வணக்கம் நண்பர்களே,
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) தொடங்கி இன்றுடன் 50 ஆண்டு நிறைவு பெற்று அதிமுகவின் பொன் விழாவை கொண்டாடி வருகின்றது, அதிமுக கடந்து வந்த பாதையை இன்று இந்த பதிவில் காண்போம்...
திராவிட முன்னேற்றக் கழகம் :
திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய அரசியல் கட்சி ஆகும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் தொண்டர்படைகளை கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் செப்டம்பர் 17ம் தேதி 1949 ஆம் ஆண்டு அண்ணாதுரையால் தொடங்கப்பட்டது, 1944 முதல் நீதிக்கட்சியில் இருந்த அண்ணாதுரை சில கருத்து வேறுபாடு காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி, அண்ணாதுரை மற்றும் பெரியாருடைய கொள்கைகளை திமுகவின் பிரதான கொள்கையாக மாற்றினார்...
செப்டம்பர் மாதம் 18ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளராக அண்ணாதுரை அறிவிக்கப்பட்டார், திமுக சிவப்பு மற்றும் கருப்பு கொடியை கட்சி கொடியாகவும் அறிவித்தது...
கலைஞர் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் இருவரும் கட்சியின் கொள்கைகளை பரப்பி வந்தனர், கலைஞர் பொது கூட்டத்திலும், எம்.ஜி.ஆர் திரைப்படங்களிலும் திராவிட கொள்கைகளை பரப்பினர்..
1967ம் ஆண்டிலிருந்து 1969ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தார் அண்ணாதுரை... அண்ணா மறைவிற்கு பிறகு நடந்த 1971 சட்டமன்ற தேர்தலில் கலைஞர் கருணாநிதி முதல்வராக தேர்ந்தேடுக்கப்பட்டார், இந்த தேர்தலில் கலைஞருடன் எம்.ஜி.ஆர் கைகோர்த்து கலைஞருக்கு வெற்றியை பேற்று தந்தார்....
அதிமுக உருவாக காரணம் :
பொதுக்கூட்டங்களில் செலவு கணக்குகளை கலைஞர் கேட்ட எம்.ஜி.ஆர், அதனால் இருவருக்கும் பெரும் இடைவெளி ஏற்பட்டது, பின் அந்த இடைவெளி எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கினார் கலைஞர், இதன் காரணமாகவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக பிள்ளையார் சுழி போட்டது...
கட்சியை விட்டு நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் தனி கட்சியை ஆரம்பிக்க திட்டமிட்டார், ஏற்கனவே அனகாபுத்தூரை சேர்ந்த ஒருவர் பதிவு செய்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பொதுச்செயலாளராக எம்.ஜி.ஆர் மாறினார்...அதன் படி அக்டோபர் 17ம் தேதி 1972ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது...இந்த அதிமுக பின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் மாற்றப்பட்டது...
ஆரம்பகால அதிமுக கொடியில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை தொண்டர்களால் பயண்படுத்தினர், பின் திமுகவின் கொடியான கருப்பு சிவப்பு கொடியில் அண்ணா மற்றம் எம்.ஜி.ஆர் படங்களை பொறித்து பயண்படுத்தினர், அண்ணாவின் படம் பொறிக்கப்பட்ட கருப்பு சிவப்பு கொடியே பின் கட்சி கொடியாக அறிவிக்கப்பட்டு, முதல் முதலில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் கொடி ஏற்றப்பட்டது....தற்போது பயண்படுத்தப்படும் அதிமுக கொடியை எம்.ஜி.ஆர் வழிகாட்டுதலோட நடிகர் பாண்டு வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
அதிமுகவின் முதல் தேர்தல் :
1977ம் ஆண்டு அதிமுக எம்.ஜி.ஆர் தலைமையில் ஆளும் திமுகவின் கலைஞரை எதிர்த்து 200 தொகுதிகளில் போட்டியிட்டார், அதே தேர்தலில் 130 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது, அந்த முறை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் முதன் முதலில் முதல்வராக பதவி ஏற்றார்...இந்த தேர்தலில் திமுக பெரும் பின்னடைவை சந்தித்தது...
புரட்சி தலைவரும் புரட்சி தலைவியும்:
பின் மத்திய அரசால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி கலைக்கப்பட்டது, பின் அடுத்து வந்த 1980ம் ஆண்டு தேர்தலில் 177 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 129 இடங்களை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்...அதே நேரத்தில் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும் பின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்..
1984ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் உடல் நலக்குறைவு காலமாக சிகிச்சைக்கு வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது, அந்த தேர்தலில் ஜெயலலிதா பெரும் பங்கு வகித்தார், பிரச்சாரத்திற்கு எம்.ஜி.ஆர் வராத நிலையில் ஜெயலலிதான் சூராவளி பிரச்சாரம் மூலம் எம்.ஜி.ஆர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்...அந்த தேர்தலில் 155 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 132 இடங்களை பெற்று மூன்றாவது முறையாக முதல்வர் ஆனார் எம்.ஜி.ஆர்., இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் சிகிச்சை முடிந்து பதவி ஏற்க சில வாரங்கள் ஆனது..
எம்.ஜி.ஆர் மறைவு:
தமிழக முதல்வராக மூன்றாவது முறை தேர்ந்தேடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இறந்தார்..
யார் அடுத்த முதல்வர் ஆவது என்ற குழப்பம் அதிமுகவில் நிலவியது, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை முதல்வராக்க பெரும்பாலோனோர் ஆதரித்து குரல் எழுப்பினர் ஆனால் ஜெயலலிதாவிற்கு அதில் விருப்பம் இல்லாத சூழலில் எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தில் வாகனத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது, 33 எம்.எல்.ஏ ஜெயலலிதாவை ஆதரித்தனர், எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி முதல்வரானார், பின் ஜனவரி 26ம் தேதி 1988ம் ஆண்டு அரசின் மீது சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது...
ஜானகிக்கு 111 வாக்குகள் மட்டுமே பெற்று நிலையில் ஜானகி அரசால் பெரும்பான்மை நிரூபிக்கப்படாமல் போனதால் 1988ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி அதிமுக ஆட்சி மத்திய அரசால் கலைக்கப்பட்டது...ஜானகி அணி, ஜெயலலிதா அணி என கட்சி பிளவு பெற்றதால் அதிமுக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது..
ஜெயலலிதாவின் அதிமுக :
அதிமுக 1988ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 29 இடங்களை மட்டுமே பெற்று திமுகவின் கலைஞர் கருணாநிதி முதல்வர் ஆனார்..அதே நேரத்தில் அதிமுக ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் ஒன்றாக இணைந்தது...
1991ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஜெயலலிதா தலைமையில் இரட்டை இலை சின்னத்திலே தேர்தலை சந்தித்தது...ஜெயலலிதாவின் தலைமையில் சந்தித்த முதல் தேர்தலில் 164 இடங்களை பெற்றும் முதன் முதலில் முதல்வர் ஆனார் ஜெயலலிதா...
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தியது எதிர்கட்சியான திமுக, அப்போது ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தில் பல கோடிகள் செலவிட்டால் ஜெயலலிதா மீது பல விமர்சனங்களை எதிர்கொண்டார்...
ஜெயலலிதாவின் தோல்வி :
ஜெயலலிதா மீது பல வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு போன்ற விமர்சனங்களால் அதிமுக பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது..அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் கொண்ட மோதல் போக்கு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் பல மேடைகளில் ஜெயலலிதா மீது பல விமர்சனங்களை முன்வைத்தார், ஜெயலலிதாவை பார்த்து பேச நடுங்கிய சில அரசியல்வாதிகள் மத்தில் வெடி குண்டு கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்தது என்று வெளிப்படையாக விமர்சித்தார் ரஜினி..
1996ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஆதரவோடு கலைஞர் கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனார்...அந்த தேர்தலில் அதிமுக போட்டி இட்ட 168 இடங்களில் 4 தொகுதிகளை மட்டுமே பெற்று மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்தார் ஜெயலலிதா...
அசுர பலம் கொண்ட அதிமுக :
2001ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆனார், அதே நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை செல்ல நேரிட்டதால் ஓ.பன்னீர் செல்வம் தற்காலிகமாக சில மாசம் முதல்வராக அறிவித்தார் ஜெயலலிதா...2006ம் ஆண்டு தேர்தலில் 61 இடங்களை மற்றுமே பெற்று ஜெயலலிதா தோல்வியுற்றார், பின் வந்த 2011ம் ஆண்டு மற்றும் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொடந்து இருமுறை வெற்றி பெற்றார் ஜெயலலிதா...
ஜெயலலிதா மறைவு :
2016ம் ஆண்டு சிறுநீரக தோற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 72நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா டிசம்பர் மாசம் 29ம் தேதி 2016ம் ஆண்டு உயிரிழந்தார்..
அதே நேரத்தில் டிசம்பர் 29ம் தேதி 2016ம் ஆண்டு இரவில் ஓ.பன்னீர் செல்வர் முதல்வராக பதவியேற்றார்..பின் இறுதி அஞ்சலி முடிந்து ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்பட்டது....
ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தேடுக்கப்பட்டார், சசிகலா முதல்வர் ஆக வேண்டும் என சில தரப்பினர் கூறி வந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஒருமணி நேர தியானத்திற்கு பிறகு தர்ம யுத்ததை தொடங்கினார்...இதே நேரத்தில் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தார்..
சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கவைத்தார் சசிகலா, அப்போது நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஓ.பன்னீர் செல்வம் 9 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார், இதன் காரணமாக எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபித்து முதல்வராக பதவி ஏற்றார்...சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்...
திமுக போன்ற கட்சிகள் அதிமுக கட்சி கலைந்துவிடும் என்ற நம்பி இருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒன்றிணைந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்ற பதவியை அதிமுக பொதுக்குழுவால் அறிவிக்கப்பட்டு சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார்கள்....
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி வழிநடத்தப்பட்டு வருகின்றது, இருவரும் சேர்ந்து சந்தித்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்து...இதற்கு காரணம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என டி.டி.வி தினகரன் ஆரம்பித்த கட்சியால் வாக்குகள் பிரிக்கப்பட்டது என்கின்றனர்..
அக்டோபர் மாதம் 17ம் தேதியான இன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன் விழாவை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றது...கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா இன்று அண்ணா, எம்.ஜி.ஆர்ஸஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...
நன்றி,
அடுத்த பதிவில் சந்திப்போம்...
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்