புது வருஷம் வந்தாச்சி 2022...

வணக்கம் நண்பர்களே,

      9000 பார்வையாளர்களை கடந்தது செந்தமிழ் தென்றல் வலைப்பக்கம், தொடர்ந்து ஆதரவு தந்த நண்பர்களுக்கு நன்றி...

     நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் என் பதிவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்...



    கடந்த வருடம் நம் வாழ்க்கை முறையை புரட்டி போட்ட கொரோனா தொற்று நோயால் பெரும் உயிர் சேதமும், பொருளாதார வீழ்ச்சியையும் கடந்து வந்துள்ளோம்...பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்கிய பெரகய நாடுகளும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள திணறியது, அதே நேரத்தில் தடுப்பூசி என்ற பேராயுதத்தால் பெரும் உயிர் சேதத்தை நம் தேசம் தடுத்துள்ளது...

 
  பெரும் சோகத்தையும் அச்சத்துடன் நாம் வெற்றிகரமாக 2021ம் ஆண்டின் இறுதி நாட்களில் பயணித்து கொண்டுள்ளோம்...


   ஒற்றுமை, தன்நம்பிக்கை எனும் பெரும் பாடத்தை கற்று தந்துள்ளது கொரோனா நோய்,  2021ம் ஆண்டு பெரும் நம்பிக்கையும் பயணிக்க ஆரம்பித்தோம், ஆனால் 2021ம் ஆண்டு 2020ம் ஆண்டை விட மிக பெரும் தாக்கத்தை கொரோனா இரண்டாம் அலை மூலமாக ஏற்படுத்தி தந்தது, தினம் தினம் லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்பும், ஆயிரக்கணக்கில் பலி எண்ணிக்கையும் நம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது 2021ம் ஆண்டின் முதல் பகுதி...

   தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நேரத்தில் எதிர்க்கட்சியும் சேர்ந்து ஆளும் கட்சியும் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது...

   2021ம் ஆண்டின் பிற்பகுதி இயற்கை சீற்றத்தால் பல இடங்களில்  வெள்ளம் சூழ்ந்தாலும், இந்த வருடம் புயல் உருவாவதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது...

   அடுத்த விநாடி நமக்காக மறைத்து வைத்திருக்கும் ஏமாற்றங்கள்/ ஆச்சர்யங்கள் இந்த உலகில் அதிகம் என்பதை அழுத்தமாக நினைவுபடுத்தியது 2021ம் ஆண்டு..

‌கொரோனாவுக்கு எதிராக போராடும் முயற்சியில் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் இணைந்து கை கோர்த்து கொரோனாவுக்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தி கொரோனா மூன்றாம் அலையை தடுத்து வெற்றி பெற்றுள்ளோம்..

  இந்த ஒற்றுமையின் மூலமே ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸை எதிர்கொண்டு வெற்றியை அடைய முடியும், எதிர் வரும் 2022ம் ஆண்டு தொடக்கமே சோதனை மிகுந்த ஆண்டாக அமைய காத்திருந்தாலும் ஒற்றுமை மற்றும் தன்னம்பிக்கையின் மூலமே எதிர்த்து நிற்க முடியும்...

  விருப்பு, வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை, ஆணவம், தலைநகரம் போன்றவற்றை நடக்கும் 2021ம் ஆண்டின் கடைசி பகுதியிலே விட்டு செல்வோம்...


"ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில்தான் இருக்கிறது"
                      -திருமூலர்


2022ம் ஆண்டை வரவேற்போம் :

    வரும் 2022ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம், வரவேற்போம், திட்டமிடுவோம், செயலாக்குவோம், வெற்றி பெறுவோம்..

"சரியான உற்சாகத்தோடு வேலை செய்யத் தொடங்கினால் வெற்றி நிச்சியம்"
           -சுவாமி விவேகானந்தர்

   
     ஒவ்வொரு மனிதர்களிடமும், ஒவ்வொரு நிகழ்வுகளிலும், ஒவ்வொரு நொடியிலும் தொடர்ந்து நல்ல விஷயங்களை கற்று கொள்வோம், நமக்கு தெரிந்ததை பிறருக்கு கற்று கொடுப்போம்...


"கற்றுக்கொள்வதற்காக வாழுங்கள், உண்மையில் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொள்வீர்கள்"
        
           -ஜான் சி மேக்ஸ்வெல்.

 
   வரும் காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ கற்றுக்கொள்வோம்...

கடந்த ஆண்டின் சோகம் மிகுந்த நாட்களை மறந்து புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்போம் நம்பிக்கையுடன்...


நன்றி,..

இப்படிக்கு,
தமிழரசன் சண்முகம்

2 கருத்துகள்

  1. 2020 மற்றும் 2021ஆண்டு பல இழப்புகள் நடந்துள்ளது 2022ஆண்டு ஆவது நன்றாக அமையவேண்டும் என கடவுளை வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி வரும் காலம் நல்லதே நடக்கும் என நம்புவோம்...🙏..

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐

      நீக்கு
கருத்துரையிடுக
புதியது பழையவை

Google auto Ads