வணக்கம் நண்பர்களே,
நமது பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் பிறந்தநாளில் அவரை பற்றி ஒரு பதிவு...
நரேந்திர தாமோதிரதாஸ் மோதி:
நரேந்திர தாமோதிரதாஸ் மோதி எனும் நரேந்திர மோடி அவர்கள் செப்டம்பர் மாதம் 17ம் தேதி 1950ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி அடிகள் பிறந்த வட்நகரில் பிறந்தார்...
தனது இளம்வயதில் தேநீர் கடையில் வேலை பார்த்து வந்த மோடி அவர்கள் கிடைக்கும் சமயத்தில் சினிமா, அரசியல் போஸ்டர்களை ஒட்டி வேலை செய்து வந்தார், பின் தனி தேநீர் கடையை நடத்திவந்தார்....
இன்று மாபெரும் பலம் வாய்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த தனது தனிப்பட்ட திறமையாளும் உழைப்பாளும் கட்சியில் பெரிய இடங்களை பெற்று பிரபலமானவர் திரு.மோடி அவர்கள்...
மோடியும் ஆர் எஸ் எஸ் இயக்கமும் :
மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது 8 வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேவராக தன்னை இணைத்துக்கொண்டார், 1971ம் ஆண்டு பாக்கிஸ்தானுடன் கடுமையான போர் ஏற்பட்ட காரணத்தால் தன்னை தீவிரமான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தொடர்ந்து பரப்புரை செய்து வந்தார், அதே சமயம் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பல தடைகளை கண்ட சமயத்தில் தன் தனிப்பட்ட திறமையின் காரணமாக மோடி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தனக்கென தனி இடத்தையும் பிரபலமும் அடைந்தார்...
மோடியின் அரசியல் :
ஆர்.எஸ்.எஸ் மூலம் பிரபலம் ஆன திரு.மோடி அவர்கள் 14 ஆண்டுகளாக அதே இயக்கத்தில் தொடர்ந்தார்... தன் பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்த மோடி அவர்கள் 1985ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தன்னை இணைத்துக்கொண்டார்...
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியானது தனக்கென ஒரு கோட்டையை வைத்திருந்த நேரத்தில் அரசியலில் கால்தடம் பதித்த மோடி அவர்கள் கட்சியில் அடிப்படையில் சில மாற்றங்களை செய்து 1987ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் அமைப்பு செயலாளராக இருந்தார், அதனை தொடர்ந்து குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி நகராட்சி, உள்ளாட்சி தேர்தல்களில் பல வெற்றிகளை குவித்தது பாரதிய ஜனதா கட்சி, இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி பெரிய கட்சியாக வலிமை பெற்றது...
குஜராத் மாநிலத்தில் தொடங்கிய ராம் ரத யாத்திரையின் பொறுப்பாளராக மோடி அவர்கள் 1991 முதல் 1992 வரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரத யாத்திரையை நடத்தினார் வெற்றி கண்டார் மோடி..
1995ம் ஆண்டு டில்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகவும் அதன் பின் பல மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராக இருந்தும் மோடி தன் உழைப்பின் மூலம் கட்சியில் தன்னை உயர்த்தி கொண்டே வந்தார்...
குஜராத் முதல்வர் மோடி :
பாரதிய ஜனதா கட்சியில் பிரபலமான தலைவர் என்ற காரணத்தால் குஜராத் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிமுகம் ஆகி 2001 ம் ஆண்டு குஜராத்தில் முதல்வர் ஆனார் மோடி அவர்கள்...
மோடி அவர்கள் கொண்ட பெரும் ஆளுமை காரணமாக குஜராத் மாநிலத்தை பெரும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றார், அதன் அடிப்படையில் தனக்கான முதல்வர் நாட்காலியை தொடர்ந்து நான்கு முறை முதல்வர் ஆனார் திரு.மோடி அவர்கள்...
பாரத பிரதமர் மோடி:
முதல்வராக தனது சிறப்பான சேவை மூலம் இந்திய நாடு முழுவது மோடி அலை வீச ஆரம்பித்தது, காங்கிரஸ் கட்சி தனது பெரும்பான்மையை இழக்க தொடங்கிய நேரத்தில் சிறப்பான அரசியல் அனுபவம் பெற்ற மோடி அவர்கள் 2014ம் ஆண்டு இந்திய நாட்டின் பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி திரு.மோடி அவர்களை நிறுத்தியது...
நாடு முழுவது மோடி அலை வீசத்தொடங்கியது, மோடி அவர்களின் செல்வாக்கு காரணத்தில் 30 வருடத்தில் இல்லாத வரலாற்று வெற்றியை பெற்று நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக பதவியேற்றார்....
தொடர்ந்து பல சாதனை திட்டங்களை நிறைவேற்றிய மோடி அவர்களால் இந்தியா பொருளாதார வளர்ச்சியும் அடைந்தது, அதன் பின் 2015ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்தியாவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி, கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பழைய ஆயிரம், ஐநூறு நோட்டுகளை செல்லாது என அறிவித்து புதிய 2000ம் மற்றும் 500ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டார் மோடி அவர்கள்...
பல பிரதமர்கள் எடுக்க தயங்கிய பல திட்டங்களை நிறைவேற்றினார் மோடி, CAA, காங்கிரஸ் அரசு துவங்கிய நீட் நுழைவு தேர்வு, போன்ற பல மசோதாக்களை நிறைவேற்றியது...
ஜி.எஸ்.டி வரி மூலம் ஒரு நாடு ஒரு வரி என்ற மசோதாவை நிறைவேற்றினார் மோடி அவர்கள்...
அனைவருக்கும் வங்கி கணக்கு, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, போன்ற திட்டங்களின் மூலம் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சேர்த்தார் மோடி அவர்கள்..
சிறு, குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000ரூபாய் என்ற திட்டத்தின் மூலம் பல ஏழை விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகின்றது...
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் இருக்கும் இடத்தில் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்...
கொரோனா பெரும் தொற்று காலத்தில் ஊரடங்கின் காரணமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் பல நிதி ஆலோசகர்களின் உதவியுடன் நாட்டின் வளர்ச்சி பாதிக்காத வகையில் சில திட்டங்களை வகுத்தார்...
பெரும் நாடுகள் கொரோனா தடுப்பூசியை தங்கள் மக்களுக்கு செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில் இந்தியாவில் அனைத்து குடி மக்களுக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாட்டில் அனைவரும் பயன் பெரும் வகையில் தடுப்பூசி திட்டத்தை திறம்பட மேற்கொண்டார்...
மோடி அவர்களின் பிறந்தநாளான இன்று இந்திய நாடு முழுவதும் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் மோடி அவர்கள்...
சரித்திர நாயகன் மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🙏
நன்றி,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்