பார்வையாளர்களை கடந்தது செந்தமிழ் தென்றல் வலை பக்கம்...உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பர்களே...🙏
செந்தமிழ் தென்றல் : Click here
செந்தமிழ் Tech Youtube : Click here