வணக்கம் நண்பர்களே,
அக்டோபர் 02 என்பதும் நம் நினைவிற்கு வருவது பொது விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி, மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளில் அவரை பற்றி தெரிந்து கொள்வோம்...
தேசிய அகிம்சை தினம் :
தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடவும் இந்நாளில் அவர் பெருமையை வரும் சந்ததிகளிடம் சேர்க்கவும் 2007ம் ஆண்டு மத்திய அரசால் காந்தி பிறந்தநாளை தேசிய அகிம்சை தினமாக அறிவித்தது..
"குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது. குறிக்கோளில் இல்லை"
-மகாத்மா காந்தியடிகள்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி :
குஜராத் மாநிலத்தில் போர் பந்தரில் அக்டோபர் மாதம் 02ம் தேதி 1869ம் ஆண்டு கரம்சந்த் உத்தம்சந்த் காந்திக்கும் புத்லிபாய் அம்மையாருகாகும் மகனாக பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி...பின் கஸ்தூரி பாயை வாழ்க்கை துணையாக தேர்ந்தேடுத்தார் காந்தி...
தான் 18 வயதை அடைந்ததும் தனது மேல் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார் காந்தி..அங்கு பாரிஸ்டர் (UCL Faculty of Laws) என்ற வழக்கறிஞர் படிப்பை மேற்கொண்டார்...தனது மேற்படிப்பை முடித்த காந்தி அவர்கள் தென் ஆப்ரிக்காவில் இந்தியாவை சேர்ந்த நிறுவனத்தில் பணி புரிய தொடங்கினார், அச்சமயம் அங்கு நிலவிய நிற/ இன போராட்டமே காந்திக்கு பேரும் அனுபவத்தை தந்தது...
இந்திய காங்கிரஸ் :
நிறவெறி மிகுந்து காணப்பட்ட ஆப்ரிக்காவில் தொடர்ந்து வெள்ளையர்களால் காந்தி அவமானப்படுத்தப்பட்டார்...தென் ஆப்ரிக்கவால் வாழும் இந்தியர்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் ஓர் தீர்மானத்தை தென்ஆப்ரிக்க அரசு கொண்டுவந்த போது அதனை தன் நண்பர்கள் உதவியுடனும் சட்டபூர்வமாகவும் எதிர்த்தார் காந்தி..இதே காந்தி இந்திய காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்க காரணமாக இருந்தது..இந்த கட்சியின் மூலம் இந்தியர்களை ஒன்றிணைத்து போராடினார் காந்தி...
அறவழி போராட்டம் மூலம் தென் ஆப்ரிக்கா வாழ் இந்தியர்களை ஒன்றிணைத்து அதில் வெற்றியும் அடைந்தார்...இதே நேரத்தில் இந்தியாவில் காணப்பட்ட ஆங்கிலேய அரசின் அடக்குமுறையை எதிர்க்கவும் இந்திய மக்களிடையே சுதந்திர விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்தியா திரும்பினார் காந்தி...
இந்தியாவில் காந்தி:
வேட்டி, ஜிப்பா, முண்டாசு அணிந்த தோற்றத்துடன் இந்தியாவில் காலடி வைத்தார் காந்தி.. கோபால கிருஷ்ண கோகலே அவர்கள் காந்திக்கு மும்பையில் பெரும் வரவேற்பு கொடுத்து ஊர்வலமாக அழைத்து சென்றார்..
சுதந்திர போராட்டமும் காந்தியும் :
தென்னாப்பிரிக்காவில் காந்தியின் போராட்டங்கள் மக்களிடையே காந்தி மேல் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் நட்பு மூலமாக தீவிர போராட்டத்தில் இணைந்தார் மகாத்மா, 1924ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்...
1930ம் ஆண்டு ஆங்கிலேய அரசு உணவிற்கு பயன்படுத்தும் உப்புக்கு வரி விதித்தது மட்டும் அல்லாது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உப்பை ஆங்கிலேய அரசு மட்டுமே விற்கும் என்ற அறிவிப்பால் போராட்டமான மேலும் தீவிரமானது, காந்தியுடன் பல தலைவர்களும் ஆங்கிலேய அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து போராட தொடங்கினார்கள்..
சத்தியாகிரகம் :
அகிம்சை முறையில் காந்தி போராட முடிவெடுத்தார், சத்தியாகிரக முறையில் எதிர்த்தார் காந்தி, 1930ம் ஆண்டு மார்ச் 02ம் தேதி குஜராத் முதல் தண்டி வரை 240 மைல் நடை பயணத்தை தொடங்கினார்...23நாட்கள் நடைபயணம் மூலம் தண்டியை அடைந்தார் காந்தி, தண்டி கடற்கரையில் கடல் நீரை காச்சி உப்பை தயாரித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து மக்களுக்கு தயாரித்த உப்பை விற்றனர்..இதனால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் சேர்த்து பல ஆயிரம் மக்களை சிறையில் அடைத்தது...மக்களின் எதிர்ப்பின் காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கம் வரியை திரும்பி பெற்றது...அதன் பின் 1940ம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டம் மூலம் தனது சுதந்திர போராட்ட வரலாற்றில் தனி இடம் பிடித்தார் காந்தி...
அகிம்சை நாயகன் :
தொடர்ச்சியாக பல விடுதலை போராட்டங்களில் பங்கேற்று வெற்றியும் கண்டார் காந்தி, பல விடுதலை போராட்ட தலைவர்கள் வெவ்வேறு வழிகளில் போராட்டம் நடத்தினாலும் காந்தியால் நடத்தப்பட்ட அகிம்சை வழி போராட்டம் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்தது...
பல போராட்டம் கண்ட காந்தி விடுதலை பரிசை இந்தியாவிற்கு பெற்று தந்தார்...1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாளில் இந்தியா சுதந்திர நாடாக மாறியது...
ஜனவரி 30 1948ம் ஆண்டில் தனது 78வாது வயதில் புது டில்லியில் படுகொலை செய்யப்பட்டார் காந்தி..
இன்று நாம் பயண்படுத்தும் ரூபாய் நோட்டில் சிரித்து கொண்டு இருக்கும் தேச தந்தை மகாத்மா காந்தியை நினைவு கூறுவோம் இந்நாளில்....
நன்றி,
அடுத்த பதிவில் சந்திப்போம்...
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்