வணக்கம் நண்பர்களே,
ருத்ராட்சம் பற்றி ஆன்மிகம் கலந்த அறிவியல் தகவல்களை அண்ணன் SSR பதிவிலிருந்து எடுத்து வெளியிடுகின்றேன்...
ஆன்மிகத்திற்கும்,அறிவியலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இந்து மதவழிபாடு என்பது அனைத்து மதத்திற்கு அப்பாற்பட்ட வாழ்வியல் முறை ருத்ராட்சம் அணிவது என்பது இந்து மத ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பெரும் அறிவியல் ஒளிந்திருக்கிறது, ருத்ராட்சம் அணிவது என்பது இந்து மத ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பெரும் அறிவியல் ஒளிந்திருக்கிறது,
ருத்ராட்சம் வரலாறும் அறிவியலும் :
முதலில் ருத்ராட்சத்தின் வரலாறும், அறிவியல் சார்ந்த மருத்துவ குணங்களும் அதன் பிறகு ஆன்மீக வளர்ச்சியின் பங்கையும் பார்ப்போம், ருத்ராட்சம் இதன் வேதியல் பெயர் எலீயோகார்பஸ்( Elaeocarpus)
எலீயோகார்பஸ் மரத்திற்கு 36 உட்பிரிவுகள் இருக்கிறது ஆனால் அந்த 36 மரங்களின் கொட்டைகளையும் ருத்ராட்சமாக பயன்படுத்துவது கிடையாது,
அதிலிருந்து குறிப்பிட்ட மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுத்துகிறோம் அவை:
1. எலீயோகார்பஸ் சொராட்டஸ்
(Elaeocarpus serratus)
2. எலீயோகார்பஸ் ட்யூபர்குலேட்டஸ் (Elaeocarpus tuberculatus)
3. எலீயோகார்பஸ் கானிட்ரஸ்
(Elaeocarpus ganitrus)
இவை தென் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் சில இடங்களில் காணப்பட்டலும் சிறந்த தரம் உள்ளவை தென்கிழக்கு ஆசிய பகுதிகளான இந்தோனேசியா,ஜாவா,சுமத்ரா,போர்னியோ வடக்கே இந்திய இமயமலை சாரல், நேபாளம், வங்கதேசம் அஸ்ஸாம்,ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் உள்ளவையே.
ஏனெனில் அங்குள்ள நிலம், சூழ்நிலை போன்றவை அதன் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கிறது இவை 100அடி உயரம் வரை வளர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடியது, 25லிருந்து 36டிகிரி வரை தட்பவெப்ப நிலையில் உள்ள பிரதேசங்களில் மட்டுமே வளரும் இவை அவ்வளவு எளிதாக முளைக்காது.
இதனை பயிர் செய்தால் 1முதல் 2 ஆண்டுகள் வரை முளைப்பே வெளியில் தெரியாது இதன் இலை மினுமினுப்பான வெளிர் பச்சை நிறம் வெண்மை நிறப்பூக்கள் கருநீலப்பழம் ஆகிய அமைப்பை கொண்டிருக்கும். இவை ஏப்ரல்,மே மாதங்களில் பூ பூக்கும் ஜீன் மாதங்களில் காய்க்கும், ஆகஸ்ட்-அக்டோபரில் பழம் பழுக்கும்.
அறிவிலும் ஆன்மீகமும் :
அறிவியல்:-
இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே ருத்ராட்சம் புகழ்பெற்றது. உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து ருத்ராட்சம் குறித்து ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் ருத்ராட்சத்திற்கு மூன்று பண்புகள் தன்மைகள் உள்ளதாக கண்டறிந்தனர், அவை சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic)
காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic)
அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive)
ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய ருத்ராட்சத்தையோ அல்லது ஒரு தொகுதி முகங்கள் கொண்ட ருத்ராட்சர மணிகளையோ அணிவோருக்கு ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள் (Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன்ஆர்வம் மனஉறுதி ஆகிய மாற்றம் பெறுகின்றனர்
ருத்ராட்சம் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிப்படுத்தி உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு உள்ளத்திற்கான மன தைரியத்தை தர வல்லது.
நம்மிடம் இருக்கும் எதிர்மறை சக்திகளை அழிக்கக் கூடியது.
ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் நம்மை சுற்றி ஒளி சக்தி வட்டம் உண்டாகும் இந்த ஒளிவட்டம் அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலையை பொறுத்து அமையும். ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது. மனநிலை சாந்தமாகவே இருக்கும். சக்தி வட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும்.
மேலும் ருத்ராட்ச மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் ஆய்வில் தெரிவித்தனர். ருத்ராட்ச மணிகளுக்கு ஆழ்ந்த கோடுகள் உண்டு அதனையே முகங்கள் என்று குறிப்பிடுவோம் 1 கோடு இருந்தால் 1 முகம் என்றும் 5 கோடுகள் இருந்தால் 5 முகம்.
இந்த மணிகளுக்கு இயற்கையாகவே துவாரங்கள் உண்டு ருத்ராட்சம் 3 நிறங்களில் உண்டு செம்மை நிறம், கறுப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம்(பொன் நிறம்).
மகத்தான மூலிகை:-
ருத்ராட்ச மணிகளை கொண்டு சித்த மருந்துகளும் தயாரிக்கபடுகின்றன.
''ருத்ராட்ச தெரபி’' என்ற மாற்று வைத்திய முறையானது வட மாநிலங்கள் மற்றும் மேலை நாடுகளில் மிகவும் பிரசித்தமாக இருக்கிறது
ருத்ராட்சம் ஒரு மகத்தான மூலிகையாக பார்க்கப்படுகின்றது.
ருத்ராட்சம் மருத்துவ பலன்கள் - YouTube Link
ருத்ராட்சம் நம் உடலோடு ஒட்டி இருக்க கிருமிகளை அழித்து, சக்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல வித நோய்களிலிருந்து காக்க வல்லது.
ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.
பித்தம்,தாகம்,விக்கல் போன்வற்றிற்கு மிகவும் நல்லது கபம்,வாதம்,தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்து என ஆயுர்வேதம் கூறுகின்றது
மனநோய்களுக்கு சாந்தம் அளிக்கும் கண்டகாரி,திப்பிலியுடன் இதை சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். சிறு குழந்தைகள் ருத்ராட்சத்தை அணிந்து வர அவர்களின் கல்வியில் வியத்தகு முன்னேற்றத்தை காண முடியும். படிப்புக்கு தேவையான மனதை ஒரு நிலை படுத்த கூடிய சக்தி மிக்கது அதோடு ஞாப சக்தியை தரக்கூடியது.
ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து,
அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி.
இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். ருத்ராட்சத்தை தூளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும்.
ருத்ராட்சம் ஆன்மீகம்:
ருத்ராட்சம் என்றல் சிவபெருமான் "ருத்ரன்" என்ற பெயர் கொண்டு ருத்ராட்சம் அதிகம் அணிந்து கொண்டிருக்கும் கடவுள் இவர்தான் 'ருத்திரன்’ என்பது சிவபெருமானையும்
‘அட்சம்’ என்பது கண்களையும் குறிப்பதாகும். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகளே ருத்ராட்சம்.
சிவபெருமான் போலவே, விநாயகர், அம்பாள், திருமால் (மகாவிஷ்ணு), பிரம்மதேவன், காலபைரவர்,சூரியதேவன், சந்திரதேவன், செவ்வாய் தேவன், சுக்கிரதேவன், வாயுதேவன் என்போரும் ருத்ராட்சம் அணிந்து உள்ளனர்
சிவபெருமானின் கண்களில் தோன்றிய உருத்திராட்சமானது அதை அணிபவரை அவர் தன் கண் போல காப்பாற்றுவார்.
கண்டத்தில் மணியாகும் உருத்திராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
பிறந்த குழந்தை முதல் வயதான பெரியவர் வரை, ஆண் பெண் என இரு பாலரும் தாராளமாக அணியலாம்.
எல்லா நேரத்திலும் அணிந்தே இருக்கலாம்.
ருத்ராட்சம் சித்தர்கள் கண்டறிந்த ஒரு மகத்தான மூலிகை தனித்துவமான சிறப்புகள் பல உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது
நாம் ருத்ராட்சத்தை அணிந்திருதால் ஒரு செயல் தொடங்கும் போதே அது வெற்றி அடையுமா இல்லையா என்பது நம் மனதிற்கு தெரிந்துவிடும். அதை தெரிவிக்க வல்ல சக்தியை ருத்ராட்சம் தரும். எந்த ஒரு செயலை செய்வதற்குமான தெளிவும், ஆற்றலும்கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தை தரக் கூடியதாக
இருக்கிறது. உடல், உள்ள தூய்மையை தரவல்லது. ஆலகால விஷத்தை சிவபெருமானார் தம் கழுத்தில் தங்க வைத்து உயிர்களைக் காத்ததை குறிக்கும் பொருட்டே நாம் கண்டமணி அணிகிறோம்.
இயற்கையாகவே நம் கழுத்து பகுதியில் விஷத்தை முறிவு செய்யும் காரணிகள் உள்ளன. ஆதிபராசக்தி தன் உடல் முழுவதும் திருநீறும் உருத்திராட்சமும் அணிந்து கொண்டதாக அருணாசலபுராணம் கூறுகிறது.
ருத்திராட்சம் அணிவதால் மனமும் உடலும் தூய்மை அடையும். இதை அணிந்த பின்னர் எந்த துர் சக்தியும், தீய சக்தியும் நம்மை அண்டாது ருத்திராட்சம் ஒரு சிவ கவசமாக இருக்கும்.
நீராடும் போது கண்டமணியில் பட்டு வரும் நீர் கங்கைக்கு சமமாகும் சிறுவர்களுக்கு நல்ல படிப்பு திறனும், கவன ஒருமை,ஞாபக சக்தியும் கிடைக்கும். பெண்களுக்கு அனைத்து செல்வங்களும் உறுதியான தாலி பாக்கியமும் கிட்டும்.
ருத்திராட்சம் அணிபவர்களுக்கு ?ருத்திராட்சம் அணிந்தவர்களுக்கு இந்த பிறவியில் செல்வமும்,உடல் நலனும் இன்பமான வாழ்கையும் கிடைத்து இறுதியில் முக்திபேறும் கிடைக்கும்.
ருத்திராட்சத்திற்கு இயற்கையாகவே இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடலின் வெப்பத்தை சீராக வைத்திருக்கும் தன்மை உள்ளது. ருத்திராட்சம் அணிந்து நெற்றியில் நீறு பூசி, பஞ்சாட்சர ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்பவர்களுக்கு சிவபெருமானார் கூடவே இருந்து வேண்டியவற்றை செய்வார்.
உருத்திராட்சம் அணிய சிலர் தயங்குகிறார்கள் இந்த தயக்கம் தேவையற்றது யார் வேண்டுமானாலும் கண்டமணி அணியலாம்.
ருத்திராட்சத்தை மாலையாக அணியும் போது தான் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் இருக்கின்றன
ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி மருத்துவ குணங்களும்,ஆன்மீக குணங்களும் உள்ளன. பல்வேறு நூல்கள் இதைப் பற்றி கூறுகின்றன. எத்தனை முகம் உள்ளதோ அதே போல் அந்த மணிகளுக்குள்ளும் அத்தனை அறைகள் இருக்கும். ஒவ்வொரு அறையிலும் ஒரு கொட்டை இருக்கும் உதாரணமாக 5முகம் ருத்ராட்சம் என்றால் அந்த 5 முக ருத்ராட்ச மணிக்குள் 5 அறைகளும் 5 கொட்டைகளும் இருக்கும் . ருத்ராட்ச மணிகள் ஒரு முகம் முதல் 21 முகம் வரை கிடைக்கும்
ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை
அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உயர்வோம்.
ஐந்து முகம் (பஞ்சமுகி) எல்லோருக்கும் பொருந்தும், நல்லதும் கூட - ஆண், பெண், குழந்தைகள் உட்பட. பொதுவான நன்மை, உடல் நலம், விடுதலை ஆகியவை கிடைக்கும்.
இரத்தக்கொதிப்பை சீராக்கும், நரம்புகளை அமைதிப்படுத்தும், நரம்பு மண்டலத்தில் ஒரு வித அமைதியையும், சுறுசுறுப்பையும் அளிக்கும்..
ருத்ராட்சம் முகங்களை பொறுத்து வகை படுத்தப்படும் அவை..Click Below Link
ருத்ராட்சம் வகைகளும் பயன்களும்
நன்றி 🙏
தொகுப்பு : SSR சிவராஜ்
வெளியீடு : செந்தமிழ் தென்றல்