வணக்கம் நண்பர்களே,
தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரைத்துறையில் தன் கால் தடத்ததை பதித்து 46 வருடங்கள் நிறைவுற்றதை தொடர்ந்து மத்திய அரசின் திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை இந்த ஆண்டு நடிகர்.திரு.ரஜினிகாந்த் அவர்கள் பெற்றுள்ளார்...
சிவாஜிராவ் to ரஜினிகாந்த்:
ரஜினிகாந்த் என்ற காந்த பெயரை கொண்ட மனிதரின் பெற்றோர்களால் வைக்கப்பட்ட பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பதாகும், பெங்களூரில் 12.12.1950 அன்று பிறந்து வளர்ந்த இவர் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிகுப்பம் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர் பெங்களூரின் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக இருந்தார்....
ஆரம்ப காலத்தில் சிறு குறு நாடகங்களில் நடித்த ரஜினிகாந்த் பின் சென்னைக்கு ரயில் மூலம் வந்தடைந்தார் இதனை தர்பார் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி அவர்களே தெரிவித்திருப்பார் , பின் 1973ம் ஆண்டு சென்னை திரைப்பட கல்லூரியில் படிக்கத் தொடங்கினார்...
ஒரு கல்லூரி நாடகத்தில் ரஜினி அவர்கள் நடித்த போது அதனை கண்ட இயக்குனர் திரு.பாலசந்தர் அவர்கள் ரஜினியின் திறமையை கண்டு வியந்தார், அதோடு ரஜினி அவர்களில் கண்ணில் ஏதோ ஒரு காந்த சக்தி இருப்பதாக உணர்ந்த அவர் அதுவரை சிவாஜிராவ்- வாக இருந்த அவர் பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றினார்... ரஜினிகாந்த் என்ற பெயரை பாலசந்தர் அவர்களின் வெகுநாள் கனவு பெயராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது...
நடிகர் ரஜினிகாந்த் :
1975ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகம் திரைப்படத்தில் ரஜினிக்கு முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்தார்...அந்த படத்தின் ரஜினிகாந்தின் அறிமுக காட்சி ஒரு வீட்டின் இரும்பு கேட்-ஐ உதைத்து திறப்பது போல் இருக்கும்...அந்த ரஜினி அன்றே ரசிகர்கள் மனதில் தன் அடையாளத்தை பதித்தார்...
திரு.பாலச்சந்தர் அவர்களின் மனதில் பதிந்த கதாப்பாத்திரம் ரஜினிகாந்த் அவர்களுக்கு மட்டுமே பொறுத்தும் என அவர் அடிக்கடி கூறுவார்...
அதனை தொடர்ந்து சில படங்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ரஜினி அவர்களை திரு.கலைஞானம் அய்யா பைரவி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்தார்...சினிமா வட்டாரங்கள் ரஜினியை கதாநாயகனாக பைரவி திரைப்படத்தில் நடிக்க வைத்தால் பெரும் நஷ்டம் அடையும் என எச்சரித்தும் கலைஞானம் அவர்கள் ரஜினி மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்ததன் விளைவாக பைரவி மிகப்பெரிய வெற்றி அடைத்தது...
தொடர்ந்து பல வெற்றி படங்களை குவித்த ரஜினி அவர்கள் மக்கள் மனதில் தன் தனித்திறமையால் அடையாளத்தை பதித்தார்...ஆரம்பத்தில் காலத்தில் நடிப்பின் தனி அடையாளத்தை வைத்திருந்த கமலும் ரஜினியும் திரைத்துறையில் சேர்ந்தே பயணித்த நிலையில் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவால் ரஜினி அவர்கள் தொடர்ந்து கதாநாயகனாக தனியாக நடித்தே பயணித்தார்...
எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு அடுத்து பெரிய ரசிக பட்டாளத்தை கொண்டிருந்தார் ரஜினி அவர்கள்...
சூப்பர் ஸ்டார் ரஜினி :
அபூர்வ ராகம், பைரவி, புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா என வெற்றி படத்தை கொடுத்து வந்த ரஜினி அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தானாக ஒட்டிக்கொண்டது...
சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் என மறுத்தார் ரஜினி ஆனால் காலமும் சூழ்நிலையின் காரணத்தால் சூப்பர் ஸ்டார் பட்டம் அவரிடம் சென்றடைந்தது...
அண்ணாமலை படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தனி டைட்டில் கார்டு மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படியான பின்னணி இசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எழுந்து ஆட வைக்கும்.....
இதுவரை 168 படங்களில் நடித்துள்ள ரஜினி அவர்களில் வருடா வருடம் ஒரு மைல் கல் என தொடர்ந்து வெற்றியை கண்டவர்...ஆறு முதல் அறுபது வரை, ஜானி, மனிதன், முள்ளும் மலரும், பணக்காரன், வேலைக்காரன், பில்லா, ராணுவ வீரன், மாவீரன், என தொடர்ந்து பல வெள்ளி விழாக்களை கண்டவர் ரஜினிகாந்த்...
பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம், தளபதி, வீரா, படையப்பா, மன்னன், சந்திரமுகி, எந்திரன், என்ற 90கிட்ஸ்களை கவர்ந்த திரைப்படங்கள் ஆகும்...
நடிப்பில் மட்டும் இன்றி கதா ஆசியராக தனி அடையாளத்தை வள்ளி மற்றம் பாபா படத்தில் மூலம் வெளிப்படுத்தினார்..
கருப்பு வெள்ளை, ஈஸ்ட்மேன் கலர், சினிமாஸ்கோப், அனிமேஷன், Hollywood , மோஷன் கேப்சர் போன்ற தொழில்நுட்பத்தில் நடித்துள்ளார் ரஜினி...
பத்ம விருதுகள், தாதா பால்கே போன்ற மத்திய அரசின் விருதுகள் மற்றும் தமிழக அரசு விருதுகள் என பல விருதுகளை குவித்துள்ளார் ரஜினிகாந்த்...
அபூர்வ ராகம் படத்தில் தொடங்கி தர்பார் படம் வரை ரஜினி தனக்கென மக்கள் மனதில் ஒரு இடத்தை பெற்றுள்ளார்...46 வருடம் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தனக்கே உரிய ஸ்டையிலுடன் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்...
ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள் கிரிக்கெட் ஸ்டார் முதல் வெளிநாட்டு பிரபலங்களை வரை கவர்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...
தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு சென்ற பெருமை முழுக்கு முழுக்க ரஜினிகாந்த் அவர்களையே சேரும்...
தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படம் படப்படிப்பு முடிந்து திபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது..
சமீபத்தில் ஜப்பானில் வெளிவந்து வெற்றி நடைபோடும் தர்பார் திரைப்படம் மேலும் ஒரு சான்றாக உள்ளது...
தாதா சாஹேப் பால்கே ரஜினிகாந்த்:
இன்று ( 25.10.2021) தாதா சாஹேப் பால்கே விருதினை பெற்ற ரஜினிகாந்த் இந்த விருதினை தன் குருவான கே.பாலசந்தர், அண்ணன் சங்கரநாராயணன், நண்பர் ராஜ் பகதூர், இயக்குனர், தயாரிப்பாளர், ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களுக்கும் சமர்ப்பிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்...
விருதை பெற்றுக்கொண்ட திரு.ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார், குடியரசு தலைவர், தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின், திரு.விஜயகாந்த் ஆகியோர் ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் , தமிழக கவர்னர் N.ரவி வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார், பல மாநில பிரபல நடிகர்கள் , ரசிகர்கள் என அனைவரும் ட்வீட்டர் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்...
தாதா சாஹேப் பால்கே விருதிற்கு மிகவும் பொருத்தமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தொடர்ந்து 46 வருடம் தன் சொந்த திறமையாலும் உழைப்பாலும் உயர்ந்து நிற்கும் இந்த மனிதன் வாழ்நாள் சாதனையாளரே...🙏
எம்.ஜி.ஆர், சிவாஜி வரிசையில் ரஜினி என்ற மந்திரச்சொல் நிலைத்து நிற்கும்...
Support my YouTube channel 👇
நன்றி,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்