வணக்கம் நண்பர்களே,
அக்டோபர் மாதத்தின் முக்கிய தினங்கள் மற்றும் அதன் வரலாறு பற்றி இந்த பதிவில் காண்போம்...
முக்கிய தினங்கள் :
அக்டோபர் மாதத்தின் முக்கிய தினங்கள் வரிசைபடுத்தப்பட்டுள்ளது..
OCT 01 - ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட நாள்
OCT 01 - நடிகர் திலகம் பிறந்தநாள்
OCT 02 - காந்தி ஜெயந்தி
OCT 04 - உலக விலங்குகள் தினம்
OCT 05 - இராமலிங்க அடிகளார் பிறந்த தினம்
OCT 06 - உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி நியமிக்கப்பட்ட நாள்..
OCT 08 - Indian Air Force day
OCT 10 - இந்திய அஞ்சல் தினம்
OCT 11 - பெண் குழந்தைகள் தினம்
OCT 12 - மனித உரிமை ஆணையம் உருவாக்கப்பட்ட நாள்
OCT 14- சரஸ்வதி பூஜை
OCT 15 - APJ அப்துல்கலாம் பிறந்தநாள்
OCT 15 - விஜய் தசமி
OCT 16 - உலக உணவு தினம்
OCT 18 - BBC Radio உருவாக்கப்பட்ட நாள்
OCT 19 - மிலாடி நபி
OCT 22 - சந்திராயன் 1 ஏவப்பட்ட நாள்
OCT 24 - United Nations Day
OCT 30 - பசும்பொன் முத்து ராமலிங்கதேவர் பிறந்த தினம்
OCT 31 - இந்தியாவின் இரும்பு மனிதர் பிறந்த நாள்..
முக்கிய தினங்களும் அதன் வரலாறும் :
OCT 01 : நடிகர் திலகம் பிறந்தநாள்
தனக்கென தனி நடிப்பால் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்தநாள் அக்டோபர் 01ம் தேதி..இந்த ஆண்டு அதனை கொண்டாடும் வகையில் கூகுல் நிறுவனம் தன் முகப்பு பக்கத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் புகைபடத்தை வெளியிட்டு பெருமைபடுத்தியுள்ளது...
OCT 01 - ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட நாள்
1,62,970 km2 பரப்பளவு கொண்ட ஆந்திர பிரதேசம் தனி மாநிலமாக 1953ம் ஆண்டு அக்டோபர் மாதம் 01ம் தேதி அறிவிக்கப்பட்டது...
OCT 02 - காந்தி ஜெயந்தி
காந்தி பிறந்தநாளான அக்டோபர் 02ம் நாள் இந்தியா முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது, இந்தியா முழுவதும் அக்டோபர் 02 காந்தி ஜெயந்தி பொது விடுமுறை ஆகும்..
OCT 04 - உலக விலங்குகள் தினம்
உலக விலங்குகளை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 04ம் தேதி உலகம் முழுவதும் விலங்குகள் தினம் கொண்டாடப்படுகிறது...
OCT 05 - இராமலிங்க அடிகளார் பிறந்த தினம்
கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டி அருகில் அமைந்துள வடலூரில் உள்ள சத்ய ஞான சபையை உருவாக்கிய வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் 1823ம் ஆண்டு அக்டோபர் 05 தேதி ஆகும்..
OCT 06 - உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி நியமிக்கப்பட்ட நாள்..
பார்த்திமா பீவி அம்மையார் 1989ம் ஆண்டு இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது அக்டோபர் 06 ஆகும்...
OCT 08 - Indian Air Force day
1932ம் ஆண்டு இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டதையும் அதனை நினைவு கூறவும் விமான படையை போற்றவும் இந்தியா முழுவதும் அக்டோபர் 08ம் தேதி Indian Air Force தினம் கொண்டாடப்பட்டு வருகிறது..
OCT 10 - இந்திய அஞ்சல் தினம்
இந்தியாவில் டல்ஹெசி பிரபுவால் இந்திய அஞ்சல் துறை 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்டது, அதன் பிறகு இந்தியாவில் அஞ்சல் துறையில் பங்களிப்பை போற்றும் வகையில் இந்திய அஞ்சல் தினம் அக்டோபர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது...
OCT 11 - பெண் குழந்தைகள் தினம்
பெண் குழந்தைகளின், சுதந்திரம், பாதுகாப்பு, உரிமைகளின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ஐக்கிய அமெரிக்கா நாடு 2011ம் ஆண்டு முதல் அக்டோபர் 11ம் தேதி பெண் குழந்தைகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது...
OCT 12 - மனித உரிமை ஆணையம் உருவாக்கப்பட்ட நாள்
1993ம் ஆண்டு அக்டோபர் 12ம் நாள் மனித உரிமைகளை வெளிப்படுத்த அதற்கெனே தனி ஆணையம் அமைக்கப்பட்டது...
OCT 14- சரஸ்வதி பூஜை /ஆயுத பூஜை
இந்த வருடம் அக்டோபர் 14ம் நாளில் சரஸ்வதி பூஜை/ ஆயுத பூஜை கொண்டாடப்படவுள்ளது, செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள், இந்நாளில் செய்யும் தொழில், பயண்படுத்தும், ஆயுதம் ,வேலை செய்யுமிடம், வாகனங்கள் என அனைத்திற்கும் பூஜை செய்யப்படும்.
OCT 15 - APJ அப்துல்கலாம் பிறந்தநாள்
1931ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாள் முன்னால் குடியரசு தலைவரான அக்னி நாயகன் திரு. APJ அப்துல்கலாம் ஐயாவின் பிறந்த தினம்...
OCT 15 - விஜய தசமி
இந்த வருடம் அக்டோபர் மாதம் 15ம் நாளில் விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது, இந்நாளில் குழந்தைகள் தங்களின் படிப்பை தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை...
OCT 16 - உலக உணவு தினம்
நாம் உண்ணும் உணவு பற்றியும் அதன் பெருமையை போற்றும் வகையில் உலக உணவு தினத்தை கொண்டாடி வருகின்றனர்...
OCT 18 - BBC Radio உருவாக்கப்பட்ட நாள்
1922ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதா BBC Radio-வானது உருவாக்கப்பட்டது...
OCT 19 - மிலாடி நபி
முஸ்லீம் சகோதரர்களின் மிலாடி நபி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் கொண்டாடப்பட உள்ளது...
OCT 22 - சந்திராயன் 1 ஏவப்பட்ட நாள்
அக்டோபர் மாதம் 2008ம் ஆண்டு 22ம் தேதி சந்திராயன் 1 ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது...
OCT 24 - United Nations Day
அக்டோபர் மாதம் 24ம் தேதி United Nations Day அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு வருகின்றது...
OCT 30 - பசும்பொன் முத்து ராமலிங்கதேவர் பிறந்த தினம்
தேவர் அய்யா என மக்கள் அனைவரும் அன்போடு அழைத்த பசும்பொன் முத்து ராமலிங்கதேவர் 1908ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி பிறந்தார், "தேசமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்" என்ற கூற்றின் மூலம் தேசியம், தெய்வீகத்தை சமமாக கருதினார் தேவர் அய்யா...
OCT 31 - இந்தியாவின் இரும்பு மனிதர் பிறந்த நாள்..
இந்தியாவின் ஒற்றுமைக்காக பாடுபட்ட இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் அக்டோபர் மாதம் 31ம் தேதி பிறந்தார்...
நன்றி,
அடுத்த பதிவில் சந்திப்போம்...
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்
8000 பார்வையாளர்களை கடந்தது செந்தமிழ் தென்றல் வலை பக்கம், ஆதரவுக்கு நன்றி...🙏