சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

வணக்கம் நண்பர்களே,
 

         அக்டோபர் மாதம் 11ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று பல தடைகளை தாண்டி நாட்டின் முன்னேற்றம் பாதையில் வெற்றிகரமாக பயணிக்கும் பெண் குழந்தைகளை பற்றி இந்த பதிவில் மூலம் போற்றுவோம்...


சர்வதேச பெண் குழந்தைகள் தினம்:

     பெண் குழந்தைகளின் சம உரிமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த United Nations General Assembly மூலம் வாக்களிக்கப்பட்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 11ம் தேதி சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது...


நோக்கம் :

     பெண் குழந்தைகளின் சம உரிமை, பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினை, படிப்பறிவு, குழந்தை திருமணம், சட்ட உரிமைகள், மருத்துவ உரிமைகள் போன்றவற்றை விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கமாகும்.


பெண் குழந்தைகள் வளர்ச்சி :

     தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் பெண்களுக்கு அனைத்து நாடுகளிலும் அனைத்து துறைகளிலும் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்க தொடங்கிவிட்டனர், "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு" என்ற பழங்கால தடையை உடைத்தெறிந்து சமூகத்தில் தனக்கென ஒர் அங்கீகாரத்தை பெற்று வளர்ச்சி அடைந்து வருகின்றனர்...


     சமையல் அறை மட்டுமே தனக்கான எல்லை என்று வாழ்ந்த நம் பெண் குழந்தைகள், தற்போது  விவசாயம் முதல் அறிவியல் தொழில்நுட்ப துறை வரை வளர்ந்து வந்துள்ளனர்...


   கல்வி, விளையாட்டு, விவசாயம்,  தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம், ராணுவம் என அனைத்து துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் பெண்கள் நம் நாட்டின் கண்களே...


சாதனை பெண்கள் :

1.ராணி லட்சுமிபாய் ( 1828 - 1858)

2.சரோஜினி நாயுடு ( 1879 - 1949)

3.விஜய லட்சுமி பண்டிட்(1900 - 1990)

4.நீதிபதி அண்ணா சாண்டி (1905- 1996)

5.கல்பனா சாவ்லா (1962 - 2003)

6.அன்னை தெரசா (1910 - 1997)

7.இந்திரா காந்தி ( 1917 - 1984)

8.ஜெயலலிதா (1948 - 2016)

9.எம்.எஸ் சுப்புலட்சுமி (1916 -2004)

10.P.T உஷா

11. P.V சிந்து

     தனக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து தனக்கான துறையை தேர்வு செய்து அதற்காக தன்னை உழைத்து அந்த துறையில் வெற்றி பெற்ற பல பெண்கள் இவ்வுலகில் போற்றப்பட வேண்டியவர்களே...


சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்
சவுரி யங்கள் பலபல செய்வாராம்
மூத்த பொம்மைகள் யாவும் அழிப்பாராம்
மூடக் கட்டுகள் யாவுந் தகர்ப்பராம்
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்
ஏத்தி ஆண்மக்கள் போற்றிய வாழ்வராம்
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ !

              - பாரதியார்

      பாரதி கண்ட புதுமை பெண்களாக மாறியுள்ள பெண்களால் நாட்டுக்கும் வீட்டுக்கும்‌ பெருமை சேர்க்கிறது...


   காலம் பல மாறினாலும் தற்போது பெண்கள் மேல் குடும்பத்தாரும், சமூகத்தாரும் பெரும் நம்பிக்கை வைப்பதோடு வெற்றி பாதைக்கு துணை நின்று பெண்களுக்கு மேலும் வலிமை சேர்க்கின்றனர்.


   வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சொந்த தொழில் மூலம் வெற்றி நடைபோடும் பெண்களுக்கு பொருளாதார உதவிகளை செய்ய மத்திய மாநில அரசுகள் பல சலுகைகளை வழங்கி வருகின்றது...


  பெண் தாய், சகோதரி, மனைவி என்ற உறவுகளோடு மட்டும் தங்கள் எல்லையை நிறுத்தி கொள்ளாமல் சமூகத்தில் தொழிலதிபர்களாகவும், அரசியல்வாதியாகவும், விளையாட்டு வீராங்கனையாகவும், பாடகியாகவும், தங்கள் திறமையால் இந்த சமுதாயத்தில் ஜொலித்து கொண்டிருக்கின்றனர், தற்போது சமூதாயத்தில் தனக்கென ஒரு சிறப்புடன் வலம் வரும் அனைவரும் பாரதி கண்ட புதுமை பெண்களே...


  சில ஆண்கள் தங்கள் பெற்றோரை கைவிட்டாலும் பெண்கள் தங்களின் பெற்றோரை கைவிடாமல் கடைசிவரை தங்களால் முடிந்த அளவிற்கு பெற்றோருக்கு உதவி செய்யும் பல பெண்கள் தங்களின் பெற்ற கடமையை நிறைவேற்றி வருகின்றனர்‌...உடலளவில் பெண்களுக்கு வலிமை‌ குறை என்றாலும் மனதளவில் பெண்களின் வலிமை நூறு ஆண்களின் மன வலிமைக்கு சமமாகும்...

பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதன் தீர்வுகளும்:

    இந்த சமூகத்தில் எந்தளவிற்கு பெண்களுக்கு சுதந்திரம் இருந்தாலும் அந்த அளவிற்கு சில சமூக விரோதிகளால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றது...சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சட்ட ரீதியான பெரும் தண்டனைகள் இன்னும் நடைமுறையில் இல்லை என்பதே உண்மை..


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மிக முக்கியமானவை குழந்தை திருமணம், பாலியல் சீண்டல்கள்....


இதில் பெண் குழந்தைகளின் மீது செய்யப்படும் பாலியல் துன்புறுத்தல் என்பது மிக கொடுமையாக உள்ளது, இதற்கு எதிரான போஸ்கோ சட்டத்தால் இந்த குற்றங்கள் இன்னும் குறையவில்லை காரணம் அந்த சட்டத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை இல்லை என்பதே ஆகும்...


பெண் குழந்தைகளை எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனையான இரட்டை மரண தண்டனை கொடுத்தால் மட்டுமே குற்றங்கள்‌ குறையும்...


தொடக்க பள்ளியிலே பெண் குழந்தைகளுக்கு Good Touch & Bad Touch பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தனி பாடம் இருக்கவேண்டும்...


பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை தொடர்ந்த கண்காணித்து அவர்களின் திறமையை வெளிப்படுத்த பாலமாக இருக்க வேண்டும்...


   சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்...


நன்றி,

அடுத்த பதிவில் சந்திப்போம்...

தொகுப்பு : தமிழரசன் சண்முகம்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads