வணக்கம் நண்பர்களே,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான அண்ணாத்த திரைப்படத்தை பற்றியே இந்த பதிவில் காண்போம்...
அண்ணாத்த தீபாவளி:
தென்னிந்தியாவின் வசூல் மன்னன் எனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார், படத்தில் நயந்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி,சதீஷ், ஜகபதிபாபு, பிரகாஷ்ராஜ் போன்ற பெரும் நடிகபட்டாளமே நடித்துள்ளர், இமான் இசையில் வெளிவந்துள்ள அண்ணாத்த திரைப்படம் இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..
இமான் மாயாஜாலம் :
படத்தில் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து பல சாதனைகளை படைத்து வந்துள்ளது, குறிப்பாக S.P பாலசுப்பிரமணியம் பாடிய கடைசி பாடலான அண்ணாத்த அண்ணாத்த பாடல் ரசிகன் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...
அதன் பின் வெளியான சார சார காற்றே, மருதாணி, வா சாமி, என்னுயிறே போன்ற பாடல்கள் அனைத்துமே மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...
படத்தில் வரும் பின்னணி இசையில் இமான் மாயாஜாலம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...ஆக்ஷன் காட்சிகளில் தலைவர் ரஜினிகாந்திற்கு இசை மூலம் பெரும் பலத்தை சேர்த்துள்ளார் இமான்...
சிறுத்தை சிவா அட்டகாசம் :
இயக்குனர் சிவா அவர்களுக்கே உரிய பாணியில் கிராமத்து கதை மூலம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளார், துள்ளல் நிறைந்த கிராமத்து காட்சி, அண்ணன் தங்கை உறவின் பிணைப்பை உணர்ச்சி பொங்கும் வகையில் சிறுத்தை சிவா இயக்கி உள்ளார், சூப்பர் ஸ்டார் ரஜினியை பல வருடங்களுக்கு பிறகு கிராமத்து அண்ணன் கதாபாத்திரம் கொடுத்ததுளளார்.
ரஜினி எனும் அரக்க நடிகனுக்கு தீனி போடும் அளவிற்கு கதையம்சம் உருவாக்கி மக்களிடையே ரசிக்கும் வகையில் அமைத்துள்ளார் சிறுத்தை சிவா, நடிக பட்டாளத்தை வைத்து பெரிய திருவிழாவையே நடத்தியுள்ளார் சிவா, படத்தின் பாதி காட்சிகள் கிராமத்து கலாட்டா கலந்த பாசம், துள்ளல், எனவும் பிற்பாதியில் பாசம் ஒரு புரம், ரஜினியை அதிரடி கலந்த வெறித்தனமான அசுரன் போலவும் படத்தை சரியான பாதையில் நகர்த்தி மக்களின் கண்ணீரை அடிக்கடி தூண்டிவிடும்படியும் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர்..
படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பும் இமான் அவர்களின் பிண்ணனி இசையும் படத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளது..
படத்தின் இடைவேளை காட்சிகளில் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் நிழல் தங்கையான கீர்த்தி சுரேஷ் மீது படும் படு வைத்துள்ள காட்சியும் அதன் D.இமான் பின்னணி இசையில் மூலம் ரசிகர்களின் நாடி துடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் சிறுத்தை சிவா...
அசூர நடிகன் ரஜினிகாந்த் :
46 வருடங்களாக தென்னிந்தியாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி அதில் தொடர்ந்து பயணிக்கும் தாதா சாஹேப் பால்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் "காளையன்" கதாப்பாத்திரத்தில் அசூர நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்களிடையே பாராட்டப்படும் படி நடித்துள்ளார்...
சண்டை காட்சிகள், பாடல் காட்சிகள், பாச காட்சிகள் என அனைத்திற்கும் தன் மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து ஈரத்துள்ளார் ரஜினி....
காளையன் தங்கையாக வலம் கீர்த்தி சுரேஷ் மாறுபட்ட நடிப்பும், ரஜினியுடன் இருக்கும் பாச காட்சிகளாலும் குடும்ப பார்வையாளர்களை தன் வசம் ஈர்த்துள்ளது...
நமக்கு எப்போவுமே ஒரு கணக்கு தாங்க...
வாழும் போது எத்தனை பேரை சிரிக்க வச்சோம்.
சாகும் போது எத்தனை பேரை அழ வச்சோம்..
இவ்ளோதாங்க வாழ்க்கை
என்ற வசனம் மூலம் ரசிகர்களை கவர்ந்து ஈரத்துள்ளார் ரஜினி
ரஜினியின் அண்ணாத்த படத்தின் மீது சிலர் வியாபார நோக்கத்துடன் திட்டமிட்டு எதிர் விமர்சனங்களையும், ரஜினியை தனிப்பட்ட முறையில் தாக்கியும் விமர்சனங்களை முன்வைத்தார், ஆனால் தனது காந்த நடிப்பின் மூலம் தமிழகத்தில் துவண்டு கிடந்த சினிமாத்துறை மற்றும் திரையரங்கு தொழிலாளர்களின் வாழ்வில் மீண்டும் புத்துணர்ச்சி பெற வைத்துள்ளார் ரஜினி...
அசூரநடிகன் தன்னோட மாறுபட்ட நடிப்பின் மூலம் நொடிக்கு நொடி ரசிகர்களை கவர்ந்து இழத்துள்ளார்...தன் 70 வயதிலும் ரசிகர்களையும் மக்களையும் மகிழ்விக்கும் உன்னத கலைஞனின் கலை பணி இன்னும் தொடரும்...தன் தங்கைக்காக கல்கத்தா ரவுடிகளை வேட்டையாடி தங்கையின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் காட்சிகளில் ரஜினிகாந்த் வாழ்ந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது...மகளீர் மட்டும் குடும்ப பார்வையாளர்களை கவர்ந்திழுத்துள்ளார்...
வயது என்பது வெறும் நெம்பர் என அழுத்தமாக ரஜினியின் படங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம்...
வசூல் சாதனை :
படத்தின் முதல் நாள் சில விஷ பூச்சிகளால் படத்துடன் மீது மோசமான விமர்சனங்களை வீசினர், ஆனால் அத்தனை எதிர் கருத்துக்களையும் தவிடு பொடியாக்கியது அண்ணாத்த, தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் 34 கோடியை பெற்றதன் மூலம் தமிழகத்தின் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றுள்ளது அண்ணாத்த...இதற்கு முன் ரஜினியின் 2.0 திரைப்படம் 32 கோடியை தமிழகத்தில் முதல்நாள் வசூல் செய்து முதல் இடத்தில் இருந்தது, இதன் மூலம் தன் சாதனையை தானே முறியடித்துள்ளார் ரஜினிகாந்த்...
இரெண்டே நாட்களில் உலகம் முழுவதும் 113 கோடி என்ற இமாலய சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார் ரஜினிகாந்த், இந்த வசூலை மற்ற முன்னணி நடிகர்கள் பெற கிட்டதட்ட ஏழு நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது...
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது, Book My Show மூலம் அண்ணாத்த 10லட்சம் டிக்கெட்டுகளை இரெண்டே நாட்களில் விற்றுள்ளது Book my Show நிறுவனம், இதுவும் இதுவரை எந்த நடிகரும் பெறாத சாதனையே ஆகும்..
குடும்ப பார்வையாளர்களுக்கு அண்ணாத்த படம் பார்க்க ஏதுவாக தியேட்டர்கள் ஸ்பேஷல் காட்சிகளை திரையிட்டு வருகின்றது, படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆன நிலையில் இன்றும் House Full Show மற்றும் ஸ்பேஷல் காட்சிகளை திரையிட்டு வருகின்றனர்...
திட்டமிட்டு பரப்பப்பட்ட எதிர் விமர்சனங்களை குடும்ப பார்வையாளர்களின் ஆதரவுடன் படத்திற்கு ஆதரவான கருத்துக்களை பெண்கள் முன்வைக்கின்றனர்...உண்மையான கருத்துகளால் பொய்யான எதிர் விமர்சனங்களை பரப்பியவர்கள் மீது கறியை பூசியது அண்ணாத்த...
தொடர்ந்து பல சாதனைகளை பெற்று வந்து அண்ணாத்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் வெற்றி பெற்றது...
வரும் நாட்களில் நடுநிலை மக்கள் மூலம் தியேட்டர்கள் திணறும் என்பது திரைவிமர்சகர்களின் கருத்தாகும்...
குடும்பங்கள் கொண்டாடும் அண்ணாத்த வியாபார ரீதியாக வெற்றி அடைந்தது மக்களின் மனதை வென்றது...
A for Annaatthe...💥🔥..
நன்றி,
தொகுப்பு: தமிழரசன் சண்முகம்