என் நினைவில் வாழும் அம்மா...

வணக்கம் நண்பர்களே,

     கிடைக்க வேண்டியது கிடைக்காத போதுதான் அவர்களை நாம் நினைவு கூறுவோம் அவ்வாறு நானும் அனுபவித்து வந்த அந்த ஆதரவு பாசம் வாழ்க்கையில் தொடராமல் போனதே இந்த பதிவுக்கு காரணம் ஆனது...



    என் அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று (02.02.2022)... இந்த நாளில் என் அம்மாவை பற்றி மறக்க கூடாத மறக்க முடியாத நினைவலைகளை சிறு பதிவாக வெளியிடுகின்றேன்....

      காலம் சிலருக்கு மறக்க முடியாத பல அனுபவங்களையும் சோதனைகளையும் கொடுத்தாலும் சில காட்சிகள் மட்டும் மறக்க முடியாத காயங்களை விட்டு செல்லும்...அந்த காயம் ஏக்கம் கலந்து இருப்பதே ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது...

அம்மாவும் நானும் :
 
    எளிமையான தோற்றத்துடன் சிரித்த முகத்துடன் கள்ளம் கவடம் இல்லாது தனக்கென வாழாத வழக்கமான அம்மாவை போல் தான் என் அம்மாவும்..

   வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் நண்பன் என் அம்மா, என் சிரிப்பிலே என் அம்மாவின் சிரிப்பும் கலந்திருக்கும், நண்பனிடம் சொல்ல தயங்கிய விஷயத்தை கூட என் அம்மாவிடம் சொல்ல தயங்கியது இல்லை...

    எனக்கான தேவையை என் அப்பாவிடம் கேட்க தூது சென்று என் தேவையை பூர்த்தி செய்தாயே‌ அம்மா..

   நிலத்தில் வேலை செய்யும் போது எங்களுக்கு சாப்பாடு எடுத்து வந்து அங்கேயே உட்காந்து சாப்பிட்ட அந்த நாள் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் ஆனது அம்மா..

  பல முறை உனக்கு ஏதும் தெரியாதுன்னு சொல்லி காயப்படுத்தும் போது நீ சிரிக்கும் அந்த வெள்ளந்தி சிரிப்பு மறக்க முடியாது அம்மா...

  கறி முட்டை என எதை சாப்பிட்டாலும் உனக்கு எடுத்து கொள்ளாமல் என் இலையில் வைத்து சந்தோஷம் கொள்வாயே அம்மா..

  யாரையும் ஏமாற்றி பிழைக்க கூடாதுன்னு வாழ்க்கையை சிறுவயதில் இருந்தே என்னை பக்குவ படுத்தினாயே அம்மா..

அம்மாவின் நினைவலைகள் :

   தினம் தினம் வெளியில் செல்லும் போது சொன்ன அந்த வார்த்தை ' பார்த்து போடா' எனும் வார்த்தை இன்று சொல்ல பலர் இருந்தாலும் நீ சொல்வது போல் வருமா அம்மா...

  வீடு திரும்பும் போது எனக்காக தின்பண்டம் ஏதாவது ஒன்னு செய்து காத்திருக்கும் அம்மாவை வண்டியிலிருந்து வீட்டில் இறங்கும் போது தினமும் உன் நினைவு கொள்கிறேன் அம்மா..

   படிக்கத் தெரியாத வெள்ளந்தியான மனசை பல முறை உனக்கு இது எல்லாம் தெரியாது புரியாது என்று பல முறை சொன்னேன் ஆனால் நீ இல்லாமல் இன்று நான் அடுத்த அடி எடுத்து வைக்க பெரிய தயக்கம் செலுத்தும் போது தான் தெரிகின்றது  உன் அருமை என்னவென்று...


     நான் எதிர்பாராத அந்த நாள் நீயும் நானும் கடைசியாக பேசிக்கொண்டு சொல்லும் போது எனக்கு தெரியாது இனி வரும் காலம் பல சோதனைகளை சந்திக்க போகின்றேன் என்று...

   அந்த விபத்து நடந்து ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்த காட்சி அடிக்கடி வந்து என் மனதில் தீராத வலியை இன்னும் கொடுத்து வருகின்றது, அந்த ஓர் இரவு ஆம்புலன்ஸ் சத்தம் எங்கள் வாழ்க்கையை புரட்டி போட்டது அந்த இரவு, சென்னை மருத்துவமனையின் இரண்டு மாத காலத்தில் நொடிக்கு நொடி ஆயிரம் வேதனையை அனுபவித்து வந்தோம், ஆண்டவன் சிறு சிறு நம்பிக்கையாக கொடுத்து வந்தான்...வீட்டிற்கு வந்து விட்டோம் எல்லாம் சரி ஆனது என்று எண்ணும் நேரத்தில் ஆழ்கடலில் ஏற்பட்ட சுனாமி போல் எங்களை தனிமையில் தவிக்கவிட்டு சென்றாய்...வேண்டாத மத கடவுள் இல்லை, நம்பிக்கை வைக்காத கடவுள் இல்லை கடைசிவரை நம்பிக்கை கொடுத்து அந்த நம்பிக்கையை அவனை உடைத்தான்‌, சிறு வயதிலே என் கையால் உன் உடலுக்கு கொள்ளி வைக்க வைத்தான்....எதிரிக்கும் வரக்கூடாது என் நிலை...🙏

  " நூறு பேர் என் குறை தீர்க்க இருந்தாலும், நீ அருகில் இருப்பது போல் வருமா அம்மா" .

  "பசுமையான நினைவுகளும் சில நேரங்களில் குணமான காயங்களில் வலியை ஏற்படுத்தக்கூடும்"

அம்மாவாக உன் கடமையை செய்துவிட்டு சென்றாய்..மகனாக என் கடமையை செய்ய முடியாமல் போனதை நினைத்து இன்றும் தவித்து வருகின்றேன்...

என் நினைவில் வாழும் அம்மா‌வை வணங்குகிறேன்...


நன்றி....

அம்மா உன் நினைவில் வாழும் தமிழரசன் சண்முகம்

4 கருத்துகள்

  1. அம்மாவின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கும். அம்மாவின் உடல் மட்டும்தான் இந்த உலகில் இல்லை. அவரின் ஆன்மா எப்போதும் உங்கள் சுற்றியே இருக்கும். உங்களுக்கு நல்லதையே செய்வார்கள்...🙏

    பதிலளிநீக்கு
  2. அம்மாவின் ஆன்மா உங்கள் உயிரோடு எப்பொழுதும் கலந்திருக்கும் அண்ணா ... நீங்கள் கவலைப்பட வேண்டாம். மகிழ்ச்சி கொள்ளுங்கள் அம்மா எப்பொழுதும் உங்களுடனே பக்க பலமாய் இருக்கிறார்கள் என்று ..!!!

    பதிலளிநீக்கு
கருத்துரையிடுக
புதியது பழையவை

Google auto Ads