ஜோதி வடிவான வள்ளலார்


வணக்கம் நண்பர்களே,

   
      அக்டோபர் 05ம் தேதி வடலூர் சத்திய ஞான சபையை உருவாக்கிய வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று, அவரை பற்றி சிறு வரிகள்...


இராமலிங்க அடிகளார் :

     வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள மருதூர் எனும் கிராமத்தில் அக்டோபர் 05ம் தேதி 1823ம் வருடம் ராமைய்யாப்பிள்ளை, சின்னம்மை ஆகியோருக்கு மகனாக பிறந்தார்...


     இராமலிங்க அடிகளாருக்கு ஆறு வயது அடைந்த போது தன் தந்தையை இழந்தார், பின் தாயான சின்னம்மை இராமலிங்க அடிகளாருடன் சென்னையில் உள்ள பொன்னேரி பகுதியில் வாழ்ந்து வந்தனர்...


     இராமலிங்க அடிகளாரை பெரிதாக படிக்க வைக்க வேண்டும் என எண்ணிய தங்கள் குடும்பத்தினர் சிதம்பரத்தில் உள்ள உறவினர் சபாபதி பிள்ளை மூலம் படிக்க வைத்தனர், ஆனால் இராமலிங்க அடிகளுக்கு கல்வியில் பெரிய ஈடுபாடு இல்லாத நிலையில் அவருக்கு ஆன்மீகத்தின் மீது பெரும் ஆர்வம் காட்டினார்..


    முருகன் மீது பெரும் ஈர்ப்பு கொண்டிருந்த இராமலிங்க அடிகளார், பள்ளி முடிந்ததும் முருகன் கோவிலுக்கு சென்று முருகனை பற்றி பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார், ஒருநாள் வழங்கும் போல் தமிழ் கடவுள் முருகனை பற்றி பாடிக் கொண்டிருக்கும் போது காஞ்சிபுரம் மகா வித்வான் சபாபதி முதலியார் இராமலிங்க அடிகளார் பாடலை கேட்டு மெய்மறந்து போனார்....சபாபதி முதலியாரிடன் சிஷ்யனாக ஆசை என கோரிக்கை வைத்தார்‌ அடிகளார், ஆனால் வித்வான் அதனை நிராகரித்து, நீ தெய்வ குழந்தை உனக்கு என்னால் குருவாக முடியாது என கூறிவிட்டார்..


     அதனை தொடர்ந்து ஆன்மீக ஈடுபாடு அதிகரித்ததால் கடவுளுக்கு தொடர்ந்து தொண்டு செய்து வந்தார் அடிகளார்...


சத்ய ஞான சபை :

" வாடி பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் "

                     - வள்ளலார்

       விவசாயத்தையே பெரும்பாலும் நம்பி இருந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த அடிகளார் பயிர் வாடியதை கண்டு தானும் வாடினார், அதற்கேற்ப பயிர் வாடியதையே தாங்கி கொள்ளமுடியாத அடிகளார் மனிதர்கள் பசியால் வாடியதை கண்டு தானும் வாடினார்...

     மக்களின் பசியை போக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1867ம் ஆண்டு தர்ம சாலையை அங்குள்ள விவசாயிகள் உதவியுடன் தொடங்கி ஏழை மக்களுக்கு இலவசமாக அன்ன தானம் வழங்கி வந்தார்....வடலூரில் உள்ள சத்ய‌ஞான சபையில் இன்றும் மூன்று வேலையும் இலவசமாக அன்னதானம் வழங்கி வருகின்றனர்...


    அனைத்து மதமும் சமம், அனைத்து மனிதர்களும் சமம் என்ற எண்ணத்திலே ஏழைகள் பசியாறும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதே சர்வ சமயத் சுத்த சன்மார்க்கம் ஆகும்...

   
   கடலூர் மாவட்டத்தில் வடலூரில் உள்ள சத்ய ஞான சபையில் இன்றும் மூன்று வேலையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றனர், இன்றும் அணையா அடுப்பு அணையா விளக்கின் முலம் வடலூரில் வள்ளலார் வாழ்ந்துக்கொண்டுள்ளார்..ஒவ்வொரு தைப்பூச திருநாள் மற்றும் தை மாத தைப்பூச திருவிழாவில் ஜோதி மூலம் வள்ளலார் காட்சி தருகின்றனர்...


வள்ளலார் :

     ஆன்மீகவாதி, அருளாசிரியர், இதழாசிரியர், சித்த மருத்துவர் என்ற பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார் வள்ளலார்...

   வள்ளலார் பாடிய ஆறாயிரம் பாடல்கள் திருவருட்பா என அழைப்படுகின்றது, வள்ளலார் எழுதிய திருவருட்பாவானது சைவவாதிகளால் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.


இராமலிங்க அடிகள் கொள்கைகள் :

1.எந்த உயிரையும் கொள்ள கூடாது..

2.எந்த உயிரையும் துன்புறுத்த கூடாது

3.புலால் உணவு உண்ண கூடாது.

4.சாதி, மதம் பார்க்காமல் பசிதீர்க்க வேண்டும்..              ‌

5.கடவுள் ஜோதி வடிவானவர்

6.இறந்தவர்களை‌ எரிக்க கூடாது..

7.சாதி, மத பேதம் இல்லாமல் ஒற்றுமையாக வாழவேண்டும்...

8.தந்தை, தாய் மொழியை தள்ளி வைக்க கூடாது..

9.ஏழைகள் வயிறை எறிய செய்யாதே..

10.நண்பர்களுக்கு துரோகம்‌ செய்ய கூடாது...


அருட்பெரும்ஜோதி :

    
     இராமலிங்க அடிகளார் தன் 50வது வயதை எட்டிய பின் தன் கொள்கைகளை பரப்புவதை பெரும்பாலும் தவிர்த்தார், 1984ம் ஆண்டு தனது சீடர்களிடம் தான் சமாதி அடைய போவதாக கூறி சீடர்களை ஒன்றிணைத்தார், சீடர்களுடன் பேசி மகிழ்ந்த அடிகளார் பக்கத்தில் இருந்த சிறு‌ அறைக்கு சென்றார், வெகுநேரம் வெளியில் வராத அடிகளாரை காண அறையை சிறந்த போது ஜோதி வடிவிலான தோற்றத்தையே சீடர்கள் கண்டனர், அவர் கூறியது போல் கடவுளுக்கு வடிவம் இல்லை ஜோதி தான் கடவுள் அன்பு தான் கடவுள் என்பதை நிஜவாழ்க்கையில் வெளிப்படுத்தினார்....


 "அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி !
தனிப்பொரும் கருணை அருட்பெரும் ஜோதி" !!

     

      இல்லாதவர்களுக்கு இருப்பதை கொடுத்த உதவினால் அன்பின்‌ மூலம் இறைவனை காணலாம்....

     கருணை கடல் அருட் பிரகாச வள்ளலார் அன்னதானம் வழங்கும் ஒவ்வொரு மனிதர்களின் வடிவாய் ஜோதியாய் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே இருப்பார்....


தனிப்பெரும் கருணை நாள் :

         இன்று தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அக்டோபர் 05ம் தேதி வள்ளலார் பிறந்த தினத்தை போற்றும் வகையில் தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்தது வள்ளலாரின் கொள்கைக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளார்...

           

நன்றி,

அடுத்த பதிவில் சந்திப்போம்...


தொகுப்பு : தமிழரசன் சண்முகம்
      

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads