வணக்கம் நண்பர்களே,
நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா விமர்சனம் எழுத உள்ளேன், அண்ணாத்த படத்திற்கு பிறகு ஒரு சிறந்த திரைப்படத்தை கண்ட அனுபவம்...
வலிமை :
அஜித்குமார் நேர்கொண்ட பார்வை திரைப்பிடத்திற்கு பிறகு நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் வலிமை, தயாரிப்பாளர் போனி கபூர், H.வினோத் கூட்டணியில் வெளிவந்துள்ள வலிமை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் கடந்த 24.02.2022 அன்று திரைக்கு வந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...
Zee Studios தயாரிக்கும் வலிமை திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 150கோடி..
வலிமை படத்தின் பாடலை யுவன் சங்கர் ராஜாவும் பிண்ணனி இசையை ஜிப்ரானும் இசை அமைத்துள்ளனர்...
அஜித்குமார், ஹுமா குரேஷி, ஜான்வி கபூர், கார்த்திகேயன், விஜே பாணி, செல்வா, புகழ் போன்றவர்கள் இணைந்த நடித்துள்ள " வலிமை " திரைப்படம் வெளிவந்த முதல் நாளில் 36 கோடி வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது, இதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் 34.94 கோடி முதல் நாள் வசூல் செய்ததே பெரும் சாதனை இருந்தது, வலிமை திரைப்படம் 36 கோடியை முதல்நாளில் வசூல் செய்ததன் மூலம் அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது வலிமை திரைப்படம்...
படத்தில் அஜித்குமார் ACPயாக தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார், படத்தின் மூலகதை போதை பொருட்களால் தமிழகத்தில் நடைபெறும் கொள்ளை, கொலை போன்ற குற்ற சம்பவத்தை தடுத்து அதற்கு தொடர்புள்ள கூட்டத்தை அழிப்பதே நோக்கமாக இருப்பதாக இயக்குனர் படத்தை தெளிவாக நகர்த்தி இருப்பார்...
இளைஞர்களுக்காகவும், மக்களுக்கு தேவையான முக்கியமான கருத்தை பதிவு செய்துள்ளது வலிமை...
இளைஞர்களின் வேலையில்லாத சூழலும், குடும்ப சூழ்நிலையும் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி போதைக்கு அடிமையாகி பல குற்ற சம்பவங்களில் சிக்கி தவிப்பதை அடிப்படையாக அமைத்து இயக்குனர் சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்....
குடும்ப சூழ்நிலையாலும் வறுமையாலும் தவறு செய்வதை தவறு என சுட்டிக்காட்டி உழைப்பால் உயரலாம் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் வினோத்..
பைக்கை அடிப்படையாக வைத்து அரங்கேற்றப்படும் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை போன்றவற்றை தற்போது நடந்து வரும் குற்ற சம்பவங்களை போல சித்தரித்து காட்டப்படும் காட்சிகள் தத்ரூபமான காட்சி படுத்தப்பட்டுள்ளது...
படம் முழுவதும் அதிரடி கலந்த பைக் சண்டைகள், சில இடங்களில் அம்மா செண்டிமென்ட் என தேவைக்கு ஏற்ப படத்தில் காட்சியை அமைத்துள்ளார் இயக்குனர் வினோத்..
அஜித்குமாரின் மற்றும் உடன் வரும் நடிகர்களின் அதிரடி பைக் சாகசங்கள் திரையரங்குகளில் பெரும் கைதட்டல் வாங்கியுள்ளது...
அஜித்குமார் மற்றும் ஹீமா குரோஷி கதாபாத்திரம் படத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது..
வேலையில்லாத நிலையால் குடும்பத்திலும், சொந்தகாரர்களாலும் ஒதுக்கப்படும் இளைஞர்களில் தடுமாற்றம் குற்ற சம்பவத்தில் ஈடுபட வைக்கின்றது என்பதே உண்மை என வெளிப்படையான கருத்தை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்...
வலிமை அப்டேட் வலிமை அப்டேட் என ஒரு காலத்தில் சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்யப்பட்ட வலிமை படம் தற்போது வெளிவந்து அஜித்குமார் அவர்களின் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகின்றது...
நீண்ட நாள்கள் காத்திருந்த ரசிகர்களுக்கு தல தீபாவளி ஆனது வலிமை...
பிண்ணனி இசையில் சிறிது தொய்வு இருந்தாலும் Screen Play மூலம் படத்தை மக்கள் கொண்டாடும் படி மாற்றியுள்ளார் இயக்குனர்..
படத்தில் காட்சியில் 14 நிமிடம் குறைக்கப்பட்டு 26ம் தேதியிலிருந்து திரையரங்குகளில் திரையிடப்பட்டது..
படத்தில் பைக் சாகச காட்சிகளால் ஹாலிவுட் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுத்துள்ளார் படத்தின் ஒளிப்பதிவாளர்... அஜித்குமாரின் Screen Presence ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது...
Fake Reviews மூலம் வலிமை படத்தை வீழ்த்தலாம் என் நினைத்த சிலரின் ஆசையை, அண்ணாத்த படத்தை போல வலிமை படமும் பொதுமக்கள் ஆதரவோடு வெற்றி பதிவு செய்துள்ளது..
இன்றோடு ( 26.02.2022) 100 கோடி வசூல் செய்து 100வசூல் செய்த படங்களின் வரிசையில் வலிமை திரைப்படமும் இடம்பெற்றது.
மொத்தத்தில் வலிமை வலிமையான வெற்றியை பதிவு செய்துள்ளது...பணத்திற்காகவும் பரிசு பொருட்களுக்காகவும் போலி விமர்சனங்களால் ஒரு திரைப்படத்தை வீழ்த்திவிடலாம் என நினைத்தவர்களின் முகத்தில் மக்கள் தங்கள் அரங்கம் நிறைந்த காட்சிகள் மூலம் கரியை பூசி அசிங்கப்படுத்தியுள்ளனர்....
வலிமை Ratings 8 / 10 ..
வலிமை வலிமை தான் ❤️..
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்